கரும்பு

ஆரம்ப குருத்துத் துளைப்பான்

Chilo infuscatellus

பூச்சி

சுருக்கமாக

  • குருத்துகள் மற்றும் இலைகளில் ஊட்டம் பெற்ற பாதிப்புகள் காணப்படும்.
  • இளம் பயிர்கள் இறந்தது போன்ற தோற்றம் பெறும்.
  • பாதிக்கப்பட்ட கரும்புகளில் துர்நாற்றம் ஏற்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

கரும்பு

அறிகுறிகள்

வெள்ளை நிறத்தில் தட்டையான முட்டைகள் கூட்டம் கூட்டமாக சுமார் 60 முட்டைகள் வரை 3 முதல் 5 வரையிலான வரிசையில் இலை உறைகளின் அடிப்பகுதியில் காணப்படும். இளம் உயிரிகள் சிறிய ஓட்டைகளை இலைகளில் ஏற்படுத்தும், முக்கியமாக இலை உறைகளில் ஏற்படுத்தும். முதிர்ந்த உயிரிகள் தண்டுகளின் அடித்தளத்தில் துளையிடுகின்றன, இதன் மூலம் பயிர்களுக்குள் சென்று மென்மையான உள்புற திசுக்களை உண்டு பயிர்களைச் சேதப்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட பயிர்களில் இலைகளின் நடுவில் உள்ள மைய சுருள்களும் உலர்ந்துவிடலாம். பாதிக்கப்பட்ட திசுக்களில் இருந்து துர்நாற்றம் வெளிவரும். குருத்துத் துளைப்பான்கள், கணுவிடை துளைப்பான்களாகவும் செயல்படுகின்றன.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பயிரிட்ட முதல் மாதத்தின் ஏழு முதல் பத்து நாட்களுக்குப் பின்பு முட்டைகளை உண்ணும் டிரைகோக்ராமா சிலோனிஸ் பூச்சிகளை விளைநிலங்களில் இடவும், இவற்றை அறுவடைக்கு முந்தைய மாதம் வரை பயன்படுத்தவும். ஸ்டர்மியோப்ஸிஸ் இன்ஃபெரென்ஸ் பெண் பூச்சிகளை, பயிரிட்ட 30-45 நாட்களுக்குப் பிறகு விளைநிலங்களில் இடவும். மாறாக,கரும்பு தண்டு துளைப்பானுக்கான கிரானுலோசிஸ் வைரஸ்களை ஒரு மில்லிமீட்டருக்கு எட்டு முதல் பத்து வைரஸ் என்ற செறிவில், பயிர்வளர்ச்சியின் 30 வது, 45 வது மற்றும் 60 வது நாட்களில் பயன்படுத்தவும். மாலைப் பொழுதுகளில் நீர்ப்பாசனம் செய்யப்பட்டவுடனே இந்த வைரஸ்களை உடனடியாக பயன்படுத்தவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பூச்சிக்கொல்லிகள் தேவைப்பட்டால், குளோரான்ட்ரானிலிப்ரோல் கொண்ட தயாரிப்புகளை பயன்படுத்தவும். நடவு செய்யும்போது மற்றும் பயிர் வளர்ச்சியின்போது, பூச்சிக்கொல்லிகளின் குறுமணிகளை பயன்படுத்துதல் நோய்த்தொற்றுக்கான பாதிப்புகளை குறைக்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

1-3 மாதங்கள் வயதான பயிர்கள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. வெள்ளை நிறத்தில் தட்டையான முட்டைகள் கூட்டம் கூட்டமாக சுமார் 60 முட்டைகள் வரை 3 முதல் 5 வரையிலான வரிசையில் இலை உறைகளின் அடிப்பகுதியில் காணப்படும். இளம் உயிரிகள் முட்டைகளில் இருந்து வெளிவர சுமார் 1-6 நாட்கள் ஆகும். நிலத்திற்கு சிறிது மேற்பகுதியில் உள்ள தண்டுகளை துளையிட்டு இவை உள்நுழைகின்றன. இதேபோன்ற அதிக எண்ணிக்கையிலான தளிர்களை இளம் உயிரிகள் தாக்குகின்றன. இதனால் சுமார் 25 முதல் 30 நாட்களுக்குள் வளர்ச்சியடைந்து, தண்டுகளுக்குள் கூட்டுப்புழுவாக மாறும். முதிர்ந்த பூச்சி வெளிவர ஆறு முதல் எட்டு நாட்களாகும். இதன் மொத்த வாழ்க்கை சுழற்சி நாட்கள் 35 முதல் 40 நாட்களாகும்.


தடுப்பு முறைகள்

  • தடுப்பு வகை அல்லது சகிப்புத் தன்மை கொண்ட பயிர்களைப் பயிரிடவும்.
  • கரும்பு பயிர்களுக்கு அருகே மாற்று புரவலன்களை பயிரிடுவதைத் தவிர்க்கவும்.
  • பூச்சிகளின் பெருக்கத்தினைக் குறைக்க குறித்த காலத்திற்கு முன்னரே பயிரிடவும்.
  • பெரோமோன் ஸ்லீவ் பொறிகள் அல்லது ஒளி பொறிகளைப் பயன்படுத்தி பூச்சிகளைப் பிடிக்கலாம்.
  • உலர்ந்த தளிர்கள் மற்றும் பிற பயிர்களின் எஞ்சிய பகுதிகளை அறுவடைக்குப் பின்னர் நீக்கி, அழித்துவிடவும்.
  • உளுந்து, பச்சைப் பயிறு, டைஞ்சா போன்ற பயிர்களை ஊடுபயிரிடலில் பயன்படுத்தலாம் இவை பூச்சிகளை தடுக்கவும் பயன்படும்.
  • அளவுக்கு அதிகமாக நைட்ரஜன் உரங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க