நிலக்கடலை

புகையிலை கம்பளிப்பூச்சி

Spodoptera litura

பூச்சி

சுருக்கமாக

  • இலைகள் மற்றும் காய்களில் உண்ணும் சேதங்கள்.
  • இலை உதிர்வு.
  • அந்துப்பூச்சிகள் சாம்பல்-பழுப்பு நிற உடலுடன் மாறுபட்ட முன் இறக்கைக்களைக் கொண்டிருக்கும்.
  • இலையின் மேற்புறங்களில் முட்டைக் கொத்துக்கள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

39 பயிர்கள்

நிலக்கடலை

அறிகுறிகள்

புதிதாக வெளிவந்த முட்டைப்புழுக்கள் கூட்டமாக இலைகளை உண்டு, இலைத்திசுக்களை சுரண்டி, தாவரத்தில் உள்ள இலைகளை முற்றிலும் உதிரச் செய்துவிடுகிறது. முதிர்ந்த முட்டைப்புழுக்கள் இரவில் பரவி, இலைத்திரள்களை உண்ணும். பகல் நேரத்தில், அவை பொதுவாக தாவரங்களின் அடிப்பகுதியை சுற்றி மண்ணில் ஒளிந்து வாழ்கிறது. இலகுவான மண்ணில், முட்டைப்புழுக்கள் வேர்களை அடைந்து, அவற்றை சேதப்படுத்தும். அதிகமாக உண்ணப்படுவதால், இலைக்காம்புகள் மற்றும் கிளைகள் மட்டுமே எஞ்சியிருக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ட்ரிகோகிராம்மா சிலோனிஸ், டெலேநோமஸ் ரிமஸ் அல்லது அபான்ட்டிலிஸ் அப்பிரிகானஸ் போன்ற ஒட்டுண்ணிக் குளவிகள், முட்டைகள் அல்லது இளம்புழுக்களை உண்ணுகின்றன. அணு பாலிஹிட்ராசிஸ் வைரஸ் (என்பிவி) அல்லது பேசில்லஸ் துரிங்ஜென்சிஸ் ஆகியவற்றின் அடிப்படையிலான உயிரியல் பூச்சிக்கொல்லிகளும் நன்றாக வேலை செய்கிறது. மாற்றாக, பூச்சி நோய்க்கிருமி பூஞ்சை நொமுரீயா ரிலேயி மற்றும் செராட்டியா மார்செஸ்சென்ஸ் ஆகியவற்றையும் இலைகளில் தெளிக்கலாம். மாலை நேரங்களில் அரிசி தவிடு, வெல்லம் அல்லது பழுப்பு சர்க்கரை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இரைத்தூண்டில் கரைசல்களையும் மண்ணில் தெளிக்கலாம். வேப்பமர இலைகளின் தாவர எண்ணெய் சாறுகள் அல்லது உட்கருக்கள் மற்றும் பொன்காமியா கிலாப்ரா விதைகளின் சாறுகள் ஆகியவை ஸ்போடோப்டிரா லிட்டுரா முட்டைப்புழுவிற்கு எதிராக திறம்பட செயல்படுகிறது. எடுத்துக்காட்டாக, அசாதிராச்டின் 1500 பிபிஎம் @ 5 மில்லி / லி அல்லது என்எஸ்கேஇ 5% என்பவற்றை முட்டையாக இருக்கும் கட்டத்தில் பயன்படுத்தலாம், இது முட்டை குஞ்சு பொரிப்பதைத் தடுக்கிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். அதிகமாக பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவது அந்த நோய்ப்பூச்சி அதனுள் எதிர்ப்பு திறனை வளர்த்துக்கொள்வதற்கு வழிவகுக்கும். இளம் முட்டைப்புழுக்களை கட்டுப்படுத்த, பல வகையான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம், எடுத்துக்காட்டாக குளோர்பைரிஃபோஸ் (2.5 மிலி / லி), எமாமெக்டின் (0.5 கிராம் / லி), ஃப்ளூபெண்டையமைடு (0.5 மிலி /லி) அல்லது குளோரான்ட்ரானிலிப்ரோல் (0.3 மில்லி / லி ) அத்துடன் இண்டோக்ஸாகார்ப் மற்றும் பைஃபென்ந்திரின் ஆகியவற்றை பயன்படுத்தலாம். தூண்டில் கரைசல்கள் முதிர்ந்த முட்டைப்புழுக்களின் எண்ணிக்கையை திறம்பட குறைக்கின்றன, எடுத்துக்காட்டாக விஷ தூண்டில் (5 கிலோ அரிசி தவிடு + 1/2 கிலோ வெல்லம் + 500 மில்லி குளோர்பைரிஃபோஸ்).

