மற்றவை

முட்டைக்கோசு அந்துப்பூச்சி (கேபேஜ் மோத்)

Mamestra brassicae

பூச்சி

சுருக்கமாக

  • எலும்புக்கூடு இலைகள்.
  • நுழைவு துளைகளை சுற்றிலும் மற்றும் துவாரங்கள்(சுரங்கங்கள்) நெடுகிலும் கழிவுகள்.

இதிலும் கூடக் காணப்படும்

10 பயிர்கள்
விதையவரை
முட்டைக்கோசு
வெள்ளைப் பூண்டு
பச்சடிக்கீரை
மேலும்

மற்றவை

அறிகுறிகள்

முட்டைக்கோசு அந்துப்பூச்சியின் புழுக்கள் இலைகளை சாப்பிடத் தொடங்கி, முட்டைக்கோசின் தலையில் துளையிட்டு சுரங்கங்கள் போல் உருவாக்குகின்றன. அவை இலைகளின் மென் தகட்டை மெல்லும்போது, கடுமையான நரம்புகளைத் தவிர்த்து விடுவதால், இலைகள் பெரும்பாலும் எலும்புக்கூடுகளாக மாறிவிடும். முதல் தலைமுறைக்கு (வசந்த காலத்திலிருந்து கோடைக்கால ஆரம்பம்) மாறாக, மிகவும் வலுவான இரண்டாம் தலைமுறை (கோடைக்காலப் பிற்பகுதியிலிருந்து அக்டோபர் வரை) கடினமான திசுக்களை மெல்லக் கூடியவை. மேலும் அவை இலைகளை சாப்பிடுவது மட்டும் அல்லாமல் முட்டைக்கோசின் உள் தலைப் பாகத்தில் துளையிட்டு சுரங்கங்கள் போல் உருவாக்குகின்றன. நுழைவுத் துவாரங்களைச் சுற்றியும் சுரங்கங்களை ஒட்டியும் புழுக்கைகள் (கழிவுப் பொருட்கள்) இருக்கும். குறிப்பாக இதனால், முட்டைக்கோசு அந்துப்பூச்சியின் புழுக்கள் பயிர்களுக்குப் பாதகமானவையாக இருக்கின்றன.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

டிரைக்கோக்ராமா இனங்களின் ஒட்டுண்ணி குளவிகளை, அந்துப்பூச்சி முட்டைகளை அழிக்கப் பயன்படுத்தலாம். இவற்றுக்குப் பல தரப்பட்ட எதிரி இனங்களும் உள்ளன. சில சூறையாடும் வண்டுகள், குளவிகள், மஞ்சள் நிற உறை பூச்சிகள், கண்ணாடி இறக்கை பூச்சிகள், சிலந்திகள் மற்றும் கூட்டுப்புழுக்களை உண்ணும் பறவைகள் ஆகியவை இதில் அடங்கும். இயற்கையாக விளங்கும் பாக்டீரியா பேசில்லஸ் துரிங்கியன்சிஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளும், சில வைரஸ் சார்ந்த தயாரிப்புகளும், இலைகளின் மேல் பரப்பிலும், கீழ் பரப்பிலும் நன்கு தெளிக்கப்பட்ட போது புழுக்களை அழிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தப் பூச்சிக்கொல்லிகள் அதே சூழலில் தொடர்ந்து நீடித்து இருப்பதில்லை. நோய்க் காரணிகளான நூற்புழுக்கள் கூட இந்தப் புழுக்களுக்கு எதிராக வேலை செய்யலாம். இவற்றை இலைகள் ஈரமாக இருக்கும் போது, உதாரணமாகக் குளிர்ந்த மந்தமான வானிலையின் போது பயன்படுத்த வேண்டும்.

