பருத்தி

புகையிலை மொட்டுப்புழு

Chloridea virescens

பூச்சி

சுருக்கமாக

  • மொட்டுகள், பூக்கள் மற்றும் முனைகளில் உள்ள மென்மையான இலைத்திரள் வளர்ச்சியில் சேதம்.
  • மொட்டுகள் மஞ்சள் நிறமாகி, தாவரத்திலிருந்து உதிர்ந்து விடும்.
  • 'பழங்களின்' அடிப்பகுதியில் உண்ணுவதால் ஏற்படும் துளைகள்.
  • பழங்கள் வெறுமையாக்கப்பட்டு, அவற்றின் மேற்பரப்பில் குடைவுகள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


பருத்தி

அறிகுறிகள்

அறிகுறிகளானது பயிரைப் பொறுத்து பெரிதும் மாறுபடும். முட்டைப் புழுக்களானது மொட்டுகள், பூக்கள் மற்றும் முனைகளில் உள்ள வளரும் இலைதிரள்களைத் துளையிட்டு, அவற்றை உண்டு, வளரும் திசுக்களுக்குச் சேதங்களை ஏற்படுத்தும். இனப்பெருக்கத் திசு கிடைக்கவில்லை என்றால், இலைகள், இலைக்காம்புகள் மற்றும் தண்டுகள் போன்ற மற்ற தாவர உறுப்புகளைத் தாக்கும். பாதிக்கப்பட்ட மொட்டுகள் மஞ்சள் நிறமாகி, தாவரங்களில் இருந்து உதிர்ந்து விடும். பருத்தி மற்றும் பயற்றின வகைகளில், ஓட்டைகள் மற்றும் ஈரப்பதமான கழிவுகள் நெற்றுகள் மற்றும் காய்களின் அடிப்பகுதியில் காணப்படும். கம்பளிப் புழுக்களின் மேலோட்டமான உண்ணும் செயல்பாட்டினால் ஏற்படும் பிளவுகள் அல்லது துளைகளும் பொதுவாகக் காணப்படும். சில சந்தர்ப்பங்களில், 'பழங்களானது' உட்புறமாக வெறுமையாக்கப்பட்டு, அழுகத் தொடங்கக்கூடும். பருத்திப் பயிர்களில், சேதங்களின் தோற்றமும், காயங்களின் அளவுகளும் சோளக்காது புழுவினால் ஏற்படுவதோடு ஒத்திருக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

குளவிகள் (பாலிஸ்டஸ் எஸ்பிபி) , பிகேயி வண்டுகள், டாம்செல் வண்டுகள், சிறிய கொள்ளை வண்டுகள் (ஓரியஸ் எஸ்பிபி.) மற்றும் சிலந்திகள் போன்ற இயற்கை எதிரிகளையும் ஊக்குவிக்க வேண்டும். காய்கறிகளில் டிரைக்கோகிராம்மா பிரட்டியோசம், கார்டியோக்கிள்ஸ் நிக்ரிசெப்ஸ் மற்றும் பிற பயிர் வகைகளில் காடீசியா மார்ஜினிவென்ட்ரிஸ் ஆகியவை ஒட்டுண்ணிகளில் அடங்கும். பயன்படுத்தக்கூடிய பிற ஒட்டுண்ணிகள்: ஆர்கிட்டஸ் மர்மோரேட்டஸ், மெட்டியோரஸ் ஆட்டோகிராபியே, நெட்டிலியா சாயி, பிரிஸ்டோமெரஸ் ஸ்பினேட்டர் மற்றும் காம்போலெட்டிஸ் எஸ்பிபி இனத்தைச் சார்ந்த பல பூச்சிகள். பேசில்லஸ் துரிஞ்ஜியென்சிஸ், நோஸ்மா எஸ்பிபி., ஸ்பிக்காரியா ரிலேய் அல்லது அணுவியல் பாலிஹெட்ரோசிஸ் வைரஸ் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளை புகையிலை மொட்டுப் புழுவைத் திறன்மிக்க வகையில் கட்டுப்படுத்தத் தெளிக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பல்வேறு காரணிகள் காரணமாக இந்த நோய்ப்பூச்சியைக் கட்டுப்படுத்துவது குறிப்பாகக் கடினமானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. குளோரன்டிரானிலிப்ரோல், ப்ளுபண்டையமைடு அல்லது எஸ்ஃபென்வலேரேட் ஆகியவற்றைக் கொண்ட பூச்சிக்கொல்லிகளை மொட்டுப்புழுவைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தலாம். சில முக்கிய பூச்சிக் கொல்லிகளுக்கான எதிர்ப்புத்திறன் பொதுவாகக் காணப்படுகிறது, அவற்றுள் பைரித்ராய்டு சிகிச்சைகளும் அடங்கும். பரந்தளவிலான பூச்சிக்கொல்லிகள் தவிர்க்கப்பட வேண்டும், ஏனெனில் அவை நன்மை பயக்கும் பூச்சிகளை அழித்துவிடக்கூடும்.

