மற்றவை

சோயாமொச்சைத் தண்டு அந்துப்பூச்சி

Sternechus subsignatus

பூச்சி

சுருக்கமாக

  • வளர்ச்சிக் கட்டத்தின் ஆரம்ப நிலைகளில், மென்மையானத் தண்டுப்பகுதியில் உண்ணும் சேதங்கள் காணப்படும்.
  • பெண் பூச்சிகள் இலைக் காம்புகளில் வெட்டுகளை ஏற்படுத்தி, முட்டைகள் இடத் தண்டுகளைத் துளையிடும்.
  • தண்டுகளில் துளையிட்டப் பாகங்களில் கட்டிகள் உருவாகும்.

இதிலும் கூடக் காணப்படும்


மற்றவை

அறிகுறிகள்

ஸ்டெர்னிக்கஸ் சப்சிக்னேட்டஸ் என்பவற்றின் இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் மென்மையானத் தண்டுகளின் திசுக்களைக் குறிப்பாக வளர்ச்சிக் காலத்தின் ஆரம்பக் கட்டங்களில் உண்ணும். பெண் பூச்சிகள் இலைகளின் காம்புகளை வெட்டி, அவற்றின் முட்டைகளை இட, பாதிக்கப்பட்ட திசுக்களுக்கு அருகே உள்ளத் தண்டுகளைத் துளையிட்டு, அவற்றை வெட்டப்பட்ட நார்ப்பொருள்கள் மற்றும் திசுத் துண்டுகளால் மூடிவிடும். முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியான பிறகு, அவை தண்டுகளைத் துளையிட்டு, பெரும்பாலும் அசையாமல் இருக்கிற, உட்புறத் திசுக்களை உண்ணும். அவை வளர்ந்து, தண்டின் உட்புறத்தைச் சேதப்படுத்துகையில், தண்டின் துளையிடப்பட்ட பாகங்களில் கட்டிகள் உருவாகும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இதுநாள் வரை இந்த நோய்ப்பூச்சிக்கு எதிரான உயிரியல் கட்டுப்பாடு விவரிக்கப்படவில்லை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். முட்டைப் புழுக்கள் தண்டுப்பகுதிக்குள்ளும் (சுமார் 30 நாட்கள்), மண்ணிலும் வாழும் காலங்களில் பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான இரசாயனக் கட்டுப்பாடு சாத்தியமாகும். விதை மற்றும் இலைத்திரள் பூச்சிக்கொல்லிகளும் பயிர்களைப் பாதுகாக்கக்கூடும்; ஆனால் அவை குறுகிய காலத்திற்கு மட்டுமே பாதுகாப்பை அளிக்கின்றன, ஏனெனில் தொடர்ச்சியான முதிர்ந்த பூச்சிகளின் படையெடுப்பு பயிர்கள் விரைவாக மீண்டும் நோய்த்தொற்றினால் பாதிப்படைவதற்கு வழிவகுக்கிறது.

இது எதனால் ஏற்படுகிறது

ஸ்டெர்னிக்கஸ் சப்சிக்னேட்டஸ் என்னும் பூச்சி தாவர வளர்ச்சியின் ஆரம்ப நிலையிலிருந்து அறுவடை வரை சுறுசுறுப்பாக இருக்கும். பூச்சியானது உள்ளுறைவு நிலையை (சோயாமொச்சைத் தாவரங்கள் இல்லாதபோது) மண்ணில் கழிக்கும். அறுவடைக்கு முன்பான காலத்தில், முட்டைப் புழுக்கள் மண்ணில் பாய்ந்து, மண் துகள்களால் உருவாக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட அறைகளில் குளிர்காலத்தைச் செயலற்ற நிலையில் கழிக்கும். நீண்ட காலத்திற்குப் படிப்படியாக முதிர்ந்த பூச்சிகள் மண்ணிலிருந்து வெளியாகும். அந்தந்த வாழ்க்கை நிலைகளின் நீளத்தின் காரணமாக, முதிர்ந்த பூச்சிகள், முட்டைப் புழுக்கள் மற்றும் முட்டைகளின் நிலைகள் பொதுவாக அதே தாவரம் அல்லது வயலில் ஒன்றாக நிகழும்.


தடுப்பு முறைகள்

  • பூச்சியின் எண்ணிக்கைகளைக் குறைப்பதற்கு புல் இனங்களைக் கொண்டு பயிர்ச் சுழற்சியை மேற்கொள்ளவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க