இது எதனால் ஏற்படுகிறது

முதிர்ந்த அந்துப்பூச்சிகள் சாம்பல் பழுப்பு நிற உடலையும், வெள்ளை அலை போன்ற குறியீட்டை விளிம்புகளில் கொண்டு பல வண்ணங்களைக் கொண்ட முன் இறக்கைகளைக் கொண்டிருக்கும். அதன் பின் இறக்கைகள் பழுப்பு நிறக்கோடுகளை ஓரங்கள் மற்றும் நரம்புகளில் கொண்டு ஒளிபுகும் வெள்ளை நிறத்தில் காணப்படும். பெண்பூச்சிகள் நூற்றுக்கணக்கான முட்டைகளைக் கொத்துகளாக இலைபரப்பில் இடும், அவை பொன்னிற பழுப்பு நிற செதில்களால் மூடப்பட்டிருக்கும். அந்த முட்டைகளிலிருந்து வெளியேறும் முட்டைப்புழுக்கள், முடியில்லாத வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும். அவை விரைவாக பரவி, கூட்டமாக இலைகளை உண்ண ஆரம்பிக்கும். முதிர்ந்த முட்டைப்புழுக்கள் கரும்பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். அவை தன் விலாப்புறத்தில் கரும்புள்ளிகளையும், ஓரளவு தெளிவான வயிற்றுப்பகுதியையும் கொண்டிருக்கும். இரண்டு மஞ்சள் நெடுவரிசை பட்டைகள் அதன் பக்கவாட்டில் காணப்படும், அவற்றில் கருப்பு முக்கோணப் புள்ளிகள் இருக்கும். இந்த புள்ளிகளுக்கிடையே அதன் முதுகுப்புறத்தில் ஒரு ஆரஞ்சு பட்டை காணப்படும். முட்டைப்புழுக்கள் இரவு நேரத்தில் உண்டு, பகல் நேரத்தில் மண்ணில் ஒளிந்துகொள்ளும். இளம் உயிரிகாள் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் 15 முதல் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நன்கு செழித்து வளரக்கூடியவை, இதற்கான உகந்த வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ். குறைந்த ஈரப்பதம் மற்றும் அதிக அல்லது குறைவான வெப்பநிலை அந்துப்பூச்சிகளின் வாழ்நாள் மற்றும் மலம் கழிக்கும் தன்மையினை குறைக்கவல்லது.


தடுப்பு முறைகள்

  • உங்கள் சந்தையில் நோய் எதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகள் இருக்கிறதா என சோதிக்கவும்.
  • பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் காலத்தைத் தவிர்க்க சீக்கிரம் தாவரங்களை நடவு செய்யுங்கள்.
  • நீண்ட கால இடைப்பருவ வறட்சியைத் தவிர்க்க தொடர்ந்து நீர்ப்பாசனம் செய்யவும்.
  • சூரியகாந்தி, கரும்பு மற்றும் ஆமணக்கு எண்ணெய் செடி போன்ற கவர்ச்சிப் பயிர்களை வயல்களை சுற்றிலும் மற்றும் வயல்களுக்கு இடையில் நடுங்கள்.
  • அந்துப்பூச்சிகளை விரட்டும் ஓசிமம் (பசிலிகம்) வகைப் பயிர்களைப் பயன்படுத்தவும்.
  • பறவைகள் அமரும்படியான கிளைகளை வயலில் அங்காங்கே உருவாக்கவும்.
  • அந்துப்பூச்சிகளை ஈர்ப்பதற்காக ஒளி அல்லது பெரோமோன் பொறிகளைப் பயன்படுத்துங்கள்.
  • முட்டைகள், உண்ணும் சேதம் அல்லது முட்டைப்புழுக்கள் போன்ற நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • கவர்ச்சி தாவரங்கள் மற்றும் புரவலன்களில் இருந்து முட்டைகள் மற்றும் முட்டைப்புழுக்களை சேகரித்து, அழித்து விடவும்.
  • விதைத்த 15-20 நாட்களுக்கு பிறகு களைகளை நீக்கவும்.
  • பயிர் செய்யும்போது கவனமாக உங்கள் தாவரங்களை கையாளவும், தாவர சேதம் மற்றும் காயங்களைத் தவிர்க்கவும்.
  • உங்கள் கருவிகள் மற்றும் உபகரணங்களின் சுகாதாரத்தை பேணவும்.
  • ஸ்போடொப்டெரா கூட்டுப்புழுக்களை அவற்றின் இயற்கை எதிரிகள் மற்றும் வானிலை சார்ந்த காரணிகளுக்கு வெளிப்படுத்த நன்கு ஆழமாக நிலத்தை உழுதல் செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க