ஆலிவ்

ஆலிவ் பட்டை வண்டு

Phloeotribus scarabaeoides

பூச்சி

சுருக்கமாக

  • மரத்தின் பட்டை மீது நுழைவுப் பகுதிகள்.
  • பட்டைக்கு அடியில் குறுக்குவாட்டு குடைவுகள்.
  • சிறுமரக்கிளைகள் மற்றும் கிளைகளின் பட்டை இடைநீக்கம் மற்றும் வாடுதல்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
ஆலிவ்

ஆலிவ்

அறிகுறிகள்

முதிர்ந்த பெண் பூச்சிகள் கார்டெக்ஸ் (புறணி) வழியாக ஏராளமாக துளைகளை இட்டு, பட்டையின் கீழ் நேரடியாக உள்ள நுழைவுப் புள்ளியின் இருபுறமும், குறுக்குவெட்டு சுரங்கத்தை குடையும். மரக்கிளை அல்லது கிளையின் உள்ளே, பெண் பூச்சி 60 முட்டைகள் வரை இடும் மற்றும் முட்டைப்புழுக்கள் குஞ்சு பொரிக்கும்போது, அவை சாற்று மரத்தின் மேலே அல்லது கீழே துளைக்கத் தொடங்குகின்றன. நுழைவுத் துளைகளின் அருகாமையில் பட்டையை வெட்டி அகற்றும்போது இது தெளிவாகத் தெரியும். இவ்வாறு உண்ணும்விதம் சிறுகிளை அல்லது கிளையின் பகுதியளவு முதல் முழுவதும் வரை குடைவை உண்டாக்குகிறது, இது கட்டமைப்புரீதியாக அவற்றை வலுவிழக்கச் செய்வதோடு கடத்து திசுக்களையும் சேதப்படுத்துகிறது. முட்டைப்புழுக்கள் உண்ணும் கேலரிகளுக்குள் கூட்டுப்புழுவாகிவிடும். ஆலிவ் மரங்களைத் தவிர, இந்த வண்டுகள் ஒலியாண்டர் (நேரியம் ஒலியாண்டர்), எப்போதாவது ஆஷ் (ஃப்ராக்சினஸ் எக்செல்சியர்) மற்றும் லிலாக் ((சிரிங்கா வல்காரிஸ்) ஆகியவற்றை உண்கின்றன.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பல குடும்பங்களைச் சேர்ந்த எண்ணற்ற ஒட்டுண்ணி குளவிகளால் இந்த வண்டு தாக்கப்படுகிறது. இந்த இனங்களில் ஒன்றின் அறிமுகம் மற்றும் கட்டுப்படுத்தும் விளைவுகள் ஆண்டுக்கு ஆண்டு மாறுபடலாம். ஆலிவ் பட்டை வண்டுகளின் ஆதிக்கம் செலுத்தும் இயற்கை எதிரி ஒட்டுண்ணி குளவி சிரோபாச்சஸ் குவாட்ரம் ஆகும், இது பூச்சிகளின் எண்ணிக்கையை 30-50% குறைக்கும். பைரித்ராய்டுகளை அடிப்படையாகக் கொண்ட பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் இயற்கை எதிரிகள் மோசமாக பாதிக்கப்படலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் இருந்தால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். எத்திலீன் அடிப்படையிலான பெரோமோன் பொறிகளைப் பயன்படுத்தி வண்டுகளை கவருவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. டெல்டாமெத்ரின் போன்ற பைரித்ராய்டுகளை அடிப்படையாகக் கொண்ட பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு வண்டுகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்படும் இரண்டு முறைகளும் நல்ல முடிவுகளைக் காட்டுகின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகள் ஆலிவ் பட்டை வண்டுகளால் ஏற்படுகின்றன, சுற்றுச்சூழலைப் பொறுத்து இவ்வண்டுகள் ஆண்டுக்கு 2 முதல் 4 தலைமுறைகளைக் கொண்டுள்ளன. வசந்த காலத்திலும் கோடைகாலத்தின் ஆரம்பத்திலும் முதிர்ந்த வண்டுகள், உயிருள்ள மரங்களில் அல்லாமல், வெட்டப்பட்ட கிளைகளிலும், விறகாக அடுக்கி வைக்கப்பட்ட ஆலிவ் மரத்திலும் முட்டையிடும். முட்டைப்புழுக்கள சைலோபாகஸ் என்று அழைக்கப்படுகின்றன, அதாவது அவை மரத்தை மட்டுமே உண்ணும். பூச்சிகள் பக்கத்தில் உள்ள புதிய சாகுபடி தளங்களுக்கு பறந்து செல்லும். பாதிக்கப்பட்ட மரம் அல்லது உயிருள்ள தாவரப் பொருட்கள் கொண்டு செல்லப்படும் போது இது நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்லப்படலாம். கடுமையான தொற்றுநோய்கள் பூக்கள் மற்றும் ஆலிவ் பழங்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம், இதனால் ஏற்படும் சேதம் பயிரின் 70% ஐ அடையலாம். ஆலிவ் பழத்தோட்டங்கள் அத்தகைய நோய்த்தொற்று ஏற்பட்ட 5 ஆண்டுகளுக்குள் முற்றிலும் காய்க்காமல் போய்விடும். சேதம் தண்டுகளை துளைக்கும் என்பதால் இளம் மரங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகும்.


தடுப்பு முறைகள்

  • பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்றி எரித்து விட வேண்டும் அல்லது பழத்தோட்டத்திற்கு தூரத்தில் எடுத்துச் சென்று ஆழமாக புதைத்து விட வேண்டும்.
  • அதே நடைமுறையை மர குப்பைகள் மற்றும் சீர்திருத்தம் செய்யும் பொருட்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
  • பூச்சிக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என ஆலிவ் மரங்களைக் கண்காணிக்கவும்.
  • கிளையின் மீட்டர் ஒன்றுக்கு 3க்கும் மேற்பட்ட பூச்சி கேலரிகள் இருக்கும் போது ஆலிவ் விளைச்சல் குறைவதை எதிர்பார்க்கலாம்.
  • ஆலிவ் பட்டை வண்டுகளின் மாற்று புரவலன்கள் பழத்தோட்டத்திற்கு அருகில் இல்லாததை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • மரத்தின் பட்டை வண்டுகளுக்கு இயற்கையான எதிர்ப்பை அதிகரித்திட சீராக உரமிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க