மக்காச்சோளம்

சோளக்காதுப் புழு

Helicoverpa zea

பூச்சி

சுருக்கமாக

  • முட்டைப்புழுக்கள் பட்டு முடிகளை உண்டு, மற்றும் பின்னர் தானே சோளக்காதுகளுக்குள் துளையிடும்.
  • சோளக்காதுகளைச் சுற்றி அல்லது அதன் நுனி நெடுகிலும் கந்தையான துளைகள் மற்றும் நீண்ட வரிசையில் கழிவுகள் காணப்படும்.
  • பொதுவாக ஒவ்வொரு சோளக்காதுகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைப்புழுக்கள் காணப்படாது.
  • இலைகளும் பாதிப்படையக்கூடும், இது மற்ற நோய்களுக்கான தொற்றுகள் ஏற்படுவதற்குச் சிறந்த சூழலை உருவாக்குகிறது.

இதிலும் கூடக் காணப்படும்


மக்காச்சோளம்

அறிகுறிகள்

சோளக்காது புழுக்கள் பழுக்கும் தருவாயில் இருக்கும் புரவலன்களை விரும்புகிறது, ஆனால் இவை இலைத் தொகுதிகளையும் தாக்குகிறது. முட்டைப்புழுக்கள் பட்டு முடிகளை உண்டு மற்றும் பின்னர் தானே சோளக்காதுகளுக்குள் துளையிட்டு, அங்கு அவை தானியங்களை உண்ணத் தொடங்கும். இந்தப் புழுக்கள் சோளக்காதுகளைச் சுற்றிலும் அல்லது அவற்றுக்குக் கீழே காணப்படும், இது தானியங்களைச் சேதப்படுத்துகிறது மற்றும் பழுப்பு நிற நீண்ட வரிசைக் கழிவுகளையும் விட்டுச் செல்கிறது. இவை தன்னினத்தை உண்ணக்கூடியவை, எனவே பொதுவாக ஒரு சோளக்காதுகளில் ஒன்று மட்டுமே காணப்படும். காம்பு முனைகளின் நுனி மற்றும் வளரும் இலைக் கத்திகளில் ஏராளமான கந்தையான துளைகள் காணப்படும். இவை மலர் கட்டமைப்புகள் மற்றும் தானியங்களை உண்டு, மகரந்தச் சேர்க்கை மற்றும் தானிய நிரப்புதல் ஆகியவற்றில் குறுக்கிடுவதால், விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படும். இந்தச் சேதங்களானது மற்ற நோய்களுக்கான தொற்றுகள் ஏற்படுவதற்கு சிறந்த சூழலை உருவாக்குகிறது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஹெலிகோவர்பா ஜீயின் முட்டைகளைத் தாக்குவதன் மூலம் ஒட்டுண்ணி டிரிகோகாம்மா மற்றும் டெலிநோமஸ் வண்டுகள் பூச்சிகளின் எண்ணிக்கையை ஓரளவுக்குக் கட்டுப்படுத்துகிறது. முட்டைப்புழு ஒட்டுண்ணிகளும் உள்ளன. நன்மை பயக்கும் பூச்சிகளான பச்சைக் கண்ணாடி இறக்கைப் பூச்சிகள், பெரிய கண் வண்டு அல்லது தும்பிகள் முட்டைகளையும் சிறு முட்டைப்புழுக்களையும் வேட்டையாடுகின்றன. சோளக்காதுகளின் நுனியில் உட்செலுத்தும் போது, சில நன்மை பயக்கும் நூற்புழுக்களும் வேலை செய்கின்றன. பூஞ்சை நோய்க்குறி நொமுரீயா ரிலேயி மற்றும் அணுவியல் பாலிஹைட்ரோசிஸ் வைரஸ் கூட ஹெலிகோவர்பாக்களின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன. பேசில்லஸ் துரிங்ஜென்சிஸ் அல்லது ஸ்பினோஸாட் ஆகியவற்றைக் கொண்ட இயற்கை பூச்சிக்கொல்லிகளைச் சரியான நேரத்தில் பயன்படுத்தினால் நன்கு வேலை செய்யும். ஒவ்வொரு காதுகளின் பட்டில் பயன்படுத்தப்படும் கனிம எண்ணையோ அல்லது வேப்பையோ கூட சோளத் தொப்பியைத் தடுக்கிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வயலில், பூச்சிக்கொல்லிப் பயன்பாடு மிகவும் அரிதாகப் பரிந்துரைக்கப்படுகிறது ஏனெனில் முட்டைப்புழுக்கள் சோளக்காதுகளுக்குள் ஒளிந்து கொண்டு மற்றும் சிகிச்சைகளுக்குத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாது. பைரித்ராய்டு, ஸ்பினெட்ராம், மெதோமில், எஸ்பென்வலேரேட் அல்லது குலோர்பைரிபாஸ் ஆகியவற்றைக் கொண்ட பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

