Diabrotica spp.
பூச்சி
முதிர்ந்த வண்டுகள் இலைதிரள்கள் மற்றும் பூக்களை உண்கின்றன, மகரந்தச் சேர்க்கையில் குறுக்கிடுகின்றன மற்றும் தானிய / காய்கறி / பழ வளர்ச்சியில் குறுக்கிடுகின்றன. முட்டைப்புழுக்கள் வேர் முடிகள், வேர்கள் மற்றும் தண்டுகளை உண்டு, தாவரங்கள் மண்ணிலிருந்து தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சும் திறனைக் குறைக்கிறது. தாவரங்களின் அடிப்பகுதியில் இருக்கும் வேர் நுனிகளும் உண்ணப்படலாம் அல்லது துளையிடப்பட்டு பழுப்பு நிறமாகத் தோன்றும். அறிகுறிகள் வறட்சி அல்லது ஊட்டச்சத்து குறைபாடுகளாகக் காட்டப்படுகிறது. தாவர வளர்ச்சியின் பிற்பகுதியில், வேர்களில் ஏற்படும் சேதம் தண்டுகளைப் பலவீனப்படுத்தும் மற்றும் தாவரங்கள் சாய்வதனால் அறுவடையில் சிக்கல்கள் ஏற்படுவதற்கும் வழிவகுக்கும். முட்டைப்புழுக்களால் ஏற்படும் பாதிப்பு சந்தர்ப்பவாத நோய்கிருமிகளுக்கு சாதகமாக அமையும். மேலும், சில வகை தியாபோட்டிகா இனங்கள் மக்காச்சோளம் குளோரோடிக் மாரட்டள் வைரஸ் பரப்புகளாக இருக்கின்றன மற்றும் பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் பாக்டீரியா வாடல் நோயை ஏற்படுத்துகின்றன. இது அதிக விளைச்சல் இழப்பிற்கு வழிவகுக்கும்.
பல வகை நூற்புழுக்கள், இறைப்பிடித்துண்ணிகள் (பூச்சிகள், பேன்கள்) மற்றும் ஒட்டுண்ணி ஈக்கள் மற்றும் குளவிகள் ஆகியவை வண்டுகளின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, வெள்ளரி வண்டுகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இல்லாதபோது, செலேட்டோரியா டியாபுரோடிகா என்னும் டச்சினிட் ஈக்களை அறிமுகப்படுத்தலாம். பூஞ்சை பௌவேரியா பாசியானா மற்றும் மெட்டரிசியம் அனிசோப்லியே ஆகியவை இயற்கையாக சில டியாபுரோடிகா வகைகளைத் தாக்குகின்றன.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். சேதங்கள் ஏற்படுத்தும் வெள்ளரிக்காய் வண்டுகளை பொதுவாக பூச்சிக்கொல்லிகள் கொண்டு சிகிச்சை அளிக்கலாம். அசிடாமிப்ரிட் அல்லது ஃபென்ட்ரோபத்ரின் குழுவின் பூச்சிக்கொல்லிகளை வண்டுகள் அதிக எண்ணிக்கையில் இருக்கும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும், ஆனால் சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பைரெத்ராயிட்ஸ் ஆகியவற்றுடனான மண் சிகிச்சைகளும் மற்றொரு வழியாகும்.
டியாபுரோடிகா இனங்கள் என்பது பொதுவாக பீன்ஸ் மற்றும் மக்காசோளம் உட்பட விவசாய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பயிர்களைத் தாக்கும் நோய்ப் பூச்சிகளின் கூட்டமாகும். வெள்ளரி வண்டுகள் வழக்கமாக மஞ்சள்-பச்சை வண்ணம் கொண்டவை மற்றும் அவற்றின் அம்சங்களைப் பொறுத்து அவை இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. முதல் வகையில், அவற்றின் பின்புறத்திற்கு கீழே மூன்று கருப்பு கோடுகள் கொண்டிருக்கும், அவற்றின் பின்பக்கத்தில் பன்னிரண்டு கருப்பு புள்ளிகள் காணப்படும்போது இரண்டாம் வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதிர்ந்த பூச்சிகள் தன்னைச் சுற்றியுள்ள பகுதியில் செயலற்ற நிலையில் குளிர்காலத்தைக் கழிக்கும், வெப்பநிலை அதிகரிக்கும் போது வசந்த காலத்தின் நடுப்பகுதியில் செயல்படத் தொடங்கும். பெண் வண்டுகள் தங்கள் புரவலன் செடிகளின் அருகே மண் பிளவுகளில் கொத்தாக முட்டைகளை இடும். முட்டைப்புழுக்கள் முதலில் வேர்களின் உள்ளே மற்றும் வெளியே உண்ணும், பின்னர் முதிர்ந்த வண்டுகள் இலைத்தொகுதி, மகரந்தம் மற்றும் பூக்களை உண்ணும்போது முட்டைப்புழுக்கள் தண்டுகளையும் உண்ணும். சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பொறுத்து, முட்டையிலிருந்து முதிர்ந்த வண்டுகள் உருவாகும் வரையிலான வளர்ச்சி காலம் ஒரு மாதம் ஆகும். வெப்பநிலை அதிகரிக்கும் போது, வளர்ச்சி காலம் குறையும். வெள்ளரிக்காய் வண்டு நல்ல நீர் வசதியுடன் கூடிய ஈரமான பகுதிகளை விரும்பும் மற்றும் வெப்பத்தை விரும்பாது.