சோளம்

புள்ளிகளை கொண்ட தண்டு துளைப்பான்

Chilo partellus

பூச்சி

சுருக்கமாக

  • இலைகளில் ஒழுங்கற்ற உண்ணும் வடுக்கள், துளைகள் மற்றும் ஜன்னல்கள் காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட தண்டுகள்.

இதிலும் கூடக் காணப்படும்


சோளம்

அறிகுறிகள்

புள்ளி தண்டு துளைப்பானின் இளம் கம்பளிப்புழுக்கள் தாவரங்களின் மென்மையான திசுக்களை உண்ணும். அவை இலைகள் மற்றும் சுருள்களை துளையிட்டு, ஒழுங்கற்ற வடுக்கள், துளைகள் மற்றும் ஓட்டைகளை ஏற்படுத்துகின்றன. முதிர்ந்த முட்டைப்புழுக்கள் தண்டுகளை துளையிட்டு, அவற்றின் உள்திசுக்களை உண்டு, தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் செல்வதை தடுக்கின்றன. இந்த உண்ணும் செயல்பாட்டில், 'இறந்த இதயம்' என்று அழைக்கப்படும் அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. இவற்றில் தண்டுகள் செதுக்கப்பட்டு, வெறுமையாகி, அவற்றுள் கம்பளிப்புழுக்கள் மற்றும் அதன் கழிவுகள் மட்டுமே காணப்படும். தாவரங்களின் மேல்பகுதி முற்றிலும் அல்லது பகுதியாக உலர்ந்துபோகும். ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட தாவரங்கள் குன்றிய வளர்ச்சியுடன் காணப்படும். முதிர்ந்த கம்பளிப்புழுக்கள் தானிய உட்கருக்களை நன்கு துளையிடுகிறது. ஒட்டுமொத்தத்தில், உண்ணும் செயல்பாடு பூஞ்சை அல்லது பாக்டீரியா நோய்கள் ஏற்படுதல் மற்றும் அதன் தீவிரத்தை அதிகரிக்கிறது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

புள்ளி தண்டுத்துளைப்பானின் முட்டைப்புழுவுக்குள், ஒட்டுண்ணி குளவிகள், கடேசியா செசாமியா மற்றும் கடேசியா பிலேவைப்ஸ் போன்றவைகள் அவற்றின் முட்டைகளை இடுகின்றன. மற்றொரு குளவி, க்ஸ்கேந்த்தோபிம்ப்லா ஸ்டெம்மாட்டோர் நோய்பூச்சி கூட்டுப்புழுக்களாக இருக்கும் நிலையில் அதனை தாக்குகிறது. இயற்கை இறைப்பிடித்துண்ணிகளில் இயர்விக் மற்றும் எறும்புகள் அடங்கும். இவை திறன்மிக்க வகையில் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகிறது. இறுதியாக, கரும்பு சக்கை புல்கள் (மெலினீஸ் மினுடிஃப்ளோரா) அல்லது பச்சை இலை டெஸ்மோடியம் (டெஸ்மோடியம் இன்டார்டம்) போன்ற தாவரங்கள் உற்பத்தி செய்யும் விரைந்து ஆவியாகிற காரணி அந்துப்பூச்சிகளைத் தடுக்கிறது. பேசில்லஸ் துரிங்ஜென்ஸிஸ், வேப்ப எண்ணெய் சாறு அல்லது போவேரியா பாசியானா ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளும் பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள்.பூச்சிக்கொல்லி சிகிச்சைகள் பயன்படுத்தும்போது, விளைச்சல் இழப்பு மற்றும் அந்த பகுதியில் பல்லுயிருக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். டெல்டாமெதிரின் அல்லது குளோரான்ட்ரினிலிப்ரோலை அடிப்படையிலான பூச்சிக்கொல்லிகளை சுருளில் குருமணி வடிவில் சோளத்தின் புள்ளி தண்டு துளைப்பான்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது

இது எதனால் ஏற்படுகிறது

முதிர்ந்த அந்துப்பூச்சி லேசான பழுப்பு நிறமாகவும், அதன் இறக்கை 20 முதல் 25 மிமீ வரை நீளம் கொண்டிருக்கும். அதன் முன்னிறக்கைகள் சில கருத்த வடிவமைப்புடன் லேசான பழுப்பு நிறமாகவும், அதன் பின்னிறக்கைகள் வெள்ளை நிறத்திலும் இருக்கும். முதிர்ந்த பூச்சிகள் இரவு நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் மற்றும் காலை நேரத்தில் தாவரங்கள் மற்றும் தாவரக் கழிவுகளில் ஓய்வு எடுக்கும். வெள்ளை பூச்சிகள் 10-80 பாலாடை போன்ற வெள்ளை முட்டைகளை இலை பரப்புகளில் கொத்துகளாக இடும். கம்பளிப்புழுக்கள் சிவந்த-பழுப்பு நிற தலை, நெடுக்கான கருத்த கோடுகளுடன் லேசான பழுப்பு நிற உடலையும், அதன் பின்புறத்தில் கரும் புள்ளிகளுடனும் காணப்படுவதால், இது இத்தகைய பெயர் பெற்றுள்ளது. புரவலன் தாவரங்கள் பரந்த அளவில் உள்ளன, அவற்றுள் சோளம், திணை மற்றும் மக்காச் சோளம் ஆகியன அடங்கும். தட்ப வெப்ப நிலைகள் குறிப்பிடத்தக்க அளவில் அந்துப்பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சியை பாதிக்கின்றன. சூடான மற்றும் ஒப்பீட்டளவில் குறிப்பாக ஈரப்பதமான காலநிலைகள் அவற்றுக்கு சாதகமானவை. இந்த நோய் மிகவும் பொதுவாக வெப்பமண்டலப் பகுதிகளிலும், எப்போதாவது 1500 மீ உயரத்திற்கு மேலும் ஏற்படுகிறது.


தடுப்பு முறைகள்

  • உங்கள் ஊரில் கிடைக்கப்பெற்றால், சகிப்புத்தன்மை கொண்ட தாவர வகைகளை வளர்க்கவும்.
  • பூச்சிகள் உண்ணுவதால் ஏற்படும் சேதங்கள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • புள்ளி தண்டு துளைப்பான் கம்பளி புழுக்களைத் தடுக்க தட்டைப்பயறு அல்லது கரும்பு சக்கை புல் (மெலினிஸ் மினுடிஃப்ளோரா) கொண்டு ஊடுபயிர்முறை மேற்கொள்ளவும்.
  • பூச்சிகளை தடுக்க உகந்த தாவர அடர்த்தியை பராமரிக்கவும்.
  • எல்லா பக்கங்களிலும் 2-3 வரிசைகள் பொறி பயிர்களை விதைக்கவும்.
  • வேலிகளை சுற்றி பெரோமோன் பொறிகளை பயன்படுத்தவும்.
  • நோய் அறிகுறிகள் தென்படும் தாவரங்களை ஆரம்பத்திலேயே அகற்றிவிடவும்.
  • தானே வளரக்கூடிய தாவரங்கள் மற்றும் மாற்று புரவலன்களை சோதித்து, அவற்றை அகற்றிவிடவும்.
  • பூச்சிகளின் எண்ணிக்கை மற்றும் உண்ணும் நடவடிக்கை உச்சக்கட்டத்தில் இருக்கும்போது தாவரங்கள் நடுவதை தவிர்த்து, அதற்கு முன் அல்லது பிந்தைய காலகட்டத்தில் நடவு செய்யவும்.
  • சக்தி வாய்ந்த தாவரங்களை பெற நல்ல உரங்களை பயன்படுத்தவும், ஆனால் பூச்சி தாக்குதலை அதிகரிக்கக்கூடிய அதிகப்படியான தழைச்சத்துக்களின் பயன்பாட்டை தவிர்க்கவும்.
  • புரவலன் அல்லாத தாவரங்களுடன் (எடுத்துக்காட்டாக மரவள்ளிக்கிழங்கு) பரந்த பயிர் சுழற்சி முறையை செயல்படுத்தவும்.
  • அறுவடைக்கு பின் அனைத்து பயிர் கழிவுகளையும் அகற்றி, அழித்துவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க