சோளக்காதுப்புழுக்கள் மண்ணில் 5 முதல் 10 செ.மீ ஆழத்தில், கூட்டுப்புழுக்களாக செயலற்ற நிலையில் குளிர் காலத்தைக் கழிக்கும். வலுவான முதிர்ந்த பூச்சிகள் வசந்த காலத்தின் ஆரம்பத்தில் பறக்கத் தொடங்கும், மேலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமாகச் செயல்படும், வெப்ப நிலைகள் அதிகரிக்கையில் இன்னும் சுறுசுறுப்பாகச் செயல்படும். அவை வெளிர் பழுப்பு நிற முன் இறக்கைகளைக் கொண்டிருக்கும், சில நேரங்களில் ஆலிவ் நிறத்திண்மையுடனும் காணப்படும். அலை அலையான கரும் பழுப்பு நிறப் பட்டைகள் விளிம்புகளில் இருந்து ஒரு சில மில்லிமீட்டர்கள் வரை காணப்படும். அதன் பின் இறக்கைகள் வெள்ளை-சாம்பல் நிறத்தில் மற்றும் விளிம்பில் மஞ்சள் புள்ளிகளுடன் பரந்த கருப்புப் பட்டைகளைக் கொண்டிருக்கும். பெண் பூச்சிகள் வெள்ளை கும்மட்ட வடிவ முட்டைகளை ஒற்றையாக புதிய பட்டு அல்லது இலைத்திரள்களில் இடும். முட்டைப்புழுக்கள் நிறத்தில் (வெளிறிய பச்சை நிறத்தில் இருந்து சிவப்பு அல்லது பழுப்பு நிறம் வரை) மாறுபடும், இவை மிதமான முடியுடன், 3.7 மி.மீ. நீளத்தினைக் கொண்டிருக்கும். இவை வெளிறிய அல்லது ஆரஞ்சுத் தலையையும், நுண்ணிய முதுகெலும்புடன் தொடர்புடைய சிறிய கருப்புப் புள்ளிகளால் மூடப்பட்டிருக்கும் உடலையும் கொண்டிருக்கும். அவை முதிர்ச்சி அடைகையில், இரண்டு மஞ்சள் நிறக் கோடுகள் அதன் செதில்களில் வளரும்.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்புத் திறன் அல்லது சகிப்பு திறன் கொண்ட தாவர வகைகளை நடவு செய்ய வேண்டும்.
  • அந்துப்பூச்சிகளின் உச்ச கட்ட எண்ணிக்கையை தவிர்க்கப் பருவ காலத்தின் ஆரம்பத்திலேயே நடவு செய்ய வேண்டும்.
  • அந்துப்பூச்சிகள் தென்படுகிறதா எனக் கண்காணித்து மற்றும் அவற்றை ஒளி அல்லது பெரோமோன் பொறிகளால் மொத்தமாகப் பிடிக்கவும்.
  • நன்மை பயக்கும் பூச்சிகளைப் பாதுகாக்க குறைந்தபட்ச அளவில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துங்கள்.
  • அந்துப்பூச்சிகளை ஈர்க்கும் தாவரங்களுடன் பயிர் செய்வது நன்கு வேலை செய்யக்கூடும்.
  • வயலில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள களைகளைக் கட்டுப்படுத்தவும்.
  • வானிலை, பறவைகள் மற்றும் பிற இரைப்பிடித்துண்ணிகளுக்குக் கூட்டுப்புழுக்களை அம்பலப்படுத்தப் பருவங்களுக்கு இடையே மண்ணை நன்கு உழுதல் வேண்டும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க