Delia platura
பூச்சி
மாமிசப்புழுக்கள் மண்ணில் உள்ள கரிமப்பொருட்களையும், வளரும் நாற்றுகளையும் உண்ணும். இவை விதைகளையும் குடைந்து, பெரும்பாலும் வளர்ந்து வரும் திசுக்களை அழித்து முளைப்பதைத் தடுக்கின்றன. அப்படியும் அந்த விதை முளைத்தால், இளம் இலைகளில் மாமிசப்புழுக்களின் உண்ணும் சேதங்கள் தெளிவாக தெரியும். திசுக்களில் அழுகல் ஏற்படலாம். நாற்றுகள் வாடிய, குன்றிய, சிதைந்த தாவரங்களாக உருவாகக்கூடும், இவை குறைந்த தரம் மற்றும் குறைந்த விளைச்சலை உடைய சில விதைகளை தரலாம். மண் ஈரமாக இருந்தால் மற்றும் நீண்ட காலமாக குளிர்ந்த வானிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருந்தால், குறிப்பிடத்தக்க சேதங்கள் காணப்படும்.
இதன் நிலத்திற்கு அடியிலான வாழ்க்கை காரணமாக, இந்த மாமிசபுழுவுக்கு அதிக எண்ணிக்கையிலான இயற்கை எதிரிகள் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும், முதிர்ந்த பூச்சிகள் மீது தரை வண்டுகள், சிலந்திகள் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. முட்டைப்புழுக்கள் பூஞ்சை நோய்களால் பாதிக்கப்படலாம். இருப்பினும், இரைப்பிடித்துண்ணிகளும் பூஞ்சை நோய்களும் போதுமான கட்டுப்பாட்டை வழங்குவதில்லை. ஈக்கள் இயற்கையாகவே பிரகாசமான வண்ணங்களால் ஈர்க்கப்படுகின்றன, எனவே இவை பிரகாசமான வாளிகளில் வைக்கப்படும் சோப்பு நீரில் சிக்கிக்கொள்ளலாம்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். மாமிசப்புழுக்களை அப்புறப்படுத்த விதைகளை பூச்சிக்கொல்லிகள் கொண்டு சிகிச்சையளிக்கலாம். பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம், ஆனால் உங்கள் நாட்டில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து அறிந்து வைத்திருக்கவும். மண்ணில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தலாம்.
டெலியா பிளாட்டூரா மற்றும் டி. ஆன்டிகா ஆகிய ஈக்களின் மாமிசப்புழுக்களால் அறிகுறிகள் ஏற்படுகின்றன. முதிர்ந்த பூச்சிகள் நிறத்தில் வீட்டு ஈக்களை போலவும், அளவில் சிறியதாகவும் மெல்லியதாகவும் இருக்கும். இவை முதிர்ந்த வேர்கள் மற்றும் தாவர குப்பைகளுக்கு அருகே மண்ணில் குளிர்காலத்தை செயலற்ற நிலையில் கழிக்கும். விதைகள் நடப்பட்டவுடன் முதிர்ந்த பூச்சிகள் வசந்த காலத்தில் பறக்கத்துவங்கும். பெண் பூச்சிகள் சிதைந்துபோகும் பொருள் அல்லது எருவை அதிகளவில் கொண்டிருக்கும் ஈரமான மண்ணில் தங்கள் முட்டைகளை இடுகின்றன. மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில், காலில்லாத முட்டைப்புழுக்கள் ஒரு வாரத்திற்கு பிறகு முட்டையிலிருந்து வெளியேறி, அழுகும் கரிமப் பொருட்களையும் நாற்றுகளையும் சாப்பிடத் தொடங்குகின்றன. குளிர்ந்த, ஈரமான வானிலை சூழல்களில் சேதம் அதிகமாக உள்ளது, இது பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சிக்கும் அதன் உணவு நடவடிக்கைகளுக்கும் சாதகமானது. இதனையொட்டி, வெப்பமான மற்றும் வெயில் காலங்கள் முட்டை இடப்படுவதை தடுக்கிறது மற்றும் தாவரங்களை வேகமாகவும் கடினமாகவும் வளர வைக்கிறது.