மற்றவை

அரைக்காவடிப் புழு

Autographa nigrisigna

பூச்சி

சுருக்கமாக

  • சிற்றிலைகள் மற்றும் காய்களில் உண்ணும் சேதம்.
  • இலைகளில் குண்டடி பட்ட துளை போன்ற தோற்றம்.
  • பச்சை நிற முட்டைப்புழுக்களின் தோற்றம்.
  • தாவரங்களில் சாம்பல் நிற வடிவமுடைய அந்துப்பூச்சி.

இதிலும் கூடக் காணப்படும்


மற்றவை

அறிகுறிகள்

அரைக்காவடிப்புழு சிற்றிலைகள் மற்றும் காய்களை உண்கிறது. இளம் முட்டைப்புழுக்கள் சிற்றிலைகளை சுரண்டுகிறது, அதே நேரத்தில் வளர்ந்த பூச்சிகள் மொட்டுகள், பூக்கள், காய்களை உண்டு, பூவடிச்செதிலுடன் காயின் அடிப்பகுதியை விட்டுவிடுகின்றன. காய்களை உண்ணும்போது, அரைக்காவடிப்புழு காயின் சுவற்றில் கிழிந்த, ஒழுங்கற்ற சேதத்தை ஏற்படுத்துகின்றன. இலைகள் துளையிடப்பட்டு, அதிகப்படியான தொற்றுநோய்களின் போது, இலைகளை எலும்புக்கூடு போல் ஆக்கும். கடுமையான சந்தர்ப்பங்களில், தாவரங்கள் முற்றிலுமாக அழிந்து போகலாம். பொதுவாக, அறிகுறிகள் பறவைகளின் சேதங்களோ என குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, சிலந்திகள், கண்ணாடி இறக்கை பூச்சிகள், எறும்புகள் மற்றும் பிற இயற்கை எதிரிகள் போன்ற வேட்டையாடும் இனங்களை ஊக்குவிக்கவும். நான்கு வாரங்களுக்கு டிரைக்கோகிராம்மா கிலோனிஸை வாராந்திர இடைவெளியில் ஹெக்டேருக்கு 1.5 லட்சம் என்ற அளவில் வயலில் அறிமுகப்படுத்தவும். என்பிவி (நியூக்ளியோபோலிஹெட்ரோவைரஸ்), பேசிலஸ் துரிஞ்ஜியென்சிஸ் அல்லது பௌவேரியா பாசியானா ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட உயிரி பூச்சிக்கொல்லிகளும் அரைக்காவடிப்புழுவைக் கட்டுப்படுத்த உதவும். பூச்சியைக் கட்டுப்படுத்த தாவரவியல் தயாரிப்புகளான வேப்பஞ்சாறு மற்றும் மிளகாய் அல்லது பூண்டு சாறு ஆகியவற்றை இலைத்திரள்கள் மீது தெளிக்கலாம்.பூக்கும் கட்டத்திலிருந்து தொடங்கி 10-15 நாட்கள் இடைவெளியில் ஹெக்டருக்கு டீபோல் 0.1% மற்றும் வெல்லம் 0.5% உடன் என்.பி.வி. 250 எல்.ஈ-யைப் பயன்படுத்துங்கள். வேப்ப எண்ணெய் அல்லது புங்கம் எண்ணெய் 80 ஈ.சி. @ 2மி.லி /லி தடவவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். 10 தாவரங்களுக்கு 2 க்கும் மேற்பட்ட முட்டைப்புழுக்கள் காணப்பட்டால், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும். அரைக்காவடிப்புழுவின் எண்ணிக்கையை குறைக்க குளோர்பைரிபோஸ் மற்றும் குயினால்ஃபோஸ் பரிந்துரைக்கப்படுகின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

ஆட்டோகிராஃபா நிக்ரிசிக்னாவின் முட்டைப்புழுவால் சேதம் ஏற்படுகிறது. அரைக்காவடிப்புழுவின் அந்துப்பூச்சி ஒரு குறிப்பிட்ட அமைப்பினுடைய முன் இறக்கைகளை கொண்டுள்ளது. முட்டைகள் கோள வடிவில் இருக்கும், மேலும் சிற்றிலைகளில் 40 முட்டைகள் கொத்துக்களாக இடப்படுகின்றன. முட்டைப்புழுக்கள் மற்றும் அரைக்காவடிப்புழு பச்சை நிறத்தில் இருக்கின்றன. ஒரு தலைமுறை உருவாக 4 வாரங்கள் ஆகும். முட்டையின் காலம் சுமார் 3-6 நாட்களிலும், முட்டைப்புழுவின் காலம் 8-30 நாட்களிலும் நிறைவடைகிறது, அதே நேரத்தில் கூட்டுப்புழுவின் காலம் 5-10 நாட்கள் நடைபெறுகிறது.


தடுப்பு முறைகள்

  • சகிப்புத்தன்மை கொண்ட வகையைத் தேர்வுசெய்க.
  • அருகருகே தாவரத்தை நடவு செய்வதையும், தாமதமாக நடவு செய்வதையும் தவிர்க்கவும்.
  • நல்ல முறையில் உரமிட்டு மற்றும் நீர்ப்பாசனத்தை திட்டமிட்டு பெரிய மற்றும் முக்கிய தாவரங்களை வளர்க்க முயற்சி செய்யவும்.
  • வாராந்திர இடைவெளியில் உங்கள் தாவரங்களை கண்காணித்து முட்டைப்புழுக்கள் ஏதேனும் தென்படுகிறதா என சரிபார்க்கவும்.
  • அந்துப்பூச்சியின் எண்ணிக்கையை சரிபார்க்கவும் கொல்லவும் ஒளி மற்றும் பெரோமோன் பொறிகளை நிறுவலாம்.
  • 2 ஹெக்டேருக்கு ஒரு ஒளி பொறி நிறுவப்பட வேண்டும், அதே நேரத்தில் 50 மீ இடைவெளியில் ஹெக்டேருக்கு 5 பொறிகள் நிறுவப்படுகின்றன.
  • வேட்டையாடும் பறவைகளுக்கு ஹெக்டேருக்கு 50 என்ற அளவில் பறவைகள் உட்காருவதற்கான இடங்களை நிறுவலாம்.
  • உயிரியல் பறவை உட்காரும் இடங்களுக்கு சேவிக்க உயரமான சோளத்தை ஒப்பீட்டு பயிராக வளர்க்கவும்.
  • முட்டைப்புழுக்கள் மற்றும் முதிர்ந்த பூச்சிகளை முடிந்தவரை சேகரித்து அழிக்கவும்.
  • வேட்டையாடுபவைகளுக்கு பூச்சியை வெளிப்படுத்துவதற்காக அறுவடைக்குப் பிறகு உங்கள் வயலை உழவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க