சோயாமொச்சை

தெற்குப் படைப்புழுக்கள்

Spodoptera eridania

பூச்சி

சுருக்கமாக

  • வெள்ளை நிறத்தினால் கொத்தாகச் சூழப்பட்ட பச்சை நிற முட்டைகள் இலைகளில் இருக்கும்.
  • புழுக்கள் ஊட்டம் பெறுவதால் எலும்புக்கூடு போன்ற தோற்றத்தினை ஏற்படுத்தும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

சோயாமொச்சை

அறிகுறிகள்

இளம் புழுக்கள் இரவு நேரங்களில் ஊட்டம் பெறுபவை மற்றும் இவை இலைகளில் அடிப்புறத்தில் காணப்படும் இலைத் திசுக்களை உண்கின்றன, நரம்புகளைத் தவிர இலையின் அனைத்தையும் உண்பதால் பெரும்பாலும் எலும்புக்கூடு போன்ற தோற்றத்தினை ஏற்படுத்தும். அவை முதிர்ந்து தனியாக மாறியதும், காய்களுக்குள் துளைக்கின்றன. இவற்றிற்கு உணவுப்பற்றாக்குறை ஏற்படும்போது, கிளைகளின் மேற்பகுதியினை உண்கின்றன மற்றும் தண்டு திசுக்களைத் துளைத்துச் செல்கின்றன. சோயாபீன் ஒற்றைக்கலாச்சாரம் பின்பற்றப்படும் பகுதிகளில், இவை அதிவிரைவாக வளர்ந்து அதிகளவிலான இலை உதிர்தலை ஏற்படுத்தும். அங்கு அவை மிக முக்கியமான சோயாபீன் பூச்சியாகவும், அதிகப்படியான பாதிப்பு மற்றும் பொருளாதார வீழ்ச்சியினை ஏற்படுத்தும் காரணியாகவும் பார்க்கப்படுகிறது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பூச்சிகளின் பரவலைக் குறைக்க இயற்கையான எதிரிகளை உருவாக்கலாம். உதாரணமாக, கோடெசியா மாரிஜ்னிவென்ட்ரிஸ், செலோனஸ் இன்சுலரிஸ், மெடேரஸ் ஆடோக்ராபே, மெடெரஸ் லபேக்மே அல்லது கேம்பொபோலெடிஸ் ஃப்லவிசிங்க்டா போன்ற பாராசாய்டு வண்டுகளைப் பயன்படுத்தலாம். லேஸ்விங்க்ஸ் மற்றும் லேடிபேர்ட் போன்றவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம். சில பறவைகள் முதிர்ந்த புழுக்களை உணவாகக் உட்கொள்ளும். பெவெரியா பாசியானா போன்ற பூஞ்சைகளைக் கொண்டும் புழுக்களுக்கு நோயினை ஏற்படுத்தலாம். வேப்ப எண்ணெய்யினை உணவுத் தடையாக இளம் உயிரிகளுக்குப் பயன்படுத்தலாம். இருப்பினும், இளம் உயிரிகளை தாவரவியல் பூச்சிக்கொல்லிகளால் கட்டுப்படுத்துவது கடினம்.

இரசாயன கட்டுப்பாடு

எப்போதும் உயிரியல் முறைப்படி செடிகளுக்குச் சிகிச்சையளிப்பதை, பாதுகாக்கும் வழிமுறைகளுடன் ஒருங்கிணைத்துக் கையாளவும். இலைவழி தெளித்தல் மூலம் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் உதவியுடன், தெற்கு படைப்புழுக்கள் ஆரம்பநிலையில் இருக்கும்போது கட்டுப்படுத்தலாம். பூச்சிக்கொல்லிகளின் நச்சுத்தன்மையினைப் பொறுத்து அவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது அமையும். சிந்தெடிக் பைரெத்ராய்ட்ஸின் குழுக்களை இவற்றிற்கு எதிராகப் பயன்படுத்தி பூச்சிகளை அழிக்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

தெற்கு படைப்புழுக்கள், ஸ்போடோப்டெரா எரிடானியா இளம் உயிரிகளால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. முதிர்ந்த புழுக்கள் சாம்பல்-பழுப்பு நிறத்தில் முன் இறக்கைகளில் அடையாளங்களையும் மற்றும் முத்து-வெள்ளை நிறத்தில் ஒளி பொருந்திய பின் இறக்கைகளையும் கொண்டிருக்கும். பீன் வடிவமுடைய பகுதி இறக்கைக்கு நடுவில் இருக்கும். பெண் பூச்சிகள் பச்சை நிறத்தில் கூட்டமாக இலைகளுக்கு அடிப்புறத்தில் முட்டைகளை இடும், இதில் அவற்றின் உடலில் இருந்த வெள்ளை செதில்களும் கலந்திருக்கும். இளம் உயிரிகள் ஆரம்பத்தில் கருப்பு உடலுடன் சிதறிய வெள்ளைப் புள்ளிகளைக் கொண்டிருக்கும், மற்றும் சிவப்பு பழுப்பு நிறத் தலையினைக் கொண்டிருக்கும். ஒரு மங்கலான வெள்ளைக் கோடு அருகிலும், மஞ்சள் கோடுகள் பக்கவாட்டிலும் அமைந்திருக்கும். இளம் உயிரிகளின் பிந்தைய நிலைகளில், புழுக்களின் தோல் அடர் நிறத்தில், இரண்டு வரிசையான கருப்பு முக்கோணங்களையும், அதனுடன் இணைந்த அடர் வளையங்களை முதற்பகுதியிலும் கொண்டிருக்கும். 20-25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இவற்றிற்கு உகந்த வெப்பநிலையாகும், 30 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலை அமையுமாயின் இவற்றின் வாழ்க்கைச் சுழற்சி தடைபடும்.


தடுப்பு முறைகள்

  • கடந்த மூன்று மாதங்களில் எவ்விதப் பூச்சிகளினாலும் பாதிக்கப்படாத இடங்களில் இருந்து பெறப்பட்ட விதைகளைப் பயன்படுத்தவும்.
  • சான்றளிக்கப்பட்ட நோய் தொற்று அல்லாத விதைகளைப் பயன்படுத்தவும்.
  • பெரோமோன் பொறிகளைப் பயன்படுத்தி பூச்சிகளைப் பிடிக்கவும் மற்றும் களத்தினைக் கண்காணிக்கவும்.
  • முட்டைகள் அல்லது கம்பளிப்பூச்சிகளால் பாதிக்கப்பட்ட பயிரின் பாகங்களை அகற்றிவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க