அரிசி

ஆசியா நெற்பயிரின் ஆனைக் கொம்பன் ஈ

Orseolia oryzae

பூச்சி

சுருக்கமாக

  • கிளைத்தண்டுகளின் அடிப்பகுதியில் குழாய் வடிவ கட்டமைப்புகள்.
  • வெள்ளி போன்ற இலை உறைகள்.
  • தானியங்கள் உற்பத்தி செய்ய தவறுதல்.
  • வாடிய மற்றும் சுருண்ட இலைகள்.
  • குன்றிய வளர்ச்சி.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

ஆனைக் கொம்பன் ஈ பக்கக் கன்றுகளின் அடிப்பகுதியில் குழாய் போன்ற அமைப்புகளை உருவாக்கும், இதனால் நீண்ட வெள்ளி போன்ற இலை உறைகள் உருவாகும் (1 செமீ அகலம் மற்றும் 10-30 செமீ நீளம் உடையவை) இதற்கு வெங்காய இலை அல்லது வெள்ளித் தளிர் என்று பெயர். பாதிக்கப்பட்ட பக்கக்கன்றுகளில் இலைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் மற்றும் பயிர்கள் கதிர்களை உற்பத்தி செய்யாது. பயிர்களின் வளர்ச்சி குன்றும், இலைகள் உருமாற்றம் பெறும், தளர்வுறும் மற்றும் சுருண்ட இலைகளைக் கொண்டிருக்கும், இவை அனைத்தும் வறட்சி, பொட்டாசியம் சத்துக் குறைபாடு, உப்புத்தன்மை மற்றும் நெல் பேன்கள் போன்றவற்றினால் பயிர்களில் ஏற்படும் அறிகுறிகள் . பூச்சிகளின் தாக்கத்தினை உறுதிசெய்ய பூச்சிகள் இருக்கிறதா எனச் சோதிக்கவும். முக்கியமாக நீண்ட குழாய் போன்ற முட்டைகள் மற்றும் புழு போன்ற இளம் உயிரிகள் வளரும் மொட்டுக்களில் இருந்து ஊட்டம் பெறுகிறதா எனப் பார்க்கவும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ப்ளாடிகாஸ்டெரிட், எயூபெல்மிட் மற்றும் டெரோமாலிட் வண்டுகள் (இளம் பூச்சிகளை உண்பவை) , பைடோசெய்ட் பூச்சிகள் (முட்டைகளை உண்பவை), சிலந்திகள் (முதிர்ந்த பூச்சிகளை உண்பவை) போன்றவைககளை ஒட்டுண்ணிகளாக்கி வெற்றிகரமாக பயன்படுத்தலாம். பூச்சிகளைக் கவரும் மிகவும் அதிகம் பூக்கும் தாவரங்களை நெல் வயலை சுற்றிலும் நடவு செய்வதும் நோய்ப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். இப்பூச்சிகள் வளரும் சமயத்தில் சரியான நேரத்தில் பூச்சிக்கொல்லிகளைத் தெளித்து அவற்றினை கட்டுப்படுத்தலாம். குளோர்பைரிபோஸ் சார்ந்த தயாரிப்புகளை ஆனைக் கொம்பன் ஈ பூச்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்தி அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

பயிர்களின் பக்கக் கன்றுகள் வளரும் நிலையில், மழைக்கால விவசாயம் போன்ற ஈரமான சூழல் அல்லது நீர்ப்பாசனம் செய்யப்பட்ட நிலம் போன்ற சூழ்நிலைகளில் ஆனைக் கொம்பன் ஈ பயிர்களைத் தாக்கும். இது மேட்டு நிலம் மற்றும் ஆழமான நீரில் பயிரப்படும் அரிசியில் மிகவும் பொதுவாக காணப்படும். கூட்டுப்புழுக்கள் நிலையில் பூச்சிகள் செயலற்றுக் காணப்படும், ஆனால் மழைக்குப் பிறகு மொட்டுகள் வளர ஆரம்பிக்கும் போது இவை செயல்படத் தொடங்குகின்றன. மேக மூட்டத்துடன் இருக்கும் வானிலை அல்லது மழைக்காலம், பக்கக் கன்றுகள் கொண்ட வகைகளின் சாகுபடி, தீவிர மேலாண்மைப் பயிற்சிகள் போன்றவை நோய்க்காரணிகளின் எண்ணிக்கைக்கு ஏதுவான சூழ்நிலைகள் ஆகும்.


தடுப்பு முறைகள்

  • உள்ளூரில் கிடைக்கும் எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர் வகைகளை உபயோகிக்கவும்.
  • மழைக் காலங்களின் தொடக்கத்திற்கு முன்னரே பயிரிடவும்.
  • நெருக்கமாக பயிரிடுவதைத் தவிர்க்கவும் அல்லது தளர்வான விதை விகிதத்தினைப் பயன்படுத்தவும்.
  • நெல் வயலினைச் சுற்றி பூச்சிகளைக் கவர்ந்திழுக்க பொறிகள் கொண்ட தாவரங்களை நடவு செய்யவும்.
  • பருவம் முடிந்தபின் அனைத்துப் பயிர்களின் புரவலன்களை நிலத்தினைச் சுற்றி அகற்றிவிடவும்.
  • பொட்டாஸ் மற்றும் நைட்ரஜன் சத்துக்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டும் பயன்படுத்தவும்.
  • அவற்றிற்கு அருகே ஒளிப்பொறிகள், பசை அல்லது எண்ணெய் போன்ற ஒட்டும் பொருட்களைப் பயன்படுத்தி பூச்சிகளை பிடிக்கலாம்.
  • அறுவடை முடிந்த பின்னர் எஞ்சிய பயிர்களின் பாகங்களை அழித்து உழுது புதைத்துவிடவும்.
  • பருவகாலம் இல்லாத வேளைகளில் தரிசு நிலமாக நிலத்தினை சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு வைத்திருக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க