மற்றவை

அலரி செதில் பூச்சி

Aspidiotus nerii

பூச்சி

சுருக்கமாக

  • புரவலன்களின் இலைகள், தண்டுகள் மற்றும் பழங்களில் எண்ணற்ற வெள்ளை நிற செதில் கவச பூச்சிகள் காணப்படும்.
  • இலைகள் மற்றும் பழங்கள் புகை போன்ற கரு நிற பூஞ்சைகளால் மூடப்படும்.
  • இலைகள் வாடுதல், முன் கூட்டியே உதிர்தல் மற்றும் உருக்குலைந்த பழங்கள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


மற்றவை

அறிகுறிகள்

அலரி செதில் பூச்சி புரவலன் தாவரங்களின் பல பாகங்களை உண்ணும் மற்றும் அவற்றின் அறிகுறிகள் பொதுவாக நோய் தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து அமையும். நோய் தொற்றின் முதல் அறிகுறிகளானது புரவலன் தாவரங்களின் தண்டுகள், இலைகள் மற்றும் பழங்களில் எண்ணற்ற வெள்ளை நிற செதில் கவச பூச்சிகள் (சுமார் 2 மிமீ விட்டத்தில்) காணப்படும். அவை உண்ணும்போது, தேன்துளிகளை உற்பத்தி செய்து பழங்கள் மற்றும் இலைகளில் சொட்டி, புகை போன்ற கரு நிற பூஞ்சைகள் உருவாவதற்கு வழிவகுக்கும். அதிகமான நோய்தொற்றுகளில், இலைகள் வாடுதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தி, அவை முன்கூட்டியே உதிரக்கூடும். தளிர்கள் உலர்ந்து, பழங்கள் உருக்குலைந்து போகக்கூடும்; இந்த அறிகுறிகள் குறிப்பாக டேபிள் ஆலிவ்களில் தீவிரமாகக் காணப்படும். மொத்தத்தில், மரத்தின் வீரியம் குறைந்து, விளைச்சல் மற்றும் தரம் பாதிக்கக்கூடும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஒட்டுண்ணி குளவிகளான அஃபிடஸ் மெலினஸ் மற்றும் அஃபிடிஸ் சிலென்சிஸ் மற்றும் காக்கிநெல்லிட் இரைப்பிடித்துண்ணிகளான கிலோகோரஸ் பைபஸ்டுலேட்டஸ், ரைஸோபியஸ் லொபேண்டே மற்றும் கிலோகோரஸ் குவானே உள்ளிட்டவை அஸ்பிடியோடஸ் நெரியின் இயற்கை எதிரிகளாகும். இரண்டாவதாக குறிப்பிடப்பட்டுள்ள இரைப்பிடித்துண்ணிகள் வெயிற்காலங்களில் அதிகப்படியான நோய் தொற்றின்போது மிகவும் வெற்றிகரமாக செதில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. தாவர எண்ணெய்கள், தாவர சாறுகள், கொழுப்பு அமிலங்கள் அல்லது பைரெத்ரின்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட குறுகிய நிலைத்தன்மையைக் கொண்ட கரிம பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். டெல்டாமெத்ரின், லாம்ப்டா- சைஹலோத்ரின் அல்லது சைபர்மெத்ரின் போன்ற செயல்பாட்டு பொருட்களை கொண்ட தெளிப்பான்களை இலைகளுக்கு அடிப்பகுதியில் தெளிப்பதன் மூலம் இந்த பூச்சிகளுக்கு எதிராக ஓரளவு கட்டுப்பாட்டை அடைய முடியும். முறையான பூச்சிக்கொல்லி அசிடமிப்ரிட் தாவர திசுக்களில் உறிஞ்சப்பட்டு, செதில் பூச்சிகள் உண்ணும்போது அவற்றினுள் செல்கிறது. இறந்த செதில் பூச்சிகள் இலைகள் அல்லது தண்டுகளுடன் உறுதியாக ஒட்டிக்கொள்ளும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் அஸ்பிடியோடஸ் நெரி என்னும் செதில் பூச்சியின் உண்ணும் செயல்பாட்டினால் ஏற்படுகிறது. முதிர்ந்த பூச்சிகள் தட்டையாக, நீள்வட்ட வடிவில் சுமார் 2 மிமீ நீளத்தில் இருக்கும்; மேலும் இவை வெள்ளை நிறத்தில், திரவங்களை தடுக்கும் வகையில் மெழுகு போன்ற தோலினைக் கொண்டிருக்கும். முதிர்ச்சியடையாத நிலைகள் (ஊர்ப்புழுக்கள்) மிகவும் சிறியவை. இவை இரண்டும் இலைகளின் அடிப்பகுதியிலும், தண்டுகளிலும் படிந்துகொண்டு, தாவர சாறுகளை உண்ணும். பாதிக்கப்பட்ட தாவர பொருட்களின் மூலம் இந்த செதில் பூச்சிகள் நீண்ட தொலைவிற்கு பரவும். ஊர்ப்புழுக்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும், நன்கு செயல்படக்கூடியதாகவும் இருக்கும். மேலும் இவை அருகில் உள்ள கிளைகள் மூலமாக ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு இடம்பெயரும். வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் அவற்றின் வாழ்க்கை சுழற்சியில் முக்கிய விளைவைக் கொண்டிருக்கின்றன. 30 டிகிரி செல்சியஸில் ஊர்ப்புழுக்களின் வளர்ச்சி முற்றிலும் தடைபடும். அஸ்பிடியோடஸ் நெரி ஆலிவ் தோட்டங்களின் சிறிய பூச்சியாக கருதப்படுகிறது. மற்ற புரவலன்களுள் ஆப்பிள், மாம்பழம், பனை மரம், அலரிப்பூ மற்றும் நாரத்தை ஆகியவை அடங்கும்.


தடுப்பு முறைகள்

  • நடவு செய்யும் போது மரங்களுக்கு இடையே போதுமான இடைவெளி விடவும்.
  • வெவ்வேறு மரங்களின் கிளைகளுக்கு இடையே தொடர்புகளைத் தவிர்ப்பதற்கு போதுமான அளவு மரங்களை சீர்த்திருத்தம் செய்யுங்கள்.
  • செதில் பூச்சிகளுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என பழத்தோட்டங்களை தொடர்ந்து கண்காணிக்கவும், இவை குறைந்த எண்ணிக்கையில் இருந்தால் அவற்றை இலைகளில் இருந்து அகற்றிவிடவும்.
  • நடவு செய்ய இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களிலும் செதில் பூச்சிகள் ஏதேனும் இருக்கிறதா என கவனிக்கவும்.
  • பாதிக்கப்படக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வதை தவிர்க்கவும்.
  • நன்மை பயக்கும் பூச்சிகளை பாதிக்கக்கூடிய வகையில் பரந்த-அளவிலான பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • கடுமையாக பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றி, புதிய மரங்களை நடுவது பற்றி பரிசீலியுங்கள்.
  • செதில்பூச்சிகளுக்கு ஆதரவாக இருக்கும் எறும்புகளை பிடிக்க அல்லது தடை செய்ய பொறிகள் அல்லது தடைகளை அமைக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க