அரிசி

பழுப்பு நிற தத்துப்பூச்சி

Nilaparvata lugens

பூச்சி

சுருக்கமாக

  • தாவரங்களின் இலை உறைகளில் சிறிய தத்துப்பூச்சிகள் காணப்படும்.
  • இலைகளானது ஆரம்பத்தில் ஆரஞ்சு-மஞ்சள் நிறமாகவும், பின்னர் பழுப்பு நிறமாகவும் மாறி, காய்ந்த நிலையில் இருக்கும்.
  • தாவரங்கள் மஞ்சள் நிறமாகி, வாடிப்போகும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

இளம் பூச்சிகள் மற்றும் முதிர் பூச்சிகள் பயிரின் அடிப்புறத்தில் அடைக்கலம் அடைகின்றன. அங்குள்ள தண்டுகள் மற்றும் இலைகளில் இருந்து ஊட்டம் பெறுகின்றன. பயிர்கள் தளர்வுற்று, வெளிறியத் தோற்றம் பெறும். அதிகப்படியான எண்ணிக்கையில் பூச்சிகள் இருப்பின், பயிரின் இலைகள் முதலில் ஆரஞ்சு-மஞ்சள் நிறத்திற்கு மாறி, மற்றும் வறண்டு (ஹாப்பர்பர்ன்) பழுப்பு நிறமாகும் மற்றும் பயிர் மொத்தமாக அழியும். களத்தில், நோய் அறிகுறிகள் முதலில் சிறிய திட்டுக்களாக தோன்றும் ஆனால் அவை மிக வேகமாக வளர்ந்து தத்துப்பூச்சிகளை உருவாக்கும். பெண்பூச்சிகள் முட்டைகளை இலை உறைகள் மற்றும் மைய நரம்புகளில் இட்டு, கூடுதலான சேதத்தை ஏற்படுத்துகிறது. தேன் பனி போன்ற உருவாக்கங்கள் சூடான அச்சுக்களுக்கு வழிவகுக்கும். பயிர்களில் கதிர்கள் சிறியதாகவும், உரிக்கப்பட்ட தானியங்களாகவும், மிகக்குறைந்த எடை கொண்ட தானியங்களாகவும் இருக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பூச்சிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது உயிரியல் முறையிலான சிகிச்சைகளைப் பயன்படுத்தலாம். தத்துப்பூச்சிகளுக்கு இயற்கையான எதிரிகளாக நீரில் செல்லும் பூச்சிகள், வண்டுகள், சிலந்திகள் மற்றும் பல வகையான முட்டைகளை உண்ணும் ஒட்டுண்ணி வண்டுகள் மற்றும் பறக்கும் பூச்சியினங்கள் போன்றவை இருக்கின்றன. விதைப்படுகைகளில் அதிகப்படியான நீரினை தினமும் ஒரு முறையாவது அளிப்பதன் மூலம் பூச்சிகளை மூழ்கடித்து, பூச்சிகளை கட்டுக்குள் வைக்கலாம், இவற்றால் நாற்றுகள் நுனிப்பகுதி மட்டுமே நீரில் அமிழ்த்தப்படும் (மூழ்குதல்). இதற்கு மாற்றாக, சிறிய விதைப்படுகைகளை வலையின் மூலம் சுத்தம் செய்து பூச்சிகளைப் பிடிக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பூச்சிகளுக்கு இயற்கையான எதிரிகளாக அமைந்துள்ள பிற பூச்சிகளின் எண்ணிக்கையினை விட தத்துபூச்சிகளின் எண்ணிக்கை அதிகமிருந்தாலோ அல்லது அதிகளவிலான தத்துப்பூச்சிகள் இருப்பதாகத் தெரிந்தாலோ பூச்சிக்கொல்லிகளே இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சிறந்த வழிமுறையாகப் பரிந்துரைக்கப்படுகிறது. புப்ரோஃபெஸின், பைரோமெட்ரோஸின் அல்லது ஈடோஃபென்ப்ரோக்ஸ் போன்ற பூச்சிக்கொல்லிகளைத் தத்துப்பூச்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்தலாம். பூச்சியின் எதிர்ப்புத்திறன் வளர்ச்சிக்கும், மீள் எழுச்சிக்கும் சாதகமான குயினல்போஸ், குளோர்பைரிபோஸ் அல்லது லாம்ப்டா சைஹலோத்ரின் அல்லது பிற செயற்கை பைரித்ராய்டு கலவைகளைக் கொண்ட இரசாயன தயாரிப்புகளைத் தவிர்க்கவும்.

