மற்றவை

பயறு நெற்று துளைப்பான்

Helicoverpa armigera

பூச்சி

சுருக்கமாக

  • பூக்கள் மற்றும் காய்களில் உண்ணும் சேதங்கள் காணப்படும்.காய்கள் வட்ட வடிவிலான துளைகளைக் கொண்டிருக்கும்.
  • இலை உதிர்வு ஏற்படும்.


மற்றவை

அறிகுறிகள்

முட்டைப்புழுக்கள் தாவரங்களின் அனைத்து பாகங்களையும் உண்ணும், ஆனால் அவை பூக்கள் மற்றும் காய்களை உண்ண விரும்புகிறது. உண்ணும் துளைகள் காய்களில் காணப்படும். சில நேரங்களில், உண்ணும்போது காய்களில் முட்டைப்புழுக்கள் தொங்கிக் கொண்டிருப்பதை காணலாம். பூக்கள் மற்றும் காய்கள் இல்லாத போது, முட்டைப்புழுக்கள் இலைகள் மற்றும் தளிர்களை உண்ணும், இவை இலை உதிர்வை ஏற்படுத்துகின்றன.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நன்மை பயக்கும் ஒட்டுண்ணி பூச்சிகள் அல்லது துளைப்பான் பூச்சியை தாக்கும் ஹெலிகோவெற்பா ஆகியவற்றின் எண்ணிக்கையை வயலிலும் மற்றும் வயலை சுற்றிலும் குறிப்பிட்ட அளவில் தக்கவைத்துக்கொள்ளுங்கள். டிரைகோக்கிராமா குளவிகள், மைக்ரோப்லிட்டிஸ், ஹெட்டோரோபெல்மா, நெடெலியா இனம், பெரிய கண் வண்டு, பளபளப்பான கவச வண்டுகள் மற்றும் இரைபிடித்துண்ணும் முள் கவச வண்டு போன்ற இரைபிடித்துண்ணி வண்டுகள் இந்த துளைப்பானின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. எறும்புகள் மற்றும் சிலந்திகள் முட்டைப்புழுக்களை தாக்குகின்றன. என்பிவி (நியூக்ளியோபாலிஹிடோ வைரஸ்), மெட்டார்ஹீலியம் அனிசோப்லியே, பௌவேரியா பாசியானா மற்றும் பேசில்லஸ் துரிங்ஜென்ஸிஸ் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட உயிரியல்-பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தலாம். பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பஞ்சாறு, மிளகாய் அல்லது பூண்டு சாறு போன்ற தாவர தயாரிப்புகளை இலைத்திரள்களின் மீது தெளிக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். இரசாயன அணுகுமுறையின் அவசியத்தை உறுதிப்படுத்த பூச்சிகளின் எண்ணிக்கையை கண்காணியுங்கள். பொருளாதார ரீதியிலான வரையெல்லையானது தொடர்ச்சியான மூன்று இரவுகளில், ஏக்கருக்கு 4 பொறிகள் அமைக்கப்பட்ட நிலத்தில் ஒரு இரவுக்கு 8 அந்துப்பூச்சிகள் என அமைக்கப்பட்டுள்ளது. பைரித்ராய்டு என்பவற்றை அடிப்படையாக கொண்ட பூச்சிக்கொல்லிகளுக்கு குறிப்பிட்ட அளவு எதிர்க்கும் திறனை பூச்சிகள் உருவாக்கியுள்ளன.

