விதையவரை

இலை சுரங்க ஈக்கள்

Agromyzidae

பூச்சி

சுருக்கமாக

  • இலைகளின் மீது, இலையின் நரம்புகளால் வரையறுக்கப்பட்ட, ஒழுங்கற்ற வளைந்து நெளிந்த சாம்பல் கோடுகள் காணப்படும்.
  • இலைகள் முதிர்ச்சி அடைவதற்கு முன்பே உதிரக்கூடும்.

இதிலும் கூடக் காணப்படும்

29 பயிர்கள்

விதையவரை

அறிகுறிகள்

முட்டைப்புழுக்கள் உண்ண உண்ண, ஒழுங்கற்ற, வளைந்து நெளிந்த சாம்பல் கோடுகள் இலைகளின் இரு பக்கங்களிலும் தோன்றும். இந்தப் பொந்துகள் பொதுவாக இலை நரம்புகளால் வரையறுக்கப்பட்டு, சுரங்கப் பாதைக்குள் மெலிதான சுவடுகளாகக் காணப்படும் கழிவுப் பொருட்களைக் கொண்டிருக்கும். முழு இலைகளிலும் சுரங்கங்கள் போன்ற அமைப்புகளால் மூடப்பட்டிருக்கும். சேதமடைந்த இலைகள் முதிர்ச்சியடைவதற்கு முன்னரே உதிரக்கூடும் (இலை உதிர்தல்). இலை உதிர்தலானது விளைச்சல் மற்றும் பழங்களின் அளவை குறைத்து, பழங்களில் வேனிற்கட்டிகளை ஏற்படுத்தக்கூடும். தக்காளி இலை துளைப்பானுடன் (டுட்டா அப்சலுடா) இவற்றின் அறிகுறிகள் ஒத்திருப்பதால் அவற்றுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம், ஏனெனில் அவற்றின் சுரங்கங்கள் இலை சுரங்க ஈக்கள் ஏற்படுத்தும் சுரங்கங்களை விட அகலமானதாகவும், வெள்ளையாகவும் அல்லது ஒளிபுகும் தன்மை கொண்டதாகவும் இருக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பசை போன்ற ஒட்டும் பொறிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்த நேரடி முறையாகக் கருதப்படுகிறது. அதிகாலையில் அல்லது அந்தி சாயும் வேளையில் வேப்ப எண்ணெய் சார்ந்த பொருட்களை (அஸாடிராக்டின்) இலைகளில் தெளிப்பதன் மூலம் இளம் உயிரிகளைக் கட்டுப்படுத்தலாம். உதாரணமாக வேப்ப எண்ணெயினை (15000 பிபிஎம்) 5 மிலி/லி வீதத்தில் தெளிக்கலாம். அனைத்து இலைகளிலும் தெளித்தலை உறுதி செய்துகொள்ளவும். வேப்ப எண்ணெய் இலையின் சுரங்கங்கள் வழிச்சென்று அங்கிருக்கும் ஈக்களை சென்றடைகின்றன. என்டோமோபகஸ் நெமடோட், ஸ்டெய்னெர்னேமா கார்போகஸே போன்றவற்றை இலை வழியாக பயன்படுத்தும்போது இலை சுரங்கள் ஈக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இயற்கையான ஒட்டுண்ணிக்கள் மற்றும் நூற்புழுக்கள் இலை சுரங்க ஈக்களை இயற்கையாகவே சூறையாடக் கூடியவை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பரந்த வீச்சுகளை உடைய பூச்சிக்கொல்லிகளான ஆர்கனோபாஸ்பேட்ஸ், கார்பமேட்ஸ் மற்றும் பைரித்ராய்ட்ஸ் போன்றவை வளர்ந்த ஈக்கள் முட்டையிடுவதைத் தடுக்கின்றன, ஆனால் அவை முட்டைப்புழுக்களை அழிப்பதில்லை. மேலும், இவை இயற்கை எதிரிகளை அழிக்கவும், ஈக்களில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும், சில சந்தர்ப்பங்களில் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் செய்கிறது. அபாமெக்ட்டின், குளோரன்டிரானிலிப்ரோல், அசெடாமிபிரிட், ஸ்பினோடோரம் அல்லது ஸ்பினோசாட் போன்ற தயாரிப்புகளை ஈக்களில் எதிர்ப்பு சக்தி உருவாகாமல் தடுப்பதற்கு சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகளானது உலகளவில் ஏராளமான இனங்களை உடைய, அஃரோமிஜிடே என்னும் குடும்பத்தை சார்ந்த பல வகையான ஈக்களால் ஏற்படுகிறது. வசந்த காலத்தில், பெண் பூச்சிகள் இலை திசுக்களை துளையிட்டு, பொதுவாக ஓரங்கள் நெடுகிலும் தனது முட்டைகளை இடுகின்றன. மேற்பரப்பிற்கும் கீழ் பரப்பிற்கும் இடையே முட்டைப்புழுக்கள் உண்ணுகின்றன. இவை வெள்ளை நிறத்தில் பெரிய, வளைந்து நெளியும் சுரங்கப் பாதைகளை உருவாக்கி, தாம் உண்ண உண்ண, கருப்பு கழிவுப் பொருட்களை (புழுக்கை) விட்டுச்செல்கின்றன. முட்டைப்புழுக்கள் முதிர்ச்சியடைந்தவுடன், இவை இலையின் அடிப்புறத்தில் துளையினை ஏற்படுத்தி, நிலத்தில் விழுகின்றன, அங்கே இவை கூட்டுப்புழுக்களாகின்றன. புரவலன் தாவரத்திற்கு அருகே உள்ள தாவர குப்பைகள் கூட்டுப்புழுவாவதற்கு இவற்றினுடைய மாற்று இடங்களாகும். இலை சுரங்க ஈக்கள் மஞ்சள் நிறத்தால் ஈர்க்கப்படுகின்றன.


