அரிசி

இலைச் சுருட்டுப் புழு

Cnaphalocrocis medinalis

பூச்சி

சுருக்கமாக

  • கம்பளிப்பூச்சிகளைச் சுற்றி மடிந்த அரிசி இலைகள்.
  • இலைப்பரப்பின் மீது நீளமான வெண்ணிற, வெளிப்படையான கோடுகள்.
  • இலை நுனிகளில் வட்டு வடிவ முட்டைகள்.
  • இறக்கைகளில் பழுப்பு நிற குறுக்கும் நெறுக்குமான கோடுகள் கொண்ட அந்துப்பூச்சிகள்.

இதிலும் கூடக் காணப்படும்


அரிசி

அறிகுறிகள்

இவை இலைமடிப்பான் எனவும் அழைக்கப்படுகிறது. முதிர்ந்த பூச்சிகள் உங்கள் விரல்களின் நகங்கள் அளவிற்கு நீளமாகவும், பழுப்பு நிறக் குறுக்குக் கோடுகளை இறக்கைகளில் கொண்டதாகவும் இருக்கும். பொதுவாக இலையின் நுனியில் முட்டைகள் இடப்படும். நெல்லின் இலையினை கம்பளிப்பூச்சிகள் தங்களைச் சுற்றி சுற்றிக்கொள்ளும் மற்றும் இலை ஓரங்களைப் பட்டு இழைகளால் சேர்த்துப் பிடித்துக்கொள்ளும். பின்னர் அவை அந்த குழாய் மடிப்பு இலைக்குள், உட்புறமாக ஊட்டம் பெற்று, நீண்ட வெண்மையான, வெளிப்படையான கோடுகளை இலையின் கூர்பகுதியில் ஏற்படுத்தும். சில சமயங்களில் விளிம்பு முதல் அடிப்பகுதி வரை, இலைகள் சுருண்டிருக்கும். வட்டு போன்ற வடிவில் முட்டைகள் தனித்தனியாக இருப்பது அல்லது மலப் பொருட்கள் இருப்பதும், இவை பரவியதற்கான அறிகுறிகளாகும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பயிரிட்ட 15 நாட்களுக்குப் பின்னர் முட்டைகளில் ஒட்டுண்ணியாகும் டிரைகோக்ரம்மா சிலோனிஸ் (100,000 முதிர் பூச்சிகள்/ ஹெக்டேர்) ஐந்து முதல் ஆறு முறை வெளிப்படுத்துவது சிறப்பான பலனைத் தரும். அத்துடன் பொருளாதார ரீதியாகவும் இம்முறை உகந்தது. இயற்கையாக அமைந்த எதிரிகளான சிலந்திகள், இரைப்பிடித்துண்ணி வண்டுகள், தவளைகள் மற்றும் தட்டான் பூச்சிகள் சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது. நோய்க்கிருமி பூஞ்சை அல்லது பாக்டீரியா மற்றும் சில வைரஸ்கள் சிறந்த அளவில் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகிறது. வேப்பிலைகளை அங்கும் இங்குமாக நிலத்தில் போட்டு முதிர்ந்த பூச்சிகள் முட்டையிடுவதைத் தவிர்க்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பக்கக் கன்றுகள் வளரும் நிலைகளில் நோய்ப் பாதிப்பு அதிகமிருந்தால் (>50%), ஃப்ளூபென்டைமைட்டினை 0.1 மிலி அல்லது குளோரான்டிரானிலிப்ரோலை ஒரு லிட்டர் நீருக்கு 0.3 மிலி என்ற அளவில் தெளிக்கலாம். குளோர்பைரிபோஸ், குளோரான்டிரினிலிப்ரோல், இன்டோக்ஸாகார்ப், அஸாடிராஸ்டின், காமா அல்லது லாம்ப்டா-சைஹலோத்ரின் போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்ட பிற பூச்சிக்கொல்லிகளும் நோய்த் தாக்குதலைக் குறைக்க பயன்படும், முக்கியமாக நோயின் தாக்கம் அதிகமிருக்கும்போது இவை சிறந்த பயனளிக்கும். பிற பூச்சிக்கொல்லிகளான ஆல்பா-சைபெர்மெத்ரின், அபமெக்டின் 2% இளம் உயிரிகளைக் கொல்ல பயன்படும். இரசாயன பொருட்களை கவனமுடன் பயன்படுத்தவும், இவற்றினால் பூச்சிகள் மறுமுறை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

