நிலக்கடலை

சிவப்பு முடி கம்பளிப்பூச்சி

Amsacta albistriga

பூச்சி

சுருக்கமாக

  • இளம் உயிரிகள் செடிகளின் மொட்டுக்கள், இலைகள், தண்டுகள் மற்றும் பிற பகுதிகளில் இருந்து ஊட்டம் பெறும்.
  • இலைகள் அசாதாரண தோற்றத்துடன் மாற்றம் பெற்று இறுதியில் உதிரும் நிலைக்கு வரும்.
  • இலை உதிர்தல் காரணமாக செடிகளில் பயிர்ப் பயனாக்கத்தில் பெரும் இழப்பு ஏற்படும்.


நிலக்கடலை

அறிகுறிகள்

மழைக் காலத்தில் அதிகப்படியான இளம் கம்பளிப் பூச்சிகள் காணப்படும் மற்றும் இலையின் அடிப்புறத்தில் செங்குத்துச் சரிவுபோன்று காணப்படும். முதிர்ச்சி பெற்ற கம்பளிப் பூச்சிகள் தனக்கான ஊட்டச்சத்தினை பூக்கள், மொட்டுக்கள் மற்றும் இலைகள் உள்ளிட்ட அனைத்து தாவர பாகங்களில் இருந்தும் பெறுகின்றன. கடினமான திசுக்களைக் கொண்ட மைய நரம்புகள், நரம்புகள் மற்றும் காம்புப் பகுதிகள் மட்டுமே பாதிப்பில் இருந்து தப்பிக்கின்றன. சிவப்பு முடி கம்பளிபூச்சி கூட்டம் கூட்டமாக ஓர் நிலத்தில் இருந்து பிற நிலத்திற்கு செல்கின்றன. இதன் காரணமாக அடிக்கடி இலை உதிர்தல் மற்றும் பயிர்ப் பயனாக்கத்தில் குறைவு போன்றவை நிலம் முழுவதும் ஏற்படுகிறது. பயன்படுத்தப்படாமல் இருக்கும் மண்ணில் முழுவதுமாக வளர்ந்த இளம் உயிரிகள் கூட்டுப்புழுக்களாக மாற , மண்ணில் வளைகளை உருவாக்குகின்றன.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நுண்ணுயிர் முறைகளில் டிரைகோக்ராமா ஒட்டுண்ணி குளவிகள் போன்றவற்றினை வெளிப்படுத்துவதன் மூலம் நோயினைக் கட்டுப்படுத்தலாம். இந்த ஒட்டுண்ணிகள், முட்டைகள் மற்றும் இளம் உயிரிகளாக இருக்கும் சிவப்பு முடி கம்பளிப் பூச்சிகளின் மீது செயல்படும். அணு பாலிஹெட்ரோஸிஸ் வைரஸ் அல்லது பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் போன்றவற்றின் அடிப்படையிலான உயிரியல் பூச்சிக்கொல்லிகளை ஆரம்ப காலத்திலேயே தெளிப்பதன் மூலம் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

சிவப்பு முடி கம்பளிப்பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்க, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உயிரியல் சிகிச்சைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பொருளாதார வகையில் வேதியியல் முறைப்படி சிகிச்சையளிப்பது பொருத்தமாக இருக்குமெனில் (100 மீட்டர் நீளத்திற்கு எட்டு முட்டைக் குழுக்கள் அல்லது 10% இலை பாதிப்பு இருப்பின்) பூச்சிக்கொல்லிகளை தூவுவதன் மூலம் இளம் உயிரிகளைக் கட்டுப்படுத்த முடியும். முழுவதும் வளர்ந்த பூச்சிகளை கட்டுப்படுத்த பிற பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்படலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

பருவ மழைக்கு அடுத்தபடியாக முதிர்ச்சி பெற்ற விட்டிற்பூச்சிகள் வெளிவரத் தொடங்குகின்றன. இவை இளம் பழுப்பு நிறம் கொண்ட முன் இறக்கைகளையும், மேற்புறத்தில் வெள்ளை நிறக் கோடுகளையும் கொண்டுள்ளன. அத்துடன் மஞ்சள் நிற கோடுகள் இதன் முன்புற விளிம்பில் இருக்கும். இதன் பின்புற இறக்கைகள் வெள்ளை நிறத்தில் சிறிய கருப்பு நிற புள்ளிகளை கொண்டிருக்கும். பெண் பூச்சிகள், இலைகளின் கீழ்ப்புறத்தில் அல்லது மண் சிதைவுகளில் கொத்தாக 1000 பாலாடை போன்ற மஞ்சள் நிற முட்டைகளை இடுகின்றன. இளம் பழுப்பு நிறம் கொண்ட இளம் உயிரிகள் முடிகளற்றவை, அத்துடன் அவை இலைகளில் இருந்து ஊட்டம் பெறுபவை. முதிர்ந்த உயிரிகள் செம்பழுப்புடன் கூடிய கருப்பு நிறத்தில் பக்கவாட்டினைக் கொண்டிருக்கும்,மேலும் அவற்றின் உடலில் நீளமான சிவந்த முடிகளை கொண்டிருக்கும். இவை மிக விரைவாக செயல்படுபவை மற்றும் அழிக்கும் திறனுடையவை. இவை மரங்கள், புதர்கள் அல்லது நிழலான ஓரங்களுக்கு அடியில் உள்ள மணலில் 10 முதல் 20 செமீ வரையிலான வளையினை உருவாக்கி, இளம் உயிரிகளாக வளர்ந்து முதிர்ச்சியடைந்த உயிரிகளாகும் வரை, சுமார் 10 மாதங்களுக்கு இவை அங்கேயே வளரும்.


தடுப்பு முறைகள்

  • பூச்சிகள் பெருக்கத்தினைத் தவிர்க்க விதைத்தலை முன்னரே முடிக்க வேண்டும்.
  • 30 செமீ ஆழம், 25 செமீ அகலத்துடன் குழி வெட்டுவதன் மூலம் இளம் உயிரிகளின் இடம்பெயருதலைத் தவிர்க்க இயலும்.
  • ஆமணக்கு மூலம் ஊடுபயிரிடுதலினை ஒவ்வொரு ஆறு வரிசைகள் கொண்ட வேர்க்கடலைச் செடிகளுக்கு நடுவே பயிரிடுதல் மூலம் நோய் பாதிப்பினைத் தடுக்க இயலும்.
  • ஒளிப்பொறிகளை அதிகளவிலான விட்டிற்பூச்சிகளை பிடிக்க அல்லது கண்காணிக்க பயன்படுத்தவும்.
  • சோளம், திணை அல்லது மக்காச் சோளம் போன்ற பயிர்களைக் கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.
  • நீண்ட இடைக்கால வறட்சியினைத் தவிர்க்கவும், அறுவடைக்கு முந்தைய நோய் தொற்றினைத் தடுக்கவும் நீர்ப்பாசன முறையினைக் கையாளவும்.
  • மாற்று புரவலன்கள் மற்றும் களைகளைத் தேடிப்பார்த்து நீக்கவும்.
  • ஊடுபயிர்கள், பயிர்கள் ஆகியவற்றின் இலைகளில் கூடிவாழும் இளம் உயிரிகள் மற்றும் முட்டைகள் இருக்கிறதா என்பதைச் சரிபார்த்து அவற்றினை சேகரித்து அழிக்கவும்.
  • ஆழமாக ஏர் உழுதல் மூலம் கூட்டுப்புழுக்களை சுற்றுசூழல் மற்றும் பிற இரைப்பிடித்துண்ணிகளுக்கு வெளிக்கொணருதல் வேண்டும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க