மற்றவை

கருப்பு வெட்டுப்புழு

Agrotis ipsilon

பூச்சி

சுருக்கமாக

  • இலைகளில் சிறிய ஒழுங்கற்ற துளைகள் காணப்படும்.
  • தண்டுகள் நில மட்டமளவிற்கு வெட்டப்படும்.
  • பலவீனமான வளர்ச்சி அல்லது இறப்பு ஏற்படக்கூடும்.
  • தாவரங்கள் தாவரங்கள் வாடி, சாய்ந்துவிடக்கூடும்.

இதிலும் கூடக் காணப்படும்

35 பயிர்கள்
ஆப்பிள்
வாழைப் பழம்
பார்லிகோதுமை
விதையவரை
மேலும்

மற்றவை

அறிகுறிகள்

வெட்டுப்புழுக்கள் பல வகையான பயிர்களின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் தாக்குகிறது, ஆனால் இளம் நாற்றுகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. நாற்றுகள் வெளிவரும் போது மற்றும் வயல்களைச் சுற்றி களைகள் வளர்ந்திருக்கும் போது அதிகப்படியான கம்பளிப்புழுக்கள் படையெடுத்தால் சேதங்கள் கடுமையாக இருக்கும். இளம் கம்பளிப்புழுக்கள் நிலத்தின் அருகே உள்ள களைகள் அல்லது மக்காச்சோளம் இருந்தால் அவற்றை உண்ணும், மேலும் இவை மென்மையான இலைகளில் ஒழுங்கற்ற துளைகளை ஏற்படுத்தும். அவற்றின் முதிர்ந்த பூச்சிகள் சூரிய வெளிச்சத்தைத் தவிர்க்க நிலத்தில் புதைந்து இருக்கும் மற்றும் இவை இரவு நேரத்தில் தாவரத்தின் அடிப்பாகங்களை உண்ண வெளியே வரும். இளம் தாவரங்கள் நிலத்திற்கு அடியில் இழுத்து செல்லப்படும். நில மட்டத்தில், தண்டுகள் துண்டிக்கப்படலாம் ("வெட்டுப்பட்டு"), பலவீனமான வளர்ச்சி அல்லது இறப்புக்கு வழிவகுக்கும். வெட்டுப்புழுக்கள் தண்டுகளில் ஏற்படுத்தும் துளைகள், முதிர்ந்த தாவரங்கள் வாடி, சாய்வதற்கு வழிவகுக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

வெட்டுப்புழுக்கள் பல எதிரிகளைக் கொண்டிருக்கின்றன, அவை ஒட்டுண்ணிகள், ஈக்கள் மற்றும் வெட்டுக்கிளிகளைப் போன்ற வேட்டையாடும் பூச்சிகள் ஆகும். பாசில்லஸ் துரிஞ்சியன்சிஸ், நியூக்ளியோபாலிஹெட்ரோசிஸ் வைரஸ் மற்றும் பௌவெரியா பாசியானா போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட உயிர்-பூச்சிக் கொல்லிகள் சிறப்பான பூச்சிக் கட்டுப்பாட்டை வழங்குகின்றன. தேவையற்ற சிகிச்சையை தவிர்ப்பதன் மூலம் இயற்கையான விலங்குகள் (இரைப்பிடித்துண்ணிகள்) ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். வெட்டுப்புழுக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த குளோர்பைரிஃபோஸ், பீட்டா-சைபெர்மெத்ரின், டெல்டாமெத்ரின், லாம்ப்டா-சைஹலோத்ரின் போன்றவை அடங்கிய பொருட்களைப் பயன்படுத்தலாம். நடவு செய்வதற்கு முன்பு பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவது உதவும் ஆனால் அதிகமான பூச்சிகளின் படையெடுப்பு எதிர்பார்க்கப்பட்டால் மட்டுமே இவை பரிந்துரைக்கப்படுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

