Oulema melanopus
பூச்சி
இந்த வண்டுகள் ஓட்ஸ், பார்லி மற்றும் கம்பு போன்ற தானியங்களில் வலுவான சேதங்களை ஏற்படுத்தும், ஆனால் கோதுமை இவற்றுக்கு பிடித்த புரவலன் ஆகும். இவை சோளம், மக்காச்சோளம் மற்றும் புற்கள் போன்ற பல்வேறு மாற்றுப்புரவலன்களையும் கொண்டுள்ளது. முட்டைப்புழுக்கள் இலைகளின் மேற்புறத் திசுக்களை உண்டு, முழு வாழ்நாள் சுழற்சியின் பிரதான சேதத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றின் உண்ணும் பழக்கமானது, இலைத் திசுக்களின் கீழ்ப்புறப் புறத்தோல் வரை அகற்றி, மெல்லிய, நீண்ட, வெண்மையான வடுக்கள் அல்லது கோடுகளை ஏற்படுத்தும், நோய்த் தொற்றின் போது இந்தக் கோடுகள் அதிகமாகக் காணப்படும். இருப்பினும், முதிர்ந்த வண்டுகள் பொதுவாக உண்ணும்போது பிற தாவரங்கள் அல்லது வயல்களுக்குப் பரவும், இதன் பொருள் ஒரு வயல்பகுதியில் கடுமையான சேதங்கள் ஏற்படுவது மிகவும் அரிது என்பதாகும். தொலைவில் இருந்து பார்க்கும்போது, பாதிக்கப்பட்ட வயல்கள் காலநிலையால் பாதிக்கப்பட்டதைப் போன்று, பழமையாகக் காட்சியளிக்கும், ஆனால் பொதுவாக சேதங்கள் மொத்த நிலப்பரப்பின் 40% க்கு மேல் ஏற்படாது. சில தானியங்கள் வளரும் பகுதிகளில், இந்த வண்டுகள் குறிப்பிடத்தக்க, வற்றாவளப் பயிர்ப் பூச்சியாக இருக்கக்கூடும்.
ஸ்டெய்னெர்னெமா இனத்தின் சில வகை நூற்புழுக்கள், மண்ணில் குளிர்காலங்களைக் கழிக்கும் முதிர்ந்த வண்டுகளைத் தாக்கி, வசந்த காலத்தில் இந்த வண்டுகள் இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்கின்றன. இருப்பினும், வெப்பநிலையைப் பொறுத்து அவற்றின் செயல்திறன் மாறுபடும். சில பொன் வண்டுகள், இந்தத் தானிய இலை வண்டுகளின் முட்டைகள் மற்றும் முட்டைப்புழுக்களை உண்ணும். ஹையாலோமையோட்ஸ் டிரையாங்குலிபர் என்னும் டச்சினிட் ஈக்கள் முதிர்ந்த வண்டுகளை உண்ணும், மேலும் இவை ஓ மெலனோபஸின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வணிகரீதியாகக் கிடைக்கின்றது. இதையொட்டி, முட்டைப்புழுக்கள் டையபர்ஸிஸ் கார்னிஃபெர், லெமோபேகஸ் கர்டிஸ் மற்றும் டெட்ராஸ்டிக்கஸ் ஜூலிஸ் போன்ற ஒட்டுண்ணிக் குளவிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இறுதியாக, அனாபெஸ் பிளாவிப்ஸ் என்னும் குளவி தானிய இலை வண்டுகளின் முட்டைகளை ஒட்டுண்ணிபோல் பற்றிப் படர்ந்து, சிறந்த கட்டுப்பாட்டுக் காரணியாகத் திகழ்கிறது.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப் பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். செயல்பாட்டு மூலப்பொருளான கம்மா-சைஹலோத்ரினைக் கொண்டிருக்கும் பூச்சிக்கொல்லிகள் இந்த நோய்ப் பூச்சிக்கு எதிராகத் திறம்பட செயல்படும், ஏனெனில் இவை முட்டைகள் மற்றும் முட்டைப்புழுக்களைப் பாதிக்கின்றன. முதிர்ந்த பூச்சிகள் முட்டைகளை இடும்போது அல்லது 50 சதவிகித முட்டைகளில் இருந்து குஞ்சி வெளியானபிறகு தெளித்தல் மேற்கொள்ளப்பட வேண்டும். தவறான பயன்பாடுகள் ஓ. மெலனோபஸ் நோய்ப்பூச்சியின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஏனெனில் இவை இரைப்பிடித்துண்ணிகளைக் கொன்றுவிடக்கூடும். இயற்கை பாஸ்பேட்டுகள் (மாலத்தியான்) மற்றும் பைரித்ராய்டுகள் இனத்தின் இதர பூச்சிக்கொல்லிகளும் ஓ. மெலனோபஸ் நோய்பூச்சிக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நோய்க்கான சேதங்களானது ஒளலெமா மெலனோபஸ் என்னும் வண்டின் முட்டைப்புழுக்களினால் ஏற்படுகிறது. முதிர்ந்த வண்டுகள் சுமார் 5 மி.மீ. நீளத்தில், சிவப்பு நிறத் தலை மற்றும் கால்களுடன் கரு நீல இறக்கைகளைக் கொண்டிருக்கும். இவை வயலின் வெளிப்பகுதிக்குப் பரவி, காற்றுக் குவிபொருள், பயிர்த்தாள் மற்றும் மரப்பட்டை வெடிப்புகள் போன்ற பாதுகாப்பான பகுதிகளில் குளிர்காலத்தைக் கழிக்கும். சுற்றுச்சூழல் நிலைமைகள் மேம்படும்போது, வசந்த காலத்தில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் இருக்கும்போது, இவை வெளியாகும். வெதுவெதுப்பான வசந்த காலம் இவற்றின் வாழ்க்கைச் சுழற்சிக்கு சாதகமாக இருக்கின்றது, அதே சமயம் குளிர் காலங்கள் இவற்றின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இனச்சேர்க்கைக்குப் பிறகு, இலைகளின் அடிப்புறத்தில், பெரும்பாலும் மையநரம்பு நெடுகிலும் பெண் பூச்சிகள் பிரகாசமான மஞ்சள், உருளை வடிவ முட்டைகளை இடும், மேலும் இவை நீண்ட காலத்திற்கு (45-60 நாட்கள்) தொடர்ந்து முட்டையிடும். 7-15 நாட்களுக்குப் பிறகு முட்டைப்புழுக்கள் வெளிவந்து, இலைகளின் மேற்புறத் தோல்களை உண்ண ஆரம்பித்து, மோசமான சேதங்களை ஏற்படுத்தும். இவை மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில், கூன் முதுகுடன் , கருநிறத் தலையையும், ஆறு சிறிய கால்களையும் கொண்டிருக்கும். உணவு உண்ட 2-3 வாரங்களுக்குப் பிறகு முதிர்ச்சி அடையும்போது, இவை கூட்டுப்புழுக்களாக மாறி, 20-25 நாட்களில் முதிர்ந்த வண்டுகளாக மாறி, மீண்டும் தனது வாழ்க்கைச் சுழற்சியைத் தொடங்கும்.