ஆலிவ்

ஆலிவ் பழ ஈ

Bactrocera oleae

பூச்சி

சுருக்கமாக

  • பழுக்க வைக்கும் பழங்களில் முக்கோண வடிவத்துடன் துளைகள் தெளிவாகத் தெரியும்.
  • இவை முதலில் அடர் பச்சை நிறத்தில் இருக்கும், பின்னர் மஞ்சள்-பழுப்பு நிறமாக மாறும்.
  • முட்டைப்புழுக்களின் உண்ணும் செயல்பாட்டின் மூலம் பழத்தின் சதை சேதமடைகிறது.
  • ஆலிவ் பழங்கள் காய்ந்து, முன்கூட்டியே உதிர்ந்து விடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
ஆலிவ்

ஆலிவ்

அறிகுறிகள்

பழுத்த பழங்களில் பெண்களின் முட்டையிடும் துளைகள் மூலம் தெளிவாகத் தெரியும். இவை சிறப்பியல்பு கொண்ட முக்கோண வடிவமும் அடர் பச்சை நிறத்தையும் கொண்டிருக்கும், பின்னர் இவை மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாக மாறும். பழங்களுக்குள் இருக்கும் முட்டைப்புழுக்களின் உண்ணும் செயல்பாடுதான் மோசமான சேதத்தை ஏற்படுத்துகிறது. ஆலிவ் பழங்கள் காய்ந்து, முன்கூட்டியே உதிர்ந்துவிடும். காயங்களானது பாக்டீரியா மற்றும் பூஞ்சை நோய்க்கிருமிகளின் நுழைவுப் புள்ளிகளாகவும் செயல்படலாம். பழங்கள் மற்றும் எண்ணெயின் விளைச்சலும் தரமும் பாதிக்கப்படும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஆலிவ் பழ ஈக்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டுவர பல ஒட்டுண்ணிக் குளவிகள் பாதிக்கப்பட்ட தோட்டங்களில் அறிமுகப்படுத்தப்படலாம். ஓபியஸ் கன்கலர், பினிகாலியோ மெடிட்டெரேனியஸ், ஃபோபியஸ் அரிசனஸ், டயகாஸ்மிமார்பா கிராஸி அல்லது யூரிடோமா மார்டெல்லி ஆகியவை அவற்றில் சில. வேட்டையாடும் பூச்சிளில் லாசியோப்டெரா பெர்லேசியானா அடங்கும். வேப்ப மர சாறுகள் அல்லது ரோட்டினோனை இயற்கையான விரட்டிகளாகப் பயன்படுத்தலாம். பெண் பூச்சிகள் பழங்களில் முட்டையிடுவதைத் தடுக்க கயோலின் தூள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுகிறது. தாமிர-அடிப்படையிலான விரட்டிகள் (போர்டாக்ஸ் கலவை, காப்பர் ஹைட்ராக்சைடு, காப்பர் ஆக்ஸிகுளோரைடு) கொண்ட தடுப்பு சிகிச்சைகளும் வேலை செய்கின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். டைமெத்தோயேட், டெல்டாமெத்ரின், பாஸ்மெட் அல்லது இமிடாக்ளோரைட் ஆகியவற்றின் செயலில் உள்ள பொருட்களின் அடிப்படையிலான பூச்சிக்கொல்லிகளை பூச்சிகளின் எண்ணிக்கை வரம்பை எட்டும்போது பயன்படுத்தலாம். நச்சு புரத தூண்டில் அல்லது வெகுஜன பொறி மூலம் தடுப்பு சிகிச்சைகளும் சாத்தியமாகும்.

இது எதனால் ஏற்படுகிறது

ஆலிவ் பழ ஈக்களான பாக்ட்ரோசெரா ஓலியாவின் முட்டைப்புழுக்களால் அறிகுறிகள் ஏற்படுகின்றன, இதன் ஒரே புரவலன் ஆலிவ் மரமாகும். பெரிய ஈக்கள் சுமார் 4-5 மிமீ நீளத்தில், கரும் பழுப்பு நிற உடலுடன், ஆரஞ்சு தலை மற்றும் மார்பின் இருபுறமும் வெள்ளை அல்லது மஞ்சள் புள்ளிகளுடன் காணப்படும். அவைகள் நுனிகள் மற்றும் இருண்ட நரம்புகள் அருகே ஒரு இருண்ட புள்ளியுடன் ஒளிஊடுருவக்கூடிய இறக்கைகள் கொண்டுள்ளன. ஆலிவ் பழ ஈக்கள் பெரியவர்களாக பல மாதங்கள் உயிர்வாழும். பெண் பூச்சிகள் 400 முட்டைகள் வரை இடும், வயிற்றின் அடிப்பகுதியில் இருக்கும் கொட்டும் பாகத்தைப் பயன்படுத்தி, பழுத்த பழங்களின் தோலைத் துளைத்து, இவை முட்டையை உள்ளே இடும். முட்டைப்புழுக்கள் கிரீம் வெள்ளை நிறத்தில் இருக்கும், பழத்தின் சதைகளை உண்ணும், இதனால் கணிசமான அளவு சேதம், முன்கூட்டியே பழ உதிர்வு ஏற்படும். வெப்பநிலையைப் பொறுத்து (உகந்தது 20-30 °C) ஆண்டுக்கு 2 முதல் 5 தலைமுறை ஆலிவ் ஈக்கள் இருக்கலாம்.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்புத் திறன் கொண்ட வகைகள் கிடைத்தால், அவற்றைத் தேர்வு செய்யவும்.
  • ஈக்களைப் பிடிக்க மற்றும் அவற்றின் எண்ணிக்கையை கண்காணிக்க ஒட்டும் அல்லது பெரோமோன் பொறிகளைப் பயன்படுத்தவும்.
  • மோசமான சேதத்தைத் தவிர்க்க சீக்கிரமே அறுவடை செய்யுங்கள், விளைச்சலில் ஏற்படும் இழப்பைத் தரம் அதிகரிப்பு மூலம் ஈடுசெய்யலாம்.
  • பூச்சிகளின் எண்ணிக்கைப் பெருக்கத்தைத் தவிர்க்க பழத்தோட்டத்தின் சுகாதாரம் முக்கியமானது.
  • பாதிக்கப்பட்ட பழங்கள் உடைய மரத்தை அப்புறப்படுத்தவும் அல்லது அவை விழுந்து கிடக்கும் தரையை சுத்தம் செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க