கருப்பு வெட்டுப்பூச்சிகள் சாம்பல் நிற பழுப்பு நிற உடலைக் கொண்ட வலுவான அந்துப்பூச்சிகள் ஆகும். இவை வெளிர் மற்றும் அடர் பழுப்பு நிற முன் இறக்கைகளையும், அதனுடன் ஓரங்களில் அடர் புள்ளிகளையும், வெள்ளை நிற பின் இறக்கைகளையும் கொண்டிருக்கும். இந்தப் பூச்சிகள் இரவில் செயல்படக்கூடியவை, பகலில் மண்ணில் ஒளிந்து கொள்ளும். பெண் பூச்சிகள் ஆண் பூச்சிகளைப் போலவே இருக்கும் ஆனால் சற்று அடர் நிறத்தில் காணப்படும். இவை முத்துக்கள் போன்ற வெள்ளை நிற முட்டைகளை (பின்னர் பழுப்பு நிறமாக மாறும்) தாவரங்களில், ஈரமான மண்ணில் அல்லது மண்ணில் உள்ள பிளவுகளில் ஒற்றையாகவோ அல்லது கொத்துக்களாகவோ இடும். முட்டையிலிருந்து புழுக்கள் வெளியேறுவது வெப்பநிலையைப் பெரிதும் சார்ந்திருக்கும் மற்றும் இவை வெளியேற 3 முதல் 24 நாட்கள் வரை (முறையே 30 ° செல்ஸியஸ் மற்றும் 12 ° செல்ஸியஸ்) ஆகும். இளம் முட்டைப்புழுக்கள் வெளிர் சாம்பல் நிறத்தில், மென்மையாக மற்றும் பிசுபிசுப்பான தோற்றத்துடன், 5 முதல் 10 மிமீ நீளத்தில் இருக்கும். முதிர்ந்த முட்டைப்புழுக்கள் அடர் பழுப்பு நிறத்தில், 40 மிமீ வரையிலான நீளத்தில், அதன் முதுகுப்பகுதிகளில் ஓடும் இரண்டு மஞ்சள் புள்ளிக் கோடுகளை கொண்டிருக்கும். இவை இரவில் உண்டு மற்றும் பகல் பொழுதில் மணல் பரப்பிற்கு அடியில் உள்ள சிறிய துளையினுள் சி வடிவில் சுருண்டு காணப்படும்.


தடுப்பு முறைகள்

  • நோய் பூச்சிகளின் உச்சகட்ட எண்ணிக்கையைத் தவிர்க்க ஆரம்பத்திலேயே நடவு செய்ய வேண்டும்.
  • முன்பு சோயாபீன்ஸ் விதைத்த வயலில் சோளத்தை நடவு செய்வதைத் தவிர்க்கவும்.
  • நடவு செய்வதற்கு 3 முதல் 6 வாரங்களுக்கு முன்பு, நிலத்தை உழுது முட்டைப்புழுக்களை புதைக்கவும் அல்லது இரைப்பிடித்துண்ணிகளுக்கு வெளிப்படுத்தவும்.
  • கருப்பு வெட்டுப்புழுக்களை ஈர்க்கும் சூரியகாந்தி செடிகளை வயல்களை சுற்றி நடவு செய்யவும்.
  • நடவு செய்வதற்கு முன்பு மற்றும் நாற்றுகள் வெளிவந்த பிறகு வயல்களில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் களைகளை அகற்றவும்.
  • அந்துப்பூச்சிகளைக் கண்காணிக்க அல்லது பிடிக்க ஒளி மற்றும் பெரோமோன் பொறிகளைப் பயன்படுத்துங்கள்.
  • இரைப்பிடித்துண்ணிகளுக்கு வெட்டுப்புழுக்களை வெளிப்படுத்த அல்லது அவற்றைக் காயப்படுத்த அடிக்கடி பயிர் செய்யவும்.
  • அறுவடைக்குப்பின்னர் தாவரக் கழிவுகளை ஆழமாக மண்ணில் புதைக்கவும்.
  • நடவு செய்வதற்கு முன் சில வாரங்களுக்கு நிலத்தை தரிசாக விடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க