மற்றவை

வெள்ளை நிற வண்டினப் புழு

Scarabaeidae sp.

பூச்சி

சுருக்கமாக

  • கவிகைகள் வாடுதல் மற்றும் மஞ்சள் நிறமாகுதல்.
  • தாவரங்கள் இறந்து போவதனால், அதனை மண்ணிலிருந்து எளிதாக பிடுங்க கூடியவையாக இருக்கும்.
  • குறைவான விளைச்சல்.
  • முதிர்ந்த பூச்சிகள், சுமார் 20 மிமீ நீளத்தில், 8 மிமீ அகலத்தில் கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்


மற்றவை

அறிகுறிகள்

இளம் உயிரிகள் மற்றும் முதிர்ந்த உயிரிகள் இரண்டுமே பயிர்களில் சேதத்தினை ஏற்படுத்தவல்லது. இளம் உயிரிகள் வேர்களை உண்டு, காய்களை சேதப்படுத்தும். முக்கியமாக சிறு வேர்கள் மற்றும் முடிச்சுக்களில் இருந்து ஊட்டம் பெறுகின்றன. பாதிக்கப்பட்ட செடிகளில் மஞ்சள் வண்ண நிறமும், காய்ந்த தோற்றமும் காணப்படும். திடீரென காய்ந்த தோற்றம் காணப்படுவது முதன்மையான அறிகுறியாகும். முதிர்ந்த பூச்சிகளால் தாக்கப்படும் செடிகளில் இலை உதிர்தல் காணப்படும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சோலனம் சுரட்டென்ஸ் அல்லது வேப்ப இலைகளின் சாற்றை விதை சிகிச்சையாகப் பயன்படுத்தவும். ஆரம்ப பருவத்தில் ஒரு ஹெக்டேருக்கு 1.5 பில்லியன் நூற்புபுழுக்கள் என்ற அளவில் நன்மை பயக்கும் நூற்புழுக்களின் திரவத்தை (எடுத்துக்காட்டாக ஹெட்டெரோஹாப்டிடிஸ் எஸ்பிபி.) தெளிக்கவும். நியூக்ளியர் பாலிஹெட்ரோசிஸ் வைரஸை அடிப்படையாகக் கொண்ட உயிரி-பூச்சிக்கொல்லிகள் அல்லது பச்சை மஸ்கார்டைன் எனப்படும் பூஞ்சையும் நல்ல பலனளிக்கும். விதைப்பதற்கு முன் தானியங்களை மண்ணெண்ணெய் (75 கிலோ / விதைகளுக்கு ஒரு லிட்டர்) கொண்டு சிகிச்சையளிக்கவும். பிராக்கோனிட்கள், டிராகன் ஈக்கள், ட்ரைக்கோகிராமடிட்கள் ஆகிய குடும்பத்தை சார்ந்த பூச்சிகளைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். மண்ணில் இருந்து வெளிப்படும் இவை அருகிலுள்ள சில பசுமையான இலைத் தொகுதிகளை உண்ணுகின்றன. உறுதியான பூச்சிக்கொல்லிகளை இரவில் தெளிப்பதன் மூலம் முட்டையிடுவதற்கு முன் முதிர்ந்த உயிரிகளின் எண்ணிக்கையை குறைக்க உதவும். குளோர்பைரிபோஸ் 20% இசி @ 1125 மில்லி / ஹெக்டேர் என்பவற்றை இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தலாம். இந்த பூச்சிகளின் வளர்ச்சியைத் தடுக்க குளோர்பைரிஃபோஸ் @ 6.5 மிலி / கிலோ விதை உடனான விதை சிகிச்சையும் ஒரு சிறந்த வழிமுறையாகும்.

இது எதனால் ஏற்படுகிறது

முதிர்ந்த பூச்சிகள் அடர் பழுப்பு நிறத்தில், 20 மிமீ நீளமும், 8 மிமீ அகலமும் கொண்டிருக்கும். மழை பெய்த மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் மண்ணிலிருந்து கிளம்பும் இவை குறைந்த தூரத்திற்கு பறந்து சென்று அருகிலுள்ள செடிகளில் இருந்து ஊட்டம் பெறுகின்றன. ஊட்டம் பெற்ற பின்பு மீண்டும் மண்ணிற்குள் சென்று மறைந்துகொள்ளும், அத்துடன் மண்ணில் முட்டைகளையும் இடுகின்றன. மண்ணில் 5-8 செமீ ஆழத்தில் 20-80 வெள்ளை நிற முட்டைகளை பெண் பூச்சிகள் இடுகின்றன. இளம் உயிர்கள் வெளி மஞ்சள் நிறத்தில், 5 மிமீ நீளத்தில் இருக்கும். வளர்ந்த உயிர்கள் தடித்த பலமான கீழ்த்தாடைப் பற்களைக் கொண்டிருக்கும். C வடிவில் இருக்கும் இந்த உயிர்களின் உடல் சதைப்பிடிப்புடன் வெள்ளை நிறத்திலும், இவற்றின் தலை மஞ்சள் நிறத்திலும் இருக்கும். ஆரம்பத்தில் சில வாரங்களுக்கு கரிம பொருட்களை உண்ணும், பின்னர் சிறு வேர்கள் மற்றும் காய்களிடம் இருந்து ஊட்டம் பெறுகின்றன. வேர்க்கடலையினைத் தவிர, கரும்பு, மிளகாய், சோளம், மக்காச் சோளம், துவரம் மற்றும் திணைப் பயிர்களின் வேர்களையும் இவை உண்ணுகின்றன.


தடுப்பு முறைகள்

  • சந்தையில் கிடைக்கக் கூடிய தாக்குப் பிடிக்கும் தன்மை கொண்ட செடிகளை பயிரிடவும்.
  • வண்டினப் புழுவின் அதிக தாக்குதலை குறைக்க, முன்கூட்டியே விதைக்கவும்.
  • வேர்க்கடலை பயிர்களுக்கு இடையிடையே சோளம், மக்காச் சோளம் அல்லது வெங்காயம் போன்ற கவர்ச்சி பயிர்களை பயிரிடவும்.
  • மழை துவங்கும் காலத்தில் ஒளி பொறிகளை நிறுவி, ஒரு நாளைக்கு எத்தனை வண்டுகள் மொய்க்கிறது என்பதனை கண்காணிக்கவும்.
  • காலைப் பொழுதில் நிலத்தை சுற்றியுள்ள வண்டினப்புழுக்களை சேகரித்து அவற்றை அழித்து விடவும்.
  • பச்சை உரங்களான இத்தாலியன் புல் வகைகள் அல்லது பருப்பு வகை பயிர்கள் போன்ற பச்சை உரங்களை கொண்டு இயற்கையாக பூச்சிகளுக்கு அமைந்த எதிரிகளைப் பாதுக்காக்கவும்.
  • வேர்களுக்கு ஊட்டம் கொடுக்கவும், வண்டினப் புழுவின் ஆதிக்கத்தினைக் கட்டுப்படுத்தவும் பொட்டாசியத்தை அடிப்படை உரங்களாக பயன்படுத்தவும்.
  • பயிரிடுவதற்கு முன்பு பருவக்காலங்களில் நிலத்தை ஆழமாக உழுவவும்.
  • நிலத்தினை இரு ஆண்டுகளுக்கு தரிசாக விடவும்.
  • நெல் அரிசி போன்ற புரவலன் அல்லாத பயிர்களை கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க