இது எதனால் ஏற்படுகிறது

முதிர்ந்த பூச்சிகள் சுமார் 1.5 செ.மீ. நீளமும், அதன் இறக்கைகள் கிட்டத்தட்ட 4.0 செமீ நீளமும் கொண்டிருக்கும். அவற்றின் சாம்பல், பழுப்பு நிற உடல் மயிரடர்ந்த மார்புப்பகுதியைக் கொண்டிருக்கும். வெளிர் பழுப்பு நிற முன் இறக்கைகளானது கோடுகள் உடைய கரும் பழுப்பு நிற பட்டையையும், ஓரங்களில் கரும்புள்ளிகளையும் கொண்டிருக்கும். அதன் பின் இறக்கைகளில் மஞ்சள் நிற வெளிக்கோட்டுடன் வெள்ளை நிறத்தில் இருக்கும், மற்றும் அதன் ஓரங்களில் இணைப்புத் திட்டுக்களுடன் பரந்த கருப்பு பட்டை காணப்படும். பூக்கும் தாவரங்களில் அல்லது பூக்கவிருக்கும் தாவரங்களில் பெண் பூச்சிகள் மஞ்சள் கலந்த வெள்ளை முட்டைகளை இடுகின்றன. முட்டைப்புழுக்களின் தோற்றம், அவற்றின் வளர்ச்சி நிலைகளை பொறுத்து வேறுபடுகின்றன, ஆனால் அவை அனைத்தும் ஒரே மாதிரியான வெளிறிய வயிற்றுப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை முதிர்ச்சியடையும் போது, அவற்றின் பக்கவாட்டில் சிறிய கருப்பு புள்ளிகள் மற்றும் இரு பிரகாசமான வெள்ளை அல்லது மஞ்சள் நிற கோடுகள் உருவாகும். அவற்றின் வெவ்வேறு வாழ்க்கை நிலைகளின் கால அளவு சுற்றுச்சூழல் நிலைமைகளுடன், பெரும்பாலும் வெப்பநிலை மற்றும் கிடைக்கப்பெறும் உணவு ஆகியவற்றுடன் நெருக்கமாக தொடர்புடையதாக இருக்கிறது.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்புதிறன் கொண்ட தாவர வகைகளை தேர்ந்தெடுக்கவும் (எ.கா.
  • Co-6 அல்லது Co-7).
  • விதைகளை விதைக்கும்போது தாவரங்களுக்கு இடையே குறைந்தபட்ச இடைவெளியை பராமரிக்கவும்.
  • துவரம் பருப்பு, தட்டைப்பயறு அல்லது பருப்பு போன்ற எல்லை பயிர்களை நடவு செய்வதன் மூலம் நன்மை பயக்கும் பூச்சிகளின் எண்ணிக்கையை பராமரிக்க முயற்சி செய்யவும்.
  • நோய்ப் பூச்சியை கவர உங்கள் வயலைச் சுற்றி பொறி பயிர்களை (ஆமணக்கு அல்லது கிரைஸாந்தெமம் மேரிகோல்ட்) அமைக்கவும்.
  • ஏக்கருக்கு 10 என பறவை உட்காரும் இடங்களை அமைக்கவும்.
  • ஏதேனும் முட்டைப்புழுக்கள் தென்படுகிறதா என தாவரங்களை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • ஒளி பொறிகளைப் பயன்படுத்தி (1/5 ஏக்கர்), மாலை நேரங்களில் கவனிக்கவும்.
  • பாரா-பெரோமோன் பொறிகளை (5/1 ஏக்கர்) அமைக்கவும்.
  • நல்ல உரமிடும் திட்டத்தின் மூலம் பெரிய மற்றும் முக்கிய தாவரங்களை வளர்க்க முயற்சி செய்யவும்.
  • வயல்களுக்கு அதிகப்படியான நீர்ப்பாசனம் செய்தால் அது நோய்ப்பூச்சியை அதிகரிக்கும் என்பதால் அவ்வாறு செய்வதைத் தவிர்த்துக் கொள்ளவும்.
  • முட்டைப்புழுக்களை இரைப்பிடித்துண்ணிகளுக்கு வெளிப்படுத்த அறுவடைக்குப் பிறகு குறைந்தது 10 செ.மீ ஆழத்தில் நிலத்தை உழுதல் வேண்டும்.
  • பூச்சியின் வளர்ச்சியைத் தடுக்க புரவலன் அல்லாத பயிர்களைக் கொண்டு ஊடுபயிர் செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க