தடுப்பு முறைகள்

  • சுருள் இலைகளாக இருக்கும் பயிர் வகைகளைப் பயன்படுத்தவும்.
  • ஏனெனில் அவற்றில் இலை சுரங்க ஈக்கள் பாதிப்பினை ஏற்படுத்துவது கடினம், அத்துடன் இவை இலை சுரங்க ஈக்கள் பாதிப்பு எதிர்பார்க்கப்படும் இடங்களில் மாற்றுப் பயிராகவும் பயன்படும்.
  • பயிரிடும் முன்பே பயிரில் இலை சுரங்க ஈக்கள் அல்லது இலை சுரங்கங்கள் இருப்பது குறித்து சோதனை செய்யவும்.
  • ஒருவேளை இருப்பின் அவற்றை அழிக்கவும்.
  • (நாற்றுக்களை பயிரிடும்போது இலை சுரங்க ஈக்கள் பரவினால் வெகு விரைவாகவே அதிவேக பாதிப்பினை ஏற்படுத்தவல்லது). வாரந்தோறும் பயிரின் வளர்ச்சியினை கண்காணிக்கவும்.
  • இலைகளின் மேற்பரப்பில் சுரங்கள் அல்லது ஓட்டைகள் போன்ற சிறிய அமைப்புகள் இருப்பது குறித்து பார்வையிடவும்.
  • இலைகளின் மேற்பரப்புகளில் அல்லது சுரங்கங்களின் உட்பகுதியில் இளம் உயிரிகள் இருக்கிறதா எனப் பரிசோதிக்கவும்.
  • மஞ்சள் ஒட்டும் பொறிகள் அல்லது பசை போன்ற ஒட்டும் பொறிகளைப் பயன்படுத்தி தற்போதைய அளவில் இலை சுரங்க ஈக்கள் இருப்பது குறித்து ஆய்வு செய்யவும்.
  • 100 பயிர்களில் 8 முதல் 12 பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பின் அவற்றை நேரடிக் கட்டுப்பாட்டின் மூலம் தடுக்க முயலவும்.
  • அதிகப்படியாக இலை சுரங்கங்களாகப் பாதிக்கப்பட்ட பயிர்களை தேர்வு செய்து அவற்றை நொறுக்குதல் அல்லது புதைத்தல் அல்லது கால்நடைகளுக்கு உணவாகக் கொடுப்பதன் மூலம் அழிக்கவும்.
  • பாதிக்கப்பட்ட பயிர்களில் எஞ்சிய பாகங்களை அழிப்பது மற்றும் புதைப்பது முக்கியமானதாகும், ஏனெனில் அவை பிற இலைச் சுரங்க ஈக்களுக்கு உயிர்வாழத் தகுந்த இடமாக மாறிவிடும்.
  • ஒரே பகுதியில் வரிசையாக தக்காளிச் செடிகள் நடவு செய்யப்பட்டிருக்கும் நேரத்தில், கடைசி அறுவடை முடிந்தவுடன் உடனடியாக பழைய செடிகளை அழிப்பதன் மூலம் புதிய செடிகளுக்கு ஆரம்பகால தொற்று ஏற்படுவதை வெகுவாகக் குறைக்கலாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க