இது எதனால் ஏற்படுகிறது

இலைச் சுருட்டுப் புழு நெல்லின் அனைத்துச் சூழ்நிலைகளிலும் பாதிக்கவல்லது மற்றும் முக்கியமாக மழைக்காலங்களில் அதிகப்படியான எண்ணிக்கையில் பரவக்கூடியது. அதிக ஈரப்பதம், நிழலான பகுதிகள் வயலில் அமைந்திருப்பது மற்றும் வயலின் ஓரங்கள் மற்றும் வயலில் புல்வகைக் களைகள் வளர்ந்திருப்பது போன்றவை பூச்சிகளின் வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும். பல்வகை நெற்பயிர்களை பயிரிடல், நீர்ப்பாசன அமைப்புடன் விரிவாக்கப்பட்ட வயல்பகுதிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளினால் தூண்டப்பட்ட எழுச்சித் தன்மை போன்றவை பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்க முக்கியமான காரணிகளாகும். அதிகப்படியான அளவில் உரங்களைப் பயன்படுத்துவதும், பூச்சியின் விரைவான பெருக்கத்தை ஊக்குவிக்கிறது. வெப்ப மண்டல வயல் பகுதிகளில், இந்த பூச்சிகள் ஆண்டு முழுவதும் செயல்பாட்டில் இருக்கும், மிதமான வெப்பமுடைய நாடுகளில் இந்த பூச்சிகள் மே முதல் அக்டோபர் வரை செயல்பாட்டில் இருக்கும். 25-29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், 80% ஒப்பு ஈரப்பதமும் இருப்பது இவற்றிற்கு ஏதுவான சூழ்நிலையாகும். இவற்றினால், இளம் மற்றும் பச்சை நெற்பயிர்கள் அதிகப்படியாகப் பாதிக்கப்படுகின்றன.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர்களை பயிரிட்டு இவற்றினைத் தடுக்கலாம்.
  • பூச்சிகளின் பரவல் குறித்து நிலத்தினைக் கண்காணிக்கவும்.
  • நடவு செய்வதில், விதைத்தல் வீதத்தினைக் குறைக்கவும்.
  • பருவ காலம் முழுவதிலும் அரிசி பயிர்களுக்கு போதுமான அளவு நீர் கிடைப்பதை உறுதி செய்யவும்.
  • நைட்ரஜன் பயன்பாட்டினை பிரித்து அளிப்பதன் மூலமாக சமச்சீர் உரமளித்தலை திட்டமிடவும்.
  • ஒளிரக்கூடிய வகையிலான அல்லது ஒட்டக்கூடிய வகையிலான பொறிகளைப் பயன்படுத்தி முதிர்ந்த பூச்சிகளைக் கவர்ந்து, அவற்றினை அழிக்கலாம்.
  • வயலின் ஓரங்கள் மற்றும் வயலில் புல்வகைக் களைகளை நீக்கவும்.
  • பூச்சிகளுக்கு எதிராக முள் கட்டைகளைப் பயன்படுத்தவும்.
  • அறுவடை செய்யப்பட்ட பிறகு மீதமிருக்கும் பயிரிலிருந்து வளர்ந்து வரும் புதிய தளிர்களைத் தவிர்க்கவும்.
  • இவற்றினை அடுத்த பருவத்திற்கு தொடர விடாமல் இருக்கச் செய்வது சிறந்தது.
  • உரங்களைக் குறைவாகப் பயன்படுத்தவும்.
  • பூச்சிகளுக்கு எதிரிகளை பயன்படுத்தவும் (சிலந்திகள், ஒட்டுண்ணி குளவிகள், கொள்ளை வண்டுகள், தவளைகள் மற்றும் தட்டான் பூச்சிகள்) இவை இலைச் சுருட்டுப் புழுக்களின் எண்ணிக்கையினை வெகுவாக குறைக்கவல்லது.
  • அரிசிக்கு பதிலாக பிற பயிர்களைக் கொண்டு சரியான மாற்றுப் பயிரிடலைத் திட்டமிடவும்.
  • நிலத்தை உழுது அறுவடைக்குப் பிறகு பயிர் எச்சங்களை அகற்றவும்.
  • அறுவடைக்குப்பிறகு, பல வாரங்கள் மற்றும் மாதங்களுக்கு நிலத்தை தரிசாக விடுவது குறித்து திட்டமிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க