மற்றவை

அவரைத் தண்டு துளைப்பான்

Epinotia aporema

பூச்சி

சுருக்கமாக

  • இலைகள் மற்றும் தண்டுகளில் உண்ணும் சேதங்கள் காணப்படும்.
  • மொட்டுகள் மற்றும் மலர்கள் மீது உண்ணும் சேதங்கள் காணப்படும்.
  • குன்றிய வளர்ச்சி காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


மற்றவை

அறிகுறிகள்

எபினோட்டியா அப்போரேமாவின் கூட்டுப்புழுக்கள் தாவரத்தின் வளரும் பாகங்களை உண்டு உண்ணும் சேதங்களை ஏற்படுத்தும், பெரும்பாலும் இளம் சிற்றிலைகளில் ஏற்படுத்தும் மற்றும் தாவரங்களின் வளர்ச்சி குன்றிப்போகும். முட்டைப் புழுக்களின் உண்ணும் தன்மையினால் மலர்களின் மொட்டுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, விதைகளின் உற்பத்தி தடுக்கப்படும், பருப்பு வகை அல்ஃபல்ஃபா மற்றும் தாமரை தீவனத்தில் முக்கியமான பொருட்கள் ஆகும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

கிடைக்கப்பெற்றால், உயிரியல் கட்டுப்பாட்டுக்காக அங்கீகரிக்கப்பட்ட எபினோட்டியா அப்போரேமா குருமணி வைரஸ்களைப் (EpapGV) பயன்படுத்தவும். முட்டைப்புழுக்கள் இவற்றை உட்கொள்ளும் போது, இந்த வைரஸ் புரவலன் திசுக்களில் பரவலான தொற்றுக்களை ஏற்படுத்துகிறது அல்லது முட்டைப்புழுவுக்கு எதிரான பேசில்லஸ் துரிஞ்ஜியென்சிஸ் என்பவற்றைப் பயன்படுத்தவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். முட்டைப் புழுக்களின் அதிகப்படியான எண்ணிக்கையைக் குறைக்க, பொதுவான பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தவும். பல்வேறு உயிர்ப்புள்ள உள்ளடக்கங்களை மாற்றி, நல்ல வேளாண் நடைமுறைகளுக்குப் பிறகு செயல்படுத்தவும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த வண்டுகள் தாவரங்கள் முளைத்ததிலிருந்து முதிர்ச்சி அடையும் வரை காணப்படுகின்றன. முட்டைப் புழுக்கள் பொதுவாக தாவரங்களின் வளர்ச்சி நிலைகளில், நடவு செய்த சுமார் 30 நாட்களுக்குப் பிறகு காணப்படுகிறது. இவை மஞ்சள் நிறத்திலிருந்து வெளிர் பச்சை நிறம் வரையிலும் மற்றும் கருப்பு நிறத் தலைப்பகுதியையும் மற்றும் கருப்பு நிறத்தில் முதல் வயிற்றுப் பிரிவையும் கொண்டிருக்கும். கண்ணுக்குத் தெரியாத சிறிய முள்கள் தோலிலிருந்து வெளிவந்திருக்கும். இவை சிறிய கொக்கிப் பின்னல்களுடன் சுமார் 30 முதல் 40 கால்களைக் கொண்டிருக்கும். வண்டுகளின் வாழ்க்கைச் சுழற்சியானது வெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பொறுத்து 33 முதல் 46 நாட்கள் வரை எடுக்கும். 31 ° செல்சியஸ் முதல் 34 ° செல்சியஸ் வரையிலான வெப்பநிலை உடைய நிலப்பகுதிகளில் இந்த பூச்சி ஆண்டு முழுவதும் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறது, மேலும் இந்த நேரத்தில் ஐந்து முதல் ஆறு தலைமுறைகள் வரையிலான இனப்பெருக்கம் நடைபெறுகிறது.


தடுப்பு முறைகள்

  • உங்கள் தாவரங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும் மற்றும் அதிகப்படியான தாவரங்களில் அறிகுறிகள் தென்பட்டால், நோய் மேலாண்மை நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும்.
  • பெரோமோன் பொறிகளைப் பயன்படுத்தவும்.
  • புரவலன் அல்லாத பயிர்களைக் கொண்டு பயிர்ச் சுழற்சியை மேற்கொள்ள வேண்டும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க