ஆலிவ்

ஆலிவ் குதிக்கும் பேன் (சில்லிட்)

Euphyllura olivina

பூச்சி

சுருக்கமாக

  • குதிக்கும் பேன்கள் மொட்டுகள், பூக்கள், மென்மையான தளிர்கள் மற்றும் சிறிய பழங்கள், திசுக்களை சேதப்படுத்தும்.
  • தேன்துளி போன்ற கழிவு பூசண நோயைக் கவர்ந்து, ஒளிச்சேர்க்கையை கட்டுப்படுத்துகிறது.
  • மெழுகு சுரப்பு பூ மற்றும் சிறு பழங்களின் உதிர்வுக்கு வழிவகுக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
ஆலிவ்

ஆலிவ்

அறிகுறிகள்

ஆலிவ் குதிக்கும் பேன்கள் ஆலிவ் மரங்களை மூன்று வழிகளில் பாதிக்கின்றன: முதலில் மொட்டுகள், பூக்கள், மென்மையான தளிர்கள் மற்றும் சிறிய பழங்களை நேரடியாக உண்ணுவதன் மூலம் பாதிக்கிறது; இரண்டாவதாக, இந்தத் திசுக்களின் சர்க்கரைச் சாற்றை உறிஞ்சும் போது இவை ஏராளமான தேன்துளியை உற்பத்தி செய்கின்றன, இதன் விளைவாக பூசண வளர்ச்சி மற்றும் இலைகளின் ஒளிச்சேர்க்கை செயல்பாடு குறைகிறது. இறுதியாக, ஆலிவ் பூக்கள் மற்றும் பழங்கள் காய்க்கும்போது, இளம் பூச்சிகளின் மெழுகு போன்றதொரு சுரப்பு பூக்கள் மற்றும் சிறிய பழங்களின் முன்கூட்டிய உதிர்வை ஏற்படுத்துகிறது. அதிக எண்ணிக்கையிலான பூச்சிகள் இளம் மரங்களின் வளர்ச்சியை தாமதப்படுத்தலாம் மற்றும் குறிப்பிடத்தக்க மகசூல் குறைப்புகளை ஏற்படுத்தலாம். அதிக அளவில் தாக்கப்பட்ட மரங்கள் 30 முதல் 60% வரை மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

வேட்டையாடும் பூச்சிகள் எ.கா. ஒட்டுண்ணி குளவி சைலேஃபேகஸ் இயூஃபில்லுரே, கொள்ளை வண்டு அந்தோகோரிஸ் நெமோரலிஸ், கண்ணாடி இறக்கைப் பூச்சி கிரிசோபெர்லா கார்னியா மற்றும் கரும்புள்ளிகள் கொண்ட செந்நிற வட்டச் சிறு வண்டுவகை காசினெல்லா செப்டெம்பன்க்டாட்டா ஆகியவை ஆலிவ் தாவரத்தின் குதிக்கும் பேன்களின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன. பொதுவாக, பரந்த அளவிலான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி இந்த இனங்களை அழிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். குதிக்கும் பேன்களுக்கு எதிரான பயன்பாட்டு நேரத்தின்போது மட்டும் பலனளிக்கக்கூடிய, கரிம தொடர்பு பூச்சிக்கொல்லிகளானது வேப்ப எண்ணெய் மற்றும் தோட்டக்கலை எண்ணெயை அடிப்படையாகக் கொண்ட பூச்சிக்கொல்லி சோப்புகள் ஆகும். பூச்சிகள் தங்கள் பாதுகாப்புக்கான மெழுகை சுரக்கும் முன் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். விதானத்தில் காற்றோட்டத்தை அதிகரிக்கவும், ஆலிவ் குதிக்கும் பேன்களுக்கு வெப்ப வெளிப்பாட்டை அதிகரிக்கவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை கத்தரிக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைத்தால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். பூச்சிக்கொல்லிகளை சரியான நேரத்தில் தெளிப்பது குதிக்கும் பேன்களுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும், ஆனால் கடைசி முயற்சியாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பூச்சிகள் அவற்றின் பாதுகாப்புக்கான மெழுகுகளை சுரக்கும் முன் இந்தத் தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும், இம்மெழுகுகள் அவற்றுக்கு சில எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

இது எதனால் ஏற்படுகிறது

ஆலிவ் தாவரத்தின் குதிக்கும் பேன் யூஃபில்லுரா ஒலிவினாவின் உண்ணும் செயல்பாட்டினால் அறிகுறிகள் ஏற்படுகின்றன. பெரிய பேன்கள் ஆலிவ் தண்டுகளின் உறைவிடமான பகுதிகளில் குளிர்காலத்தை கழிக்கின்றன. இவை சுமார் 2.5 மிமீ நீளத்தில், வெளிர் பழுப்பு நிற உடலைக் கொண்டுள்ளன, இதன் முன் இறக்கைகளில் சில சிறிய கரும்புள்ளிகள் காணப்படும். பெண் பூச்சிகள் வசந்த காலத்தில் புதிய தளிர்கள் மற்றும் மொட்டுகளில் 1000 முட்டைகள் வரை இடும். இளம் பூச்சிகள் தட்டையாகவும், பச்சை நிறத்தில் இருந்து பழுப்பு நிறம் வரையிலும் இருக்கும், மேலும் அவற்றைப் பாதுகாத்துக் கொள்ள வெள்ளை நிறத்தில் அவற்றை மூடிக்கொள்ளும் அளவுக்கு மெழுகு போன்றதொரு பொருள் சுரக்கும். 20° முதல் 25°செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில், இவற்றால் இதன் வாழ்க்கைச் சுழற்சியை சுமார் மூன்று மாதங்களில் முடிக்க முடியும், மேலும் இந்த காலநிலைகளில் வருடத்திற்கு இப்பூச்சிகளின் மூன்று தலைமுறைகள் வரை இருக்கும். வெப்பமான நாட்களில் (27° செல்சியஸிற்கு மேல்), குதிக்கும் பேன்கள் குறைவாக செயல்படும், 32° செல்சியஸிற்கு மேல் இவற்றின் இறப்பு அதிகரிக்கும். இளம் மற்றும் பெரிய பூச்சிகளின் உண்ணும் செயல்பாடு தாவர திசுக்களைச் சிதைக்கிறது மற்றும் தாவரங்களின் அனைத்து பகுதிகளுக்கும் ஊட்டச்சத்துக்களை விநியோகிக்கும் திறனை பாதிக்கிறது. ஆலிவ் குதிக்கும் பேன்கள் மஞ்சரிகளில் இருக்கும்போது சிக்கலாக மாறும், இது இறுதியில் பழங்கள் மற்றும் விளைச்சலைப் பாதிக்கிறது.


தடுப்பு முறைகள்

  • வசந்த காலத்தின் தொடக்கத்தில் தொடங்கி, ஆலிவ் குதிக்கும் பேன்களின் எண்ணிக்கை குறித்து தாவரங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • குதிக்கும் பேன்களைப் பிடிக்க ஒட்டும் பொறிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
  • பரந்த அளவிலான பூச்சிக்கொல்லிகளை அதிகமாகப் பயன்படுத்துவதன் மூலம் குதிக்கும் பேன்களின் கொள்ளையடிக்கும் பூச்சிகளை அழிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
  • மரங்களுக்கு இடையில் போதுமான இடைவெளியை பராமரியுங்கள்.
  • குதிக்கும் பேன்களுக்கு சாதகமற்ற சூழலை உருவாக்க, தழைகளின் போதுமான காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி தாவரத்தில் படுவதை உறுதி செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க