Sphenoptera indica
பூச்சி
பொன்வண்டு மண்ணின் மேற்பரப்பிற்கு அருகில் இருக்கும் செடிகளின் தண்டுப்பகுதிகளில் குழியினை ஏற்படுத்தி, வேர்கள் மற்றும் தண்டுகளின் உட்புற திசுக்களில் இருந்து ஊட்டம் பெறுகின்றன. இதனால் செடிகளின் மேற்பகுதிகளுக்கு செல்லும் தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தடைபடுகின்றன. இதனால் செடிகள் வாடி, இறந்துவிடக்கூடும். பொன் வண்டுகளின் உண்ணும் செயல்பாடு, மற்றும் அவை மண்ணில் பரவியிருக்கும் விதம் காரணமாக பாதிக்கப்பட்ட வயல்களில் பொதுவாக வாடிய மற்றும் இறந்த தாவரங்களின் திட்டுக்கள் காணப்படும். செடிகளை மண்ணில் இருந்து பிடுங்கி பார்க்கும்போது ஓட்டையான தண்டுகளில் பொன்வண்டுகளை காணலாம்.
பொன்வண்டுகள் மற்றும் அவற்றின் முட்டைகளின் மீது ப்ராகோனிட்ஸ் மற்றும் ட்ரைகோகிராமடிட்ஸ் ஒட்டுண்ணி குளவிகளை ஒட்டுண்ணிகளாக பயன்படுத்தலாம். தட்டாம்பூச்சிகள் இயற்கையாகவே பொன்வண்டுகளுக்கு அமைந்த இயற்கை எதிரிகள். நியூக்ளியர் பாலிஹெட்ரோஸிஸ் வைரஸ் அல்லது பச்சை மஸ்கர்டைன் பூஞ்சைகள் அடிப்படையிலான இயற்கை பூச்சிக்கொல்லிகளை பொன்வண்டுகளுக்கு எதிராக பயன்படுத்தலாம்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பூச்சிக்கொல்லிகளின் குறுமணிகளை நடவுசெய்த வரிசைகளுக்கு இடையே பயன்படுத்துதல் பொன்வண்டுகளின் எண்ணிக்கையை திறன்மிக்க வகையில் கட்டுப்படுத்தும். தாவர வளர்ச்சியின் பிந்தைய நிலையில் குலோர்பைரிபாஸ் பயன்படுத்துதல் கடுமையான சேதங்களை தவிர்க்கும்.
முதிர்ந்த உயிர்கள் பொன் போன்ற பளபளப்புடன் கூடிய அடர் நிறத்தில், 10 மிமீ நீளம் மற்றும் 3 மிமீ அகலத்துடன் காணப்படும். முக்கியத் தண்டின் அடிப்பகுதியில் பெண் உயிர்கள் தனித்தனியாக முட்டைகளை இடுகின்றன. வளர்ச்சி நிலையினைப் பொறுத்து உயிர்களின் நிறம் மற்றும் அளவு மாறுபடும். வழக்கமாக அவற்றின் நிறம் பழுப்பு மற்றும் மஞ்சள் இதற்கிடையில் அமையும். வெளிப்படையில் கால்களற்ற நிலையில்கூட இவற்றின் நீளம் 20 மிமீ ஆக இருக்கும். நீளமான பின்புறத்துடன் கூடிய வயிற்றுப்பகுதி, உருண்டையான தலை மற்றும் மார்புப் பகுதியின் மூலம் இவற்றினை எளிதில் அடையாளம் காண இயலும். வேர்க்கடலை பயிர்களின் பிந்தைய வளர்ச்சி நிலைகளில், கிட்டத்தட்ட நடவு செய்த 50 நாட்களுக்கு பிறகு, இவை பயிர்களை தாக்கும். பொன்வண்டு, மண்ணின் மேற்பரப்பிற்கு அருகில் இருக்கும் செடிகளின் தண்டுப்பகுதிகளில் குழியினை ஏற்படுத்தி, வேர்கள் மற்றும் தண்டுகளின் உட்புற திசுக்களில் இருந்து ஊட்டம்பெறும். இதனால் செடிகளின் மேற்பகுதிகளுக்கு செல்லும் தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தடைபடும்.