Metcalfa pruinosa
பூச்சி
பெரும்பாலும் இலைகளுக்கு அடிப்பகுதியிலும், கிளைகள் மற்றும் பழங்களில் காணப்படும் வெள்ளை, கம்பளி போன்ற, மெழுகு பொருட்களானது தட்டைப்பூச்சிகள் இருப்பதை நமக்கு சுட்டி காட்டுகிறது. இளம் பூச்சிகளால் உற்பத்தி செய்யப்படும் இந்த படிமங்கள், சில நேரங்களில் மாவுப்பூச்சிகள் அல்லது காட்டன் பஞ்சு செதில் பூச்சிகளின் (மற்றும் இது மிகவும் சேதங்களை ஏற்படுத்தும் பூச்சிகள்) நோய்த்தொற்றுகளால் ஏற்படும் படிமங்களுடன் குழப்பிக்கொள்ள நேரிடும். சந்தேகம் ஏற்பட்டால், அதைத் தெரிந்துகொள்வதற்கு, பூச்சிகளை தொந்தரவு செய்து பார்க்கவும். தத்துப்பூச்சிகளை தொந்தரவு செய்யும்போது அவை குதிக்கும். முதிர்ந்த மற்றும் இளம் பூச்சிகள் தாவர திசுக்களை துளையிட்டு, சாறுகளை உறிஞ்சுவதற்கான வாய்ப்பகுதிகளைக் கொண்டிருக்கும். முதிர்ந்த பூச்சிகள் பெரும்பாலும் அதிக அளவில் உண்டு, அதிகப்படியான சர்க்கரையை தேன்துளியாக வெளியேற்றும், இவை கரும்பூசண நோய் வளர்ச்சியை ஆதரிக்கும். இந்த பூச்சியின் அடர்த்தியான எண்ணிக்கை நேரடியாகவோ அல்லது சந்தர்ப்பவாத பூஞ்சைகளின் வளர்ச்சி மூலமாகவோ புதிய தளிர்களின் வளர்ச்சியினை குன்றச் செய்து, மரங்களை பலவீனப்படுத்தும். மற்ற பாதிக்கப்படக்கூடிய தாவர புரவலன்களில் அறிகுறிகள் இன்னும் அதிகமாக இருக்கக்கூடும்: இலைகள் வெளிறிய நிறமாகுதல் மற்றும் சிதைந்து போகுதல், தளிர்களின் நுனிப்பகுதி உலர்ந்து போகுதல்; விதைகள் உருக்குலைந்து சுருங்கி போகுதல் உள்ளிட்டவை அறிகுறிகளுள் அடங்கும்.
டிரைனிட் குடும்பத்தின் ஒட்டுண்ணி குளவியான சிலோடிரைனஸ் டைப்லொசைபே, மெட்கல்ஃபா புருய்னோசாவின் இளம் பூச்சிகளின் மேல் தனது முட்டைகளை இடும், இது இந்த பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும். சோப்பு கரைசல்கள் இந்த இளம் பூச்சிகளை இலைகளில் இருந்து சரிய செய்து, நிலத்தில் விழச்செய்யும். மேலும், இது கரும் பூசணத்தால் பின்னர் காலனித்துவப்படுத்தப்படும் இலைகளில் இருக்கும் தேன்துளிகளை சுத்தம் செய்ய சிறந்த தீர்வாக இருக்கிறது. இருப்பினும், பூச்சிக்கொல்லி சிகிச்சைகள் பயன்படுத்தாத நிலையில், இந்தப் பூச்சிகள் மீண்டும் வருகின்றன.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். இவற்றின் செயல்பாட்டு இயக்கத்தின் காரணமாக, முதிர்ந்த பூச்சிகளின் இரசாயன கட்டுப்பாடு மிகவும் கடினமாக உள்ளது. அதிகப்படியான பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தக்கூடிய சிறந்த வழி, இளம் பூச்சிகளைக் கட்டுப்படுத்த சரியான நேரத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளாகும். பொதுவாக கரும்ப்பூசணத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இவை மிகவும் சேதம் விளைவிக்ககூடிய காரணியாகும். அங்கீகரிக்கப்பட்ட இடங்களில், வயல்களின் ஓரத்தில் டெல்டாமெத்ரின், பைரெத்ராய்ட்ஸ் அல்லது டைமீத்தோயேட் போன்றவற்றைக் கொண்ட தெளிப்பான்களை இலைத்திரள்கள் அல்லது பழங்களின் மீது தெளிப்பதன் மூலம் இந்த பூச்சிக்கு எதிரான நல்ல கட்டுப்பாட்டை அடைய முடியும்.
இந்த நோய்க்கான அறிகுறிகளானது மெட்கல்ஃபா புருய்னோசா என்பவற்றின் முதிர்ந்த மற்றும் இளம் தத்துப்பூச்சிகளால் ஏற்படுகிறது. இது மிகவும் எல்லா சூழலிலும் பொருந்திக்கொள்ளக்கூடிய பூச்சி; பல வகையான சுற்றுசூழலில் உயிர் வாழக்கூடியது. இவை குறுகிய தூரம் வரை பறந்து சென்று பரவுகிறது; மற்றும் இவை ஒளிகளால் மிகவும் ஈர்க்கப்படக்கூடியவை. மோசமான வயல்வெளி நடைமுறைகள் மற்றும் மனிதர்களின் தலையீடுகள் போன்றவை நீண்ட தொலைவிற்கு பரவுவதற்கான காரணியாகும். முதிர்ந்த பூச்சிகள் பழுப்பு முதல் சாம்பல் நிறத்தில் காணப்படும்; மேலும் இவை பிரகாசமான ஆரஞ்சு கண்களையும் மற்றும் சிதறிய வெள்ளைப் புள்ளிகளுடன் கூடிய முக்கோண வடிவிலான முன் இறக்கைகளையும் கொண்டுள்ளது. இவற்றை முதலில் பார்க்கும்போது அந்துப்பூச்சிகள் என்று நாம் தவறாக நினைத்துக்கொள்ளக்கூடும். முதிர்ந்த மற்றும் இளம் பூச்சிகள் ஏராளமான நீல வெள்ளை மெழுகுகளால் மூடப்பட்டிருக்கின்றன, பின்னர் இவை அடர்த்தியான வெள்ளை குடுமி போன்ற முடிகளாக மாற்றம் பெறுகின்றன. பெண் பூச்சிகள் இலையுதிர் காலத்தில், வழக்கமாக மரப்பட்டையின் சிறு கிளைகள் அல்லது மென்மையான பட்டையில் உள்ள துளைகளில் ஏற்கனவே இருக்கும் காயங்களில் 100 முட்டைகளை இடும். வசந்த காலத்தில் நிலைமைகள் சாதகமானதாக இருக்கும் போது, முட்டையிலிருந்து இளம் பூச்சிகள் வெளியேறி தாவரத் திசுக்களை உண்ண ஆரம்பிக்கும். இவை பொதுவாக குறைந்த சேதத்தை ஏற்படுத்தும்; ஆனால் ஏற்கனவே காயமடைந்த மரங்களில் உதாரணமாக உறைதல் மூலம் காயமடைந்த மரங்களில், மிகவும் பிரச்சனையாக அமையும்.