Euschistus spp.
பூச்சி
பச்சாடைப்பூச்சிகள் மக்காசோளத்தை முக்கியமாக நாற்று நாடும் போது மற்றும் வளரும் ஆரம்ப நிலையில் தாக்குகிறது. முக்கிய தண்டுகளில் ஏற்படும் சேதத்தை ஈடு செய்ய கூடுதல் கிளை தண்டுகளை (கூடுதல் கிளைகள்) உற்பத்தி செய்கிறது. வண்டுகள் இலைகளை உண்ணுவது ஒரே மாதிரியான அமைப்புகளை கொண்ட துளைகளின் வரிசைகளால் வகைப்படுத்தப்படுகிறது. துளைகளின் அளவு பெரிதும் மாறுபடும், ஆனால் அவை பொதுவாக மஞ்சள் ஒளி வட்டங்களால் சூழப்பட்டு நீள்வட்டவடிவ அல்லது நீட்டமாக இருக்கும். மெல்லிய சிதைந்த பகுதி தண்டுகளில் காணப்படும், பாச்சாடை பூச்சி உண்ணுவதால் இவை ஏற்படுகிறது. கடுமையாக பாதிக்கப்பட்ட தாவரங்கள் உருக்குலைந்த வடிவம், குன்றிய வளர்ச்சி மற்றும் குறைந்த விளைச்சலை ஏற்படுத்தும். கதிர்களிலும் உருக்குலைவு, கால தாமதமாக முதிர்ச்சியடைதல் மற்றும் பெரும்பாலும் உட்கரு சரியாக முழுமையடையாமல் இருத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும். பச்சாடை பூச்சிகள் மிகவும் நன்றாக பறக்கக் கூடியது மற்றும் பயிர்களுக்கு இடையே நன்றாக பரவக்கூடியது, இதன் விளைவாக விளைச்சல் இழப்பு ஏற்படுகிறது.
ஒட்டுண்ணி டசினிட் ஈக்கள் மற்றும் குளவிகள் பச்சாடை பூச்சியின் முட்டை மற்றும் முட்டைப்புழுவில் தங்களது முட்டைகளை இடுகின்றன. பின்னர் அவற்றின் மாமிசப்புழுவை உண்ணுகின்றன. பறவைகள் மற்றும் சிலந்திகள் தொற்றுநோயை குறைக்க உதவும். யூக்கலிப்டஸ் யூரோகிராண்டிஸ் எண்ணெய்கள் பச்சாடைபூச்சிகள் மற்றும் அவற்றின் இளம் பூச்சிகளுக்கு நஞ்சாக இருக்கிறது.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பைரித்ராய்ட்ஸ் தொகுதியின் பூச்சிக்கொல்லி விதை சிகிச்சைகள் ஓரளவு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தி, நாற்றுகளின் சேதத்தை தவிர்க்க உதவுகிறது. பைபென்திரின் அடிப்படையாகக் கொண்ட பூச்சிக்கொல்லிகளின் இலைவழி பயன்பாடு பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இந்த வண்டுகளின் தோற்றம், அவற்றின் இனங்களை பொறுத்து சற்று மாறுபடும். பழுப்புநிற முதிர்ந்த பச்சாடைபூச்சி பழுப்பு நிற புள்ளிகளுடன் கவச வடிவத்தில், தோல் போன்ற இறக்கை மற்றும் அதன் முதுகில் முக்கோண அமைப்பைக் கொண்டிருக்கும். முட்டைகள் பீப்பாய் வடிவத்தில், கொத்துகளாக இலைகளில் முட்டையிடப்படும். இளம் பூச்சிகள் வட்டவடிவில், கருப்பு நிறத்தில், இறக்கை இல்லாமல் இருக்கும். முதிர்ந்த மற்றும் இளம் பூச்சிகள் தனது கூர்மையான வாய் பகுதிகளால், தாவரங்களை சேதப்படுத்தி, திசுக்களை துளைத்து, உள்ளடக்கங்களை ஜீரணிக்க செய்ய பொருட்களை உட்செலுத்தி, பின்னர் கரைந்த தாவர பொருட்களை மறுபடியும் உட்கொள்கின்றன. இது உருக்குலைவு மற்றும் குன்றிய வளர்ச்சியை ஏற்படுத்துகிறது, பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது, இந்த பாதிப்பு இன்னும் அதிகமாக காணப்படுகிறது. பழங்கள் மற்றும் விதைகள் மீது, உண்ணும் செயல்பாடு, கறை மற்றும் குறைபாடுகளை ஏற்படுத்தி பொருட்களின் தரத்தை பாதிக்கிறது. பச்சாடை பூச்சிகள் களைகள் மற்றும் சோயாபீன், காய்கறிகள் மற்றும் மண புல் வகை போன்ற பல்வேறு தானியங்களை மாற்று புரவலனாகக் கொண்டுள்ளது.