Tuta Absoluta
பூச்சி
பயிர் வளர்ச்சி முழுவதிலும் நோய் பாதிப்பு வரும் வாய்ப்புகள் உண்டு மற்றும் அப்போது அவை பயிரின் எந்த பாகத்தினையும் தாக்கலாம். இளம் உயிரியானது உயர்ந்த மொட்டுக்கள், இளம் மென்மையான இலைத்தளிர்கள் மற்றும் பூக்களை விரும்பும். இலைகளில் இளம் உயிரிகள் ஒழுங்கற்றச் சாம்பல் முதல் வெள்ளை நிறத்திலான தோற்றத்தினை ஏற்படுத்தும், இவை பின்னர் சிதைவை ஏற்படுத்தும் . பூச்சிகள் துளையிட்டு தண்டுகளில் பாதிப்பினை ஏற்படுத்தும், இதனால் பயிரின் வளர்ச்சி குன்றும். பழங்களில், முட்டைப்புழுக்கள் உள்ளே செல்லும் அல்லது வெளியே வரும் இடங்களில் கருப்புத் துளைகள் காணப்படும். இந்த நுழைவுகள் இரண்டாம் நிலை நோய்க் காரணிகளுக்கு மூலமாக அமைந்து கனிகளை அழுக வைக்கும்.
டுடா அப்சலூடா பூச்சிகளை உண்ணும் பிற பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளன : இவை ஒட்டுண்ணி குளவி டிரைகோக்ராமா ப்ரேடியோசம் மற்றும் நெசிடியோகோரிஸ் டெனியுஸ் பூச்சிகள் மற்றும் மாக்ரோலோபஸ் பைக்மெயிஸ் போன்றவை ஆகும். மெட்டார்ஹீலியம் அனிசோபிலே மற்றும் பெவேரியா பாசியானா போன்றவை உட்பட பிற பூஞ்சை உயிரிகள் இப்பூச்சிகளின் முட்டைகள், இளம் உயிரிகள் மற்றும் முதிர்ந்த பூச்சிகளைத் தாக்கக்கூடியவை. வேப்பங்கொட்டைச் சாறு அல்லது பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் அல்லது ஸ்பினோசாட் அடங்கிய பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தலாம்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பூச்சிக்கொல்லிகளை டுடா அப்சலூடாவிற்கு எதிராகப் பயன்படுத்தலாம், ஆனால் இவற்றினைக் கட்டுப்படுத்துதல் அரிதான விஷயம் ஏனெனில், முட்டைப்புழுக்களின் தன்மையினை கண்டறிவது கடினம், இனப்பெருக்க திறன் அதிகம் மற்றும் இவற்றின் தடுப்புத் திறன் அதிகம். இவை அனைத்தையும் தவிர்க்க, இன்டோஃக்ஸாகார்ப், அபமெக்டின், அஸாடிராஸ்டின், ஃபெனோக்ஸிகார்பே + லுஃபெனுரான் போன்ற பலவகைப் பூச்சிக்கொல்லிகளைச் சுழற்சி முறையில் பயன்படுத்தவும்.
இவற்றின் அதிகப்படியான இனப்பெருக்கத் திறனால் டுடா அப்சலூடா பூச்சிகள் இவை ஆண்டிற்கு 12 தலைமுறைகளுடன் அதிகளவிலான பாதிப்புகளைத் தக்காளியில் உருவாக்குகின்றன. பெண் பூச்சிகள் 300 கிரீம் போன்ற வண்ணம் கொண்ட முட்டைகளை இலைகளுக்கு அடிப்புறத்தில் இடுகின்றன. 26-30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 60-75% ஒப்பு ஈரப்பதம் இருக்கும்போது குஞ்சு பொறிப்பது நடைபெறும். இளம் உயிரிகள், ஒருவிதமான கருப்பு நிறப் பட்டையை தலையின் பின்புறம் கொண்டு, வெளிரிய பச்சை நிறத்துடன் காட்சியளிக்கும். ஏதுவான சூழல்களில் (வெப்பநிலை, ஈரப்பதம்) பூச்சிகளின் வளர்ச்சி நிலைகள் 20 நாட்களில் முழுமைபெறும். பகல்பொழுதில், முதிர்ந்த பூச்சிகள் வெள்ளி போன்ற பழுப்பு நிறத்துடன், 5-7 மிமீ நீளத்துடன் மற்றும் இலைகளுக்கு இடையே ஒளிந்திருக்கும். முட்டைகள், இளம் உயிரிகள் அல்லது முதிர்ந்த பூச்சிகளாக இலைகள் மற்றும் மண்ணில் இவை உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும். `