திராட்சை

திராட்சைக் கொடி இலை சுருட்டுப்புழு

Sparganothis pilleriana

பூச்சி

சுருக்கமாக

  • முதிர்ந்த அந்துப்பூச்சிகளில் 3 சிவப்புகலந்த பழுப்பு நிற குறுக்குவெட்டு பட்டைகள் மற்றும் ஒரே மாதிரியான சாம்பல் நிற பின்னங்கால்களுடன் வைக்கோல் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

திராட்சை

அறிகுறிகள்

எஸ்.பில்லேரியானாவின் கம்பளிப்புழுக்கள் மொட்டுக்கள் பல்கி பெருகும் போது அவற்றை துளையிட்டு, அவற்றை வெறுமையாக ஆக்கும். மொட்டுகள் உருவானபிறகு நோய் தொற்று ஏற்பட்டால், அவை இலைகள், தளிர்கள் மற்றும் மலர்களுக்கு மோசமான சேதங்களை ஏற்படுத்தும். சில இலைகள் பட்டு நூல்களால் பிண்ணப்பட்டு, அந்த கட்டமைப்புகள் முட்டைப்புழுக்களால் உறைவிடமாக பயன்படுத்தப்பட்டு, பின்னர் பிற இலைகளை உண்ணுவதற்காக அவை அந்த வலைபிண்ணலில் இருந்து வெளியேறும். நோய் தொற்று அதிகமாக இருக்கும்போது, இலைப்பரப்பின் அடிப்பகுதிகள் வெள்ளி நிறமுடைய தோற்றத்தைப் பெறும், மேலும் இலைக்காம்புகள் சிவப்பு நிறமாற்றத்தை பெறுகிறது. பாதிக்கப்பட்ட தளிர்கள் உலர்ந்து, கருகி, கடுமையான நோய்த்தொற்றுகளில் வீழ்ச்சியடையவும் செய்யும். திராட்சைக் கொத்துக்களும் பாதிக்கக்கூடும்,அவற்றின் விளைவாக எண்ணற்ற பெர்ரிகள் பட்டு நூல்களால் பிண்ணப்படும். கம்பளிப்பூச்சிகளுக்கு தொந்தரவு ஏற்பட்டால், எ.கா. கூடுகளை திறப்பதன் மூலம், அவை வெளியே பாய்ந்து, அந்த பட்டு நூல்களின் வழியாக நிலத்தை நோக்கி இறங்கி, நிலத்தில் விழுந்துவிடும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

எஸ் பில்லரிகாவின் இயற்கை இறைபடித்துண்ணிகளில் ஒட்டுண்ணி குளவிகள் மற்றும் ஈக்கள், பொன்வண்டுகள் மற்றும் சில பறவைகள் போன்ற நீண்ட பட்டியலை உள்ளடக்கியது. பரந்த அளவிலான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி இந்த உயிரினங்களின் வாழ்க்கைச் சுழற்சியைத் தொந்தரவு செய்யாமல் இருக்கவும். ஸ்பினோசாட் கொண்ட கரிம தீர்வுகளும் பரிந்துரைக்கப்படுகிறது. பூஞ்சாணி பவெரியா பாசியானாவை கொண்டிருக்கும் கரைசல்களும் முட்டைப்புழுக்களை அழிக்கக்கூடியது ஆகும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். குளோர்பைரிஃபோஸ், எமாமெக்டின், இண்டோக்சாகார்ப், அல்லது மெடாக்சிபெனோசிட் ஆகியவற்றைக் கொண்ட தயாரிப்புகள் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த சரியான நேரத்தில் தெளிக்கப்பட வேண்டும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் ஸ்பார்கணோதிஸ் எனப்படும் உணர்கொம்பு பூச்சியின் கம்பளிப்பூச்சிகளால் ஏற்படுகிறது. முதிர்ந்த பூச்சிகள் 3 சிவந்த பழுப்பு நிற குறுக்குக்கோடு பட்டைகளுடன் வைக்கோல் மஞ்சள் நிற முன் இறக்கைகளையும் மற்றும் சீரான சாம்பல் நிற விளிம்புகளை கொண்ட பின் இறக்கைகளையும் பெற்றிருக்கும். இவை வருடத்திற்கு ஒரு தலைமுறையையும், திராட்சைகளை உண்ணும் பிற பூச்சிகளை ஒப்பிடுகையில் குறைந்த வெப்பநிலையையும் விரும்பும். பெண்பூச்சிகள் அந்திவேளையில் திராட்சை இலைகளின் மேற்பரப்பில் முட்டைகளை ஒற்றையாக இடும். கம்பளிப்பூச்சிகள் பச்சை,சாம்பல் அல்லது சிவப்பு நிறத்தில் 20-30 மிமீ நீளம் மற்றும் அவற்றின் உடல் முடிகளால் மூடப்பட்டிருக்கும். அவை குளிர்காலத்தை திராட்சை கொடிகளின் மரப்பட்டைக்கு அடியில், ஆதரவு மர முளைகளில் அல்லது மாற்று புரவலனின் இலைகளுக்கு அடியில் சிறிய பட்டுக்கூட்டில் வாழும். வசந்த காலத்தின் நடுப்பகுதியில் அவை வெளிவந்த பிறகு, பட்டு நூற்களால் பிண்ணிய கூட்டில் முட்டைப்புழுக்களாக மாறுவதற்கு முன் அவை சுமார் 40-55 நாட்களுக்கு உண்ணுகின்றன. பொதுவாக கோடைகாலத்தின் நடுப்பகுதியில், 2-3 வாரங்களுக்கு பிறகு, அந்துப்பூச்சிகள் வெளியே வரும். எஸ்.பில்லேரியானா 100 க்கும் மேற்பட்ட பல்வேறு புரவலன்களை பாதிக்கக்கூடும். எ.கா.கருப்புபெர்ரி, செஸ்ட்நட், கல் பழ இனங்கள், சீமைமாதுளம்பழம் மற்றும் கருப்பு மூத்தவை எனப்படும் பெர்ரி வகை போன்றவையாகும்.


தடுப்பு முறைகள்

  • எஸ்.பில்லேரியானாவின் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வசந்த காலம் தொடங்கியதிலிருந்து திராட்சை தோட்டங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • பாரம்பரிய நடவடிக்கைகளில், உலர்ந்த மரப்பட்டைகளின் அடிமரம் மற்றும் கிளைகளை அகற்றுதல், வேலிகள் பயன்படுத்துதல், திராட்சை தோட்டங்களைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதிகளை சுத்தம் செய்தல்,களைகளை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், இயற்கை இறைபிடித்துண்ணிகளை ஆதரிக்க தேன்சுரக்கும் செடிகளை விதைத்தல் ஆகியன அடங்கும்.
  • பெரோமோன் பொறிகளை எண்ணிக்கைகளை தீர்மானிக்கவும், இனச்சேர்க்கைகளை தகர்க்கவும் பயன்படுத்தலாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க