இது எதனால் ஏற்படுகிறது

நிலப்பர்வடா லுகேன்ஸ் என்னும் பழுப்பு நிறத் தத்துப்பூச்சிகளினால் சேதங்கள் ஏற்படுகிறது. நெற்பயிரில் கதிர்கள் உருவாகும் நிலையில் மழை மற்றும் அதிக நீர்ப்பாசனம் கொண்ட ஈரமான சூழ்நிலைகளில் பூச்சிகளின் பாதிப்பு அதிகமிருக்கும், மேலும் அதிகப்படியான நீர்த்தேக்கம், அதிகப்படியான நிழல் மற்றும் ஈரப்பதமான நிலங்களில் இதே பாதிப்பு ஏற்படும். மூடிய கவிகைகளை கொண்ட நெற்பயிர்கள், நெருக்கமாக பயிரிடப்பட்ட பயிர்கள், அதிகப்படியான நைட்ரஜன் பயன்பாடு மற்றும் பூச்சிக்கொல்லிகளை குறித்த காலத்திற்கு முன்னரே பயன்படுத்துதல் (இயற்கையான நமக்குத் தேவையான பூச்சிகளை அழித்தல்) போன்றவை பூச்சிகளின் வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும். ஈரமான சூழ்நிலையினை ஒப்பிட்டு பார்க்கும்போது வறண்ட சூழ்நிலையில் அதிகமான பூச்சிகள் பரவுகின்றன. பயிர்களை லேசாக வளைத்து, அதன் அடிப்பகுதியில் மெதுவாக தட்டி, நீரின் மேற்பரப்பில் தத்துப்பூச்சிகள் விழுகிறதா எனப் பார்ப்பதன் மூலம் பூச்சிகளைக் கண்காணிக்கலாம்.


தடுப்பு முறைகள்

  • கிடைக்கப்பெற்றால், உள்ளூரில் பரிந்துரைக்கப்படும் எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர் வகைகளைப் பயன்படுத்தவும்.
  • எதிர்பாராத பாதிப்புகளைத் தவிர்க்க அதே பகுதியில் அதே காலத்தில் பயிரிடவும்.
  • ஒவ்வொரு 2 மீட்டருக்கும் 20 செமீ இடைவெளிவிட்ட பாதையினை உருவாக்கவும், இந்தப் பாதை கோடைக்காலத்தில் கிழக்கு-மேற்காகவும், வசந்த காலத்தில் வடக்கு-தெற்காகவும் அமைய வேண்டும்.
  • நிலத்தில் அல்லது விதைப்படுகையில் தினமும் பூச்சிகள் குறித்து ஆராயவும், அப்போது தண்டுகள் மற்றும் நிலத்தின் மேற்பரப்பில் முக்கியமாகக் கண்காணிக்கவும்.
  • வலையின் மூலம் சிறிய விதைப்படுகைகளை சுத்தம் செய்து பூச்சிகளைப் பிடிக்கலாம்.
  • நிலத்தில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள களைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து நீக்கவும்.
  • நைட்ரஜனை அதிகமாகப் பயன்படுத்துவதைக் குறைக்கவும்.
  • வெளிச்சமான பொறிகளைப் (5/ஏக்கர்) பயன்படுத்தவும், அதாவது மின்சார பல்புகள் அல்லது மண்ணெண்ணெய் விளக்குகளை வெளிறிய நிற சுவர்களுக்கு அருகே அல்லது தண்ணீர் உள்ள உலோகத் தட்டிற்கு மேல் பயன்படுத்தலாம்.
  • கூடுதலாக 20 மஞ்சள் ஒட்டும் பொறிகளை நிறுவவும்.
  • நன்மை பயக்கும் பூச்சிகளுக்கு சாதகமாக எல்லா விதமான களைகள் மற்றும் பூச்சிகளை அழிக்கும் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • நீர்ப்பாசனம் செய்தல் மற்றும் நிலத்தினை உலர விடுதலை மாறி மாறி செய்து பூச்சிகளை மூழ்கடிக்கலாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க