வெள்ளரிக்காய்

துள்ளும் வண்டுகள் (ஃப்ளீ பீட்டில்)

Chrysomelidae

பூச்சி

சுருக்கமாக

  • இலைகளில் உண்ணும் சேதங்கள்.
  • சிறிய குண்டடி பட்டது போன்ற துளைகள்.
  • உண்ணும் பகுதிகளை சுற்றி லேசான மஞ்சள் நிறம்.

இதிலும் கூடக் காணப்படும்

25 பயிர்கள்

வெள்ளரிக்காய்

அறிகுறிகள்

வளர்ந்த பூச்சிகள், இலைகளை உண்ணுகின்றன. சிறிய சிதறிய ரவைக்குண்டுகள்-போன்ற துளைகள் (1-2 மிமீ) போலவும், இலைப்பகுதியின் குறுக்கே செல்லாத, கடித்து மென்ற ஓட்டைகள் போலவும் (துளையிடல்) சேதங்கள் தோன்றும். சேதமடைந்த திசுவைச் சுற்றி சிறிய மஞ்சள் படலம் ஏற்படலாம். சம்பந்தப்பட்ட இனங்களுக்குத் தகுந்தாற்போல் மாறுபடும் ஆழங்களைக் கொண்ட, குறுகிய, நேரான சுரங்கத் துவாரங்களால் கிழங்குகள் துளைக்கப்படும். சேதத்தின் ஒரு பகுதியாக, கிழங்கின் மேற்பரப்பில் புடைப்புகள் தோன்றும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

கண்ணாடி இறக்கை பூச்சியின் முட்டைப்புழுக்கள் (க்ரிஸோபா இனங்கள்), வளர்ந்த டேம்சல் பூச்சிகள் (நேபிஸ் இனங்கள்) மற்றும் சில ஒட்டுண்ணியான குளவிகள், துள்ளுப்பூச்சி வண்டுகளைக் கொன்றோ, தின்றோ அழிக்கின்றன. சில நூற்புழுக்கள் மண்ணில் வாழும் முட்டைப்புழுக்களை கொன்றுவிடும். அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க, பூஞ்சை நோய்க்காரணிகள், பூச்சிக்கொல்லி சோப்புகள் அல்லது பாக்டீரியா சார்ந்த பூச்சிக்கொல்லியான ஸ்பினோசட் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகளோடு, தடுப்பு நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து கிடைத்தால், அத்தகைய அணுகுமுறையை எப்பொழுதும் கருதுங்கள். வண்டுகள் பாதிக்கப்படையும் காலங்களில், அதாவது அவை இலைகளில் தோன்றும்போது பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டும். குளோர்பைரிபாஸ் மற்றும் மாலதியான் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட தயாரிப்புகள் அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, நன்றாக வேலை செய்கின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

பல்வேறு தாவரங்களை பாதிக்கக்கூடிய பல்வேறு வகையான துள்ளு வண்டுகள் (ஃப்ளீ பீட்டில்) உள்ளன. பெரும்பாலான வளர்ந்த பூச்சிகள் சிறியதாக (சுமார் 4 மிமீ), கருமையான நிறங்கள் கொண்டு, சில சமயம் ஒரு பளபளப்பான மின்னும் அம்சத்தையும் கொண்டிருக்கும். அவை முட்டை வடிவமான உடலையும், குதிக்க ஏதுவான பெரிய பின்னங்கால்களையும் கொண்டிருக்கும். முட்டைப்புழுக்கள் மண்ணில் வாழ்ந்து, வேர்கள் அல்லது கிழங்குகளை உண்ணுகின்றன. வளர்ந்த பூச்சிகள் இளம் செடிகளை உண்ணுகின்றன. பெரும்பாலான துள்ளுப்பூச்சி வண்டுகள் (ஃப்ளீ பீட்டில்) தாவர மிச்சங்கள், மண் அல்லது வயல்களைச் சுற்றிய களைகளில் குளிர்கால ஓய்வுறக்கம் கொள்கின்றன. அவை பின்னர் வசந்த காலத்தில் மீண்டும் தீவிரமாகிவிடுகின்றன. இனங்களையும், காலநிலைகளையும் பொறுத்து, ஆண்டு ஒன்றுக்கு, 1 முதல் 4 தலைமுறைகள் வளரும். துள்ளுப்பூச்சி வண்டுகள் சூடான, வறண்ட நிலைகளை விரும்புகின்றன.


தடுப்பு முறைகள்

  • வளர்ந்த பின் அதன் செயல்பாட்டின் உச்ச நிலையைத் தவிர்க்க, நடவு நேரத்தை (முன்னரோ, பின்னரோ) மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
  • துள்ளும் வண்டுக்கு (ஃப்ளீ பீட்டில்) கவர்ச்சிகரமான தாவரங்களை பொறியாகப் பயிரிடுங்கள்.
  • நோய்ப்பூச்சிகளை எதிர்க்க அல்லது தடுக்கக்கூடிய புரவலன் அல்லாத தாவரங்களை நடவு செய்யவும்.
  • தழை கூளங்கள் முட்டையிடும் நிலையையும், முட்டைப்புழு நிலையையும் பாதிக்கின்றன.
  • உங்கள் தாவரங்களை, குறிப்பாக வசந்த காலத்தில் கண்காணியுங்கள்.
  • அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும், நீரையும் பயிர்களுக்கு வழங்கவும்.
  • உங்கள் வயலிலிருந்து களைகளையும், பிற மூலப் பயிர்களையும் அகற்றிவிடவும்.
  • பயிர் மிச்சங்களை அழித்தும், உழுதும் அடைக்கலப் பகுதிகளை அகற்றவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க