இரசாயன கட்டுப்பாடு

தடுப்பு நடவடிக்கைகளோடு உயிரியல் சிகிச்சைகளும் ஒருங்கிணைந்து கிடைக்குமென்றால், அத்தகைய அணுகுமுறையைக் கருத்தில் கொள்ளவும். செயல்பாடு மிக்க மூலப்பொருட்களான பைரேத்ரம், லாம்ப்டா-சைஹாலோத்ரின் அல்லது டெல்டாமெத்ரின் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளை இந்த அந்துப்பூச்சியின் புழுக்களுக்கு எதிராகப் பயன்படுத்தலாம். பைரெத்ரம் என்பவற்றின் சாறுகளை முறை, அறுவடைக்கு ஒரு நாள் முன்னர் வரை பயன்படுத்தலாம். லாம்ப்டா-சைஹலோத்ரின் மற்றும் டெல்டாமெத்ரின் ஆகியவற்றிற்கு அதிகபட்சம் 2 பயன்பாடுகள் மட்டுமே பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும் அறுவடைக்கு முன் ஏழு நாள் இடைவெளியையும் கொடுக்க வேண்டும்.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகள் முக்கியமாக முட்டைக்கோசு அந்துப்பூச்சியின் (மமெஸ்ட்ரா ப்ராஸிகே) புழுக்கள் மூலம் ஏற்படுகின்றன. முதிர்ந்த முட்டைப்புழுக்கள் கூட்டுப்புழுக்களாகி, மண்ணில் குளிர் காலத்தைக் கழிக்கின்றன. வளர்ந்த பூச்சிகள் பழுப்பு நிறத்தில், முன் இறகுகளைக் கொண்டிருக்கும். அவற்றில் கரும்பழுப்பில் குறுக்கு வெட்டு வளைவுகளும், தெளிவான பகுதிகளும் மாறி மாறி இருக்கும். பின் இறகுகள் வெளிர் சாம்பல் நிறத்தில் இருக்கும். வெளிவந்து சில வாரங்களுக்குப் பிறகு, பெண் பூச்சிகள் இலைகளின் இரு புறத்திலும் வெள்ளையான, உருண்டையான முட்டைகளைக் கொத்தாக இடுகின்றன. முட்டைப் பொரிந்த பிறகு, புழுக்கள் இலைகளின் திசுக்களை உண்ணத் தொடங்கி, இலைகளிலும், கடைசியில் முட்டைக்கோசின் தலைப் பகுதியிலுமே, துளையிட்டு சுரங்கங்கள் போல் அமைக்கின்றன. அவை மஞ்சள் சார்ந்த பச்சை நிறத்திலோ, பழுப்பு சார்ந்த பச்சை நிறத்திலோ, உடலில் வெளிப்படையாக முடி ஏதும் இல்லாமல் இருக்கும். முட்டைக்கோசு அந்துப்பூச்சிகள் வருடத்திற்கு இரண்டு தலைமுறைகளை உருவாக்குகின்றன. வசந்த கால பிற்பகுதியில், முதல் தலைமுறை அந்துப்பூச்சிகள் மண்ணில் இருந்து பொரிந்து வர, பாதிக்கப்பட்ட தாவரங்களில் புழுக்களைக் காணலாம். கோடைக்கால பிற்பகுதியில், இரண்டாவது தலைமுறை தோன்றுகிறது.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட வகைகள் கிடைக்குமென்றால், அவற்றைப் பயன்படுத்தவும்.
  • தொடர்ச்சியாக வயல்களை, நோய்க்கான அறிகுறிகளுக்காகக் கண்காணியுங்கள்.
  • வெள்ளையான உருண்டையான அந்துப்பூச்சி முட்டைகளையும், புழுக்களையும் பார்த்தால், எடுத்துவிடுங்கள்.
  • பெண் பூச்சிகள் முட்டை இடாமல் தடுக்க, ப்ராஸ்ஸிகா பயிர்களைச் சன்னமான வலை அமைப்பிற்குள் வளர்க்கவும்.
  • தலை உருவாகும் ஆரம்பக்கால வளர்ச்சியின் போது, அவை உச்சநிலை எண்ணிக்கையை அடைவதைத் தவிர்க்க முன்னதாகவே பயிரிடவும்.
  • பாதிக்கப்படாத மூலப் பயிர்களை நடு நடுவே பயிரிடவும்.
  • பூச்சிக்கொல்லிகளின் கட்டுப்பாடான பயன்பாடு மூலம் இயற்கை எதிரிகளின் எண்ணிக்கையை ஊக்குவிக்கவும்.
  • அந்துப்பூச்சிகளைக் கவர்ந்திழுத்து, அதிக அளவில் பிடிக்க, ஃபெரொமோன் பொறிகளைப் பயன்படுத்தவும்.
  • முட்டைக்கோசு வயல்களுக்கு அருகே பாதிக்கப்படக்கூடிய தாவரங்களைப் பயிரிடுவதைத் தவிர்க்கவும்.
  • மாற்று மூலப் பயிர்களாக களைகள் மாறிவிடக்கூடும் என்பதால் அவற்றைக் களைந்து விடவும்.
  • கூட்டுப் புழுக்களை (ப்யூப்பா) அவற்றின் எதிரிகளுக்கும், குளிர்ந்த வெப்பநிலைக்கும் வெளிக்காட்ட, அறுவடைக்குப் பின்னர் நிலத்தை உழுவவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க