குடைமிளகாய் & மிளகாய்

வெளிச்சமான பழுப்பு வரிக்கண் நோய்

Lacanobia oleracea

பூச்சி

சுருக்கமாக

  • இலைகள் மற்றும் கனிகளில் இருந்து ஊட்டம் பெறுவதால் அவை பாதிக்கப்பட்டு (ஓட்டைகள், துளைகள், மேலோட்டமான அரிப்பு) காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட திசுக்கள் மற்றும் பூச்சிக்கழிவுகள் சந்தர்ப்பவாத நோய்க்காரணிகளுக்கு இடமளிக்கின்றன, இவையே அழுகுவதற்கு முக்கியக் காரணமாகும்.

இதிலும் கூடக் காணப்படும்

6 பயிர்கள்
முட்டைக்கோசு
உலர்ந்த திராட்சை
பச்சடிக்கீரை
பட்டாணி
மேலும்

குடைமிளகாய் & மிளகாய்

அறிகுறிகள்

கடித்து மென்றது போன்ற சேதங்கள் இளம் இலைகள், தண்டுகள், பூக்கள் மற்றும் கனிகளில் காணப்படும். இளம் உயிரிகள் இலைகளின் அடிப்புறத்தில் ஊட்டம் பெறுவதால் சிறிய ஓட்டைகளை உருவாக்கும். இளம் உயிரிகள் வளரும்போது முழு இலைகள், தண்டுகள் மற்றும் பூக்கள் மற்றும் கனிகள் மோசமாக பாதிக்கப்படும். வரிசையான ஓட்டைகள், அதிகப்படியான சுரண்டல் மற்றும் சுரங்கங்கள் போன்ற அமைப்பு போன்றவை கனிகளின் மேற்புறத்தில் காணப்படும். பாதிக்கப்பட்ட திசுக்கள் மற்றும் பூச்சிக்கழிவுகள் சந்தர்ப்பவாத நோய்க்காரணிகளுக்கு இடமளிக்கின்றன, இவையே அழுகுவதற்கு முக்கியக் காரணமாகும். இப்படியாக முதிர்ந்த பூச்சிகளின் சிறிய தாக்கம் கூட பயிருக்கு பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தும். இவற்றிற்கு பல்வேறு வகையிலான புரவலன் பயிர்கள் உள்ளன, இவற்றுள் தக்காளி, மிளகு, உருளைக் கிழங்கு, கீரை, வெள்ளரிக்காய், வெங்காயம், முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவர் போன்றவை அடங்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சில அந்துப்பூச்சிகளில், டிரைகோகிராம்மா ஒட்டுண்ணிக் குளவிகள் (டி. எவனெஸென்ஸ்) அல்லது பொடிசஸ் மகுலிவென்ட்ரிஸ் போன்ற வேட்டையாடும் பூச்சிகள் கம்பளிப்பூச்சிகளின் எண்ணிக்கையினைக் குறைக்கவல்லது. ஸ்பினோசாட் அல்லது பாசில்லஸ் துரிஞ்ஜியென்சிஸ் (பி.டி) போன்ற சுற்றுச்சூழலில் நிலைபெற்று நிற்காத பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தவும். இளம் உயிரிகள் இருப்பதை தெரிந்தவுடன் 0.1% செறிவு கொண்ட திரவத்தினை தெளிக்கவும், இதே முறையினை இருமுறை செய்வதன் மூலம் இளம் உயிரிகளை வெகுவாகக் கட்டுப்படுத்த இயலும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். இந்த அந்துப்பூச்சிகள், ஸ்பினோசாட் மற்றும் பாசில்லஸ் துரிஞ்ஜியென்சிஸ் போன்ற பிற பொருட்கள் மூலமாக போதுமான பலன்களைத் தருவதில்லை. முடிந்தவரை, ஆல்பா-சைபெர்மெத்ரின், பீட்டா-சைஃப்ளுத்ரின், பைஃபென்த்ரின், சைபர்மெத்ரின், டெல்டாமெத்ரின், டைஃப்ளூபென்ஸூரான், ஃபென்ப்ரோபத்ரின், லாம்ப்டா-சைஹலோத்ரின், டெஃப்ளுபென்ஸுரோன்கான் போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்ட பொருட்களைப் பயன்படுத்தவும். பயன்படக்கூடிய பூச்சிகளுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்க்கும் வகையில் பூச்சிக்கொல்லிகளை சரியான அளவில் திட்டமிட்டு பயன்படுத்தவும்.

இது எதனால் ஏற்படுகிறது

வெளிச்சமான பழுப்பு வரிக்கண் கம்பளிப்பூச்சிகள், லகனோபியா ஓலெரசியா என்பவற்றால் பாதிப்புகள் ஏற்படுகிறது. ஈரப்பதமான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும் பகுதிகள் இவற்றின் முக்கியமான வாழ்விடங்களை விரும்புகிறது மற்றும் கண்ணாடிக் கூடிகள், பண்ணை இடங்கள், ஆற்றுப் பகுதிகள் அல்லது காட்டுப் பகுதிகள் என பல வாழ்விடங்களில் காணப்படுகின்றன. முதிர்ந்த பூச்சிகளின் இறக்கைகள் 35 -45 மிமீ வரை காணப்படுகின்றன மற்றும் வெளிச்சமான பழுப்பு உடலுடன் சிறிது அடர் பொருட்களையும் கொண்டிருக்கும். முன்புற இறக்கையில் கிட்னி போன்ற கொப்புளங்களாக லேசான ஆரஞ்சு நிறத்துடன் செம்பழுப்பு நிற புள்ளிகளைக் கொண்டிருக்கும். அந்துப்பூச்சிகள் வெளிர் பழுப்பு நிறத்தில், வெள்ளை நிற நெளிவரிகளுடன் (W - வடிவில்) இருக்கும். பின்புற இறக்கை சாம்பல் நிறத்துடன், அடர் பண்பு கொண்ட ஓரத்துடன் இணைவாக இருக்கும். ஊட்டம் பெறும் செடிகளின் இலைகளின் அடிப்புறத்தில் சுமார் 150 எண்ணிக்கையிலான முட்டைகளைப் பெண் பூச்சிகள் மொத்தமாக இடுகின்றன. கம்பளிப் பூச்சிகள் 5 செமீ வரையிலான அளவில் வளருகின்றன. அதன் நிறம் பச்சை முதல் அடர் பழுப்பு நிறத்தில், வெள்ளை மற்றும் கருப்பு புள்ளிகளுடன் கூடிய மஞ்சள் நிறக் கோடுகளைப் பக்கவாட்டில் கொண்டிருக்கும்.


தடுப்பு முறைகள்

  • உங்களின் நிலத்தினைக் கண்காணித்து முட்டைகள், பாதிக்கப்பட்ட செடிகளின் பாகங்கள் அல்லது கம்பளிப் பூச்சிகளை நீக்கி அழிக்கவும்.
  • பசுமை வீடுகளில் பூச்சிகள் பரவுவதைத் தடுக்க கம்பி வலைகளைப் பயன்படுத்தவும்.
  • இலைகளுக்கு அடியே இருக்கும் கூட்டு முட்டைகள் மற்றும் கம்பளிப் பூச்சிகளை சுரண்டல் மூலம் நீக்கவும்.
  • பாதிக்கப்பட்ட பயிர்களை நீக்கி அழிக்கவும்.
  • அறுவடைக்குப் பின்னர் மண்ணினை ஆராய்ந்து மீதமுள்ள கூட்டுப் புழுக்களை நீக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க