Eucosma critica
பூச்சி
சிற்றிலைகள் ஒன்றாக பின்னிக்கொள்ளும். முனையில் இருக்கும் மொட்டுகள் பெரும்பாலும் வலைக்குள் இருக்கும், இது தளிர் வளர்ச்சியைத் தடுக்கும். இலைகள் வெள்ளையாகி காய்ந்துவிடும்.
இந்நோய்க்கு எதிரான உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து எதுவும் இன்றுவரை நமக்குத் தெரியவில்லை. அறிகுறிகள் தென்படுவதைக் குறைக்க அல்லது இந்தப் பூச்சியைக் கவரும் தன்மையைக் குறைக்க ஏதேனும் வெற்றிகரமான முறை உங்களுக்குத் தெரிந்தால், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். பூச்சிக்கொல்லிகளை பரந்த அளவில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இவை நன்மை செய்யும் பூச்சிகளைக் கொல்லக்கூடும். ஹெலிகோவர்பா கம்பளிப்பூச்சி, புள்ளிகள் கொண்ட காய் துளைப்பான் அல்லது இறகுப்பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் இரசாயனங்கள் இலை வலைப்பூச்சியை சமாளிக்கும் திறன் கொண்டவை.
யூகோஸ்மா கிரிட்டிகா (முன்னர் கிராஃபோலோதா கிரிட்டிகா) என்ற பூச்சியின் முட்டைப்புழுவால் இந்தச் சேதம் ஏற்படுகிறது. பழுப்பு நிறத்தில் இருக்கும் பெண் அந்துப்பூச்சிகள், இலை மொட்டுகள் மற்றும் இளம் இலைகளில் முட்டையிடுகின்றன. கிரீமியான மஞ்சள் நிற முட்டைப்புழுக்கள் பின்னர் இலைகளை ஒன்றாகப் பிணைத்து, வலைக்குள் இருந்துகொண்டு மென்மையான தளிர்களை உண்ணும். வலையால் பின்னப்பட்ட இலைக்குள்ளேயே கூட்டுப்புழுவாகும் நிலை நிகழும். பருவம் முழுவதும் தாவரங்கள் பாதிக்கப்படும். நாற்றுக் கட்டத்தில் பூச்சித் தாக்குதல் ஆரம்பித்தால் பயிர் கடுமையாகப் பாதிக்கப்படும். 23 டிகிரி செல்சியஸ் மற்றும் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு இடையில் பூச்சியின் தாக்கம் சாதகமாக இருக்கும். இது ஒரு சிறிய பூச்சி, மேலும் இது அதிக பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்தாது.