அரிசி

பச்சைநிற நெல் தத்துப்பூச்சி

Nephotettix spp.

பூச்சி

சுருக்கமாக

  • பச்சைத் தத்துப்பூச்சிகள் நெல் வயல்களை பொதுவாக பாதிக்கும் பூச்சியினங்கள் ஆகும்.
  • மழைக்காலம் மற்றும் நீர்ப்பாசனம் செய்யப்பட்ட ஈரப்பதமான சூழ்நிலைகளில் இவை செழித்து வளருகின்றன மற்றும் துங்குரோ எனும் நோயினையும் பரப்புகின்றன.
  • இலை விளிம்புகளில் நிறமாற்றம், பக்கக் கன்றுகளின் எண்ணிக்கை குறைதல் மற்றும் பயிர்களின் வளர்ச்சி குன்றுதல் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகள் ஆகும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

பச்சைத் தத்துப்பூச்சிகள் நெல் வயல்களை பொதுவாக பாதிக்கும் பூச்சியினங்கள் ஆகும் மற்றும் துங்குரோ எனும் வைரல் நோயினையும் பரப்புகின்றன. இந்த வைரஸ் இலை விளிம்புகளில் நிறமாற்றம், பக்கக் கன்றுகளின் எண்ணிக்கை குறைதல், குறைந்த வீரியத்துடன் பயிர்களின் வளர்ச்சிக் குன்றுதல் மற்றும் மோசமான சூழலில் பயிர்கள் வாடிப்போகுதல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். நைட்ரஜன் குறைப்பாடு அல்லது இரும்புச் சத்து நச்சுத்தன்மையிலிருந்து துங்குரோ நோய் பாதிப்பு ஏற்பட்ட பயிர்களின் அறிகுறிகளைக் கூறுவதற்காக, பூச்சிகளில் ஏற்பட்டுள்ளதைச் சரிபார்க்கவும்: வெள்ளை அல்லது வெளிறிய மஞ்சள் நிற முட்டைகள் இலை உறைகள் அல்லது மைய நரம்புகளில் காணப்படும்; மஞ்சள் அல்லது வெளிறிய பச்சை நிற இளம் பூச்சிகள் கருப்பு நிறக் குறிகளுடன் அல்லது அவை இல்லாமல் இருக்கும்; வெளிறிய பச்சை நிற முதிர்ந்த பூச்சிகள் மூலைவிட்ட இயக்கங்களைத் தன்மையாகக் கொண்டு கருப்பு நிறப் புள்ளிகளுடன் அல்லது புள்ளிகளின்றி காணப்படும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சிறிய வண்டுகள் (முட்டை ஒட்டுண்ணி வகை), மைரிட் பூச்சி; ஸ்ட்ரெப்ஸிபெடேரன்ஸ், பிபுன்குலிட் ஈக்கள் மற்றும் நூற்புழுக்களை (இளம் உயிரிகள் மற்றும் முதிர்ந்த பூச்சிகளின் ஒட்டுண்ணி வகை), நீர்வாழ் வெலிட் வண்டுகள், நாபிட் வண்டுகள், எம்பிட் ஈக்கள், டாம்செல்ஈக்கள், தட்டான் ஈக்கள் மற்றும் சிலந்திகள் அல்லது பூஞ்சை நோய்க்காரணிகள் போன்றவை உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகளுள் அடங்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். இந்த பூச்சிகளுக்கு எதிராக பலவகையான பூச்சிக்கொல்லிகள் சந்தைகளில் கிடைக்கின்றன. உங்கள் உள்ளூர் சில்லறை விற்பனையாளருடன் பரவலான நிலைமைகளில் எது பொருந்தக்கூடிய சிறந்த தீர்வைத்தரும் எனச்சரிபார்க்கவும்.

இது எதனால் ஏற்படுகிறது

பச்சைத் தத்துப்பூச்சிகள் மழைக்கால விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம் செய்யப்பட்ட ஈரப்பதமான சூழ்நிலைகளில் பொதுவாகப் பரவும் பூச்சிகள் ஆகும். உலர்ந்த மண்ணில் வளரும் அரிசிகளில் இவை அதிகம் பரவுவதில்லை. இளம் பூச்சிகள் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் இரண்டுமே இலை உறைகள் மற்றும் மைய இலைகளிடம் இருந்து ஊட்டம் பெறுவதைவிட இலைகளின் பக்கவாட்டு கூர்முனைப் பகுதிகளின் மேற்புறத்தில் இருந்து ஊட்டம் பெறுகின்றன. அதிகப்படியான நைட்ரஜன் உரங்களைப் பெற்றுள்ள பயிர்களை அவை விருப்பமாக தேர்வு செய்கின்றன. வழக்கமாக வைரஸை பரப்புவதைத் தவிர பிற சமயங்களில் இவை பூச்சிகளின் தேர்வாக இருப்பதில்லை.


தடுப்பு முறைகள்

  • பூச்சிகளை எதிர்க்கும் பயிர் வகை மற்றும் துங்குரோ நோயினைத் தடுக்கும் பயிர் வகைகளைப் பயன்படுத்தவும் (உதாரணமாக: CR-1009).
  • நெற்பயிர்களின் எண்ணிக்கையினை வருடத்திற்கு இரண்டாக குறைக்கவும்.
  • பண்ணைகள் முழுவதிலும் ஒரே காலகட்டத்தில் பயிர்களை வளர்க்கவும்.
  • கொடுக்கப்பட்ட நடவு காலத்திற்குள் ஆரம்பத்திலேயே பயிரிடவும், முக்கியமாக வறண்ட காலங்களில் இதனைப் பின்பற்றவும்.
  • வறண்ட காலங்களில், நெற்பயிர் அல்லாத பிறவகை பயிர்களுடன் பயிர் சுழற்சியினை மேற்கொள்ளவும்.
  • எண்ணிக்கையை காட்ட அல்லது குறைக்க ஒளிப்பொறிகளைப் பயன்படுத்தலாம்.
  • பரிந்துரைக்கப்பட்ட அளவு நைட்ரஜனை பயன்படுத்தவும்.
  • மாற்று புரவலன்களை குறைக்க வயலில் மற்றும் வயல் ஓரங்களில் உள்ள களைகளைக் கட்டுப்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க