இது எதனால் ஏற்படுகிறது

சேதங்களானது குளோரிடியா விரெசென்ஸ் என்னும் புகையிலை மொட்டுப் புழுக்களினால் ஏற்படுகிறது. இது பல பயிர்களில் முக்கிய நோய்ப்பூச்சியாகத் திகழ்கிறது, அவற்றுள் சோயாமொச்சை மற்றும் பருத்தி ஆகியவை அடங்கும் (பொதுவாக பாலைவன பகுதிகளில்). அந்துப்பூச்சிகள் பழுப்பு நிறத்தில் காணப்படும் (இறக்கைகள் உட்பட), சில நேரங்களில், அவற்றில் லேசாக பச்சை நிறச்சாயங்களும் தென்படும். அவற்றின் முன் இறக்கைகளில் மூன்று கரும்பழுப்புப் பட்டைகள் குறுக்காகக் காணப்படும், சில நேரங்களில் இவை வெண்ணிற அல்லது பாலாடை நிற ஓரங்களையும் கொண்டிருக்கும். பின் இறக்கைகள் ஓரங்கள் நெடுகிலும் கருநிறப் பட்டைகளுடன் வெண்ணிறத்தில் காணப்படும். பெண் பூச்சிகளானது பழங்கள், மலர்கள் மற்றும் வளரும் முனைப் பகுதிகளில் கோள வடிவில், தட்டையான முட்டைகளை இடுகின்றன. முதிர்ச்சியடைந்த முட்டைப்புழுக்கள் மிகவும் அழிவுகரமானவை ஏனெனில் இவை மலர்கள் மற்றும் பழங்களில் அதிகப்படியான சேதங்களை ஏற்படுத்தும், பருவகாலத்தின் கடைசி வரை இவை சேதங்களை ஏற்படுத்தும் (தாவரங்களை மாற்றுவதற்குக் கடினமாக இருக்கும்). சுமார் 20 டிகிரி செல்சியஸிற்கு மேலான வெப்பநிலையில், அந்துப்பூச்சியால் 25 நாட்கள் வரை உயிர் வாழ முடியும்.


தடுப்பு முறைகள்

  • உங்கள் பகுதியில் கிடைக்கப்பெற்றால், நெகிழ்வுத்தன்மை உடைய தாவரங்களை நடவு செய்யவும்.
  • குறுகிய பருவகாலத்தை உடைய இரகங்களை நடவு செய்யவும் அல்லது பருவத்தின் ஆரம்பக் காலத்திலேயே விதைக்கவும்.
  • பூப்பூத்தலின் உச்சக்கட்ட நிலையின் 1 முதல் 2 வாரங்களுக்குப் பிறகு நோய்ப்பூச்சிக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா எனக் கண்காணிக்கத் தொடங்கவும்.
  • அந்துப்பூச்சிகளைக் கண்காணிக்க அல்லது பிடிக்க, பாலின பெரோமோன் கவரும் பொருட்களுடன் கூடிய இரைப் பொறிகளைப் பயன்படுத்தவும்.
  • விதைக்கும்போது தாவரங்களுக்கு இடையே போதுமான இடைவெளி விடவும்.
  • நல்ல களையெடுக்கும் செயல்பாடுகளைத் திட்டமிட்டு, செயல்படுத்தவும்.
  • சமச்சீரான உரங்களைப் பயன்படுத்தவும்.
  • அதிகப்படியான நீர்ப்பாசனத்தைத் தவிர்க்கவும்.
  • சாத்தியமானால், பயிர்கள் சீக்கிரம் முதிர்ச்சியடையும் வகையில் அவற்றைப் பராமரிக்கவும்.
  • நோய் பரவுவதைத் தவிர்க்க, அறுவடைக்குப் பிறகு அனைத்து அறுவடைக் கழிவுகளையும் அப்புறப்படுத்தி, அழித்து விடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க