Odoiporus longicollis
பூச்சி
நோய்த்தொற்றுக்கான ஆரம்ப அறிகுறிகளானது, இலை உறைகளின் அடிப்பகுதியில் அல்லது இளம் தாவரங்களின் தண்டு பகுதியில் காணப்படும் சிறிய துளைகள் மற்றும் ஜெல்லி பசை போன்ற கழிவுகளாகும். துளைகளைச் சுற்றி பழுப்பு நிறத்தில் முட்டைப்புழுக்களின் கழிவுகளும் காணப்படும். முட்டைப்புழுக்கள் தண்டுகள் அனைத்தையும் துளையிட்டு, மோசமான சேதங்களை ஏற்படுத்தி, திசுக்களுக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் தண்ணீர் செல்வதைக் குறைக்கிறது. இலைகள் மஞ்சள் நிறமாகி, தாவரங்களின் வளர்ச்சி குன்றக்கூடும். தண்டுகள் வலுவிழந்து போவதால், காற்றடிக்கும் காலநிலையில் அல்லது புயலின் போது, அவை தாவரங்களை உடையச் செய்து, கீழே விழச்செய்யக்கூடும். காயங்களில் இருக்கும் சந்தர்ப்பவாத நோய்க்கிருமிகள் திசுக்களை விரைவாக நிறமாற செய்து, அருவருப்பான வாடையை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட தாவரங்களில், வருடம் முழுவதும் அந்துப்பூச்சி வகையின் அனைத்து வளர்ச்சி நிலைகளும் காணப்படும். குலைகள் அல்லது பழங்கள் முறையாக வளர்ச்சியடையாது.
முன்னதாக, ஸ்டீனெர்னெமா கார்போகாப்ஸ்சே இனங்களின் நூற்புழுக்கள் அல்லது ஆர்த்ரோபாட்ஸ் என்பவற்றின் சில இனங்கள் இந்த அந்துப்பூச்சி வகைகளுக்கு எதிராக ஓரளவு வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டன. மற்றொரு உத்தி, நோய்கிருமிகளால் வண்டுகளை பாதிப்படைய செய்தல் , உதாரணமாக பூஞ்சை நோய்க்கிருமி மெட்டார்ஹீலியம் அனிசோப்லியே என்பவற்றைக் கொண்டு பாதிப்படைய செய்தல்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். கரிம பாஸ்பரஸ் கலவைகள் கொண்ட பூச்சிக்கொல்லிகளை தண்டுகளுக்குள் செலுத்தி முட்டைப்புழுக்களை கொல்லலாம். அறுவடைக்குப் பிறகு, எஞ்சியிருக்கும் முட்டையிடும் அந்துப்பூச்சி வகைகளை அழிக்க பாதிக்கப்பட்ட தண்டுகளை அகற்றிவிட்டு கார்பரில் (2 கிராம் / லி) போன்ற பூச்சிக்கொல்லிகளை கொண்டு சிகிச்சை அளிக்கவும்.
முதிர்ச்சியடைந்த அந்துப்பூச்சி வகைகள் கூர்மையான தலை மற்றும் பளபளப்பான கொம்புகளுடன், சுமார் 30 மி.மீ. நீளத்தில், கருப்பு நிறத்தில் காணப்படும். இவை இரவு நேரத்தில் செயல்படக்கூடியவை. ஆனால் குளிரான மாதங்களில் அல்லது மேகமூட்டமான நாட்களில் பகல் நேரத்திலும் காணலாம். அவை வாழை மரங்களால் வெளியிடப்படும் எளிதில் ஆவியாகிற பொருட்களால் ஈர்க்கப்படுகின்றன. பெண் பூச்சிகளில் இலை உறைகளில் உள்ள கீற்றுகளை வெட்டி, வெள்ளை பாலாடை நிற, நீள்வட்ட முட்டைகளை மேலோட்டமாக இடும். 5-8 நாட்களுக்குப் பிறகு, சதைப்பற்றுள்ள, கால்கள் இல்லாத, மஞ்சள் வெள்ளை நிற முட்டைப்புழுக்கள் வெளியே வரும். அவை இலை உறையின் மென்மையான திசுக்களை உண்ணத் தொடங்கும். அவை 8 முதல் 10 செ.மீ நீளத்திற்கு பரந்த அளவிலான துளையிட்டு, தண்டுகள், வேர்கள் மற்றும் கொத்து காம்புகளை அடையும். முதிர்ந்த பூச்சிகள் நன்கு பறக்கக் கூடியவை, அவை மரங்களுக்கு மரம் எளிதாக பறந்து நோய்கிருமியை பரவ செய்யும்.