வெள்ளரிக்காய்

மாவுப்பூச்சி

Pseudococcidae

பூச்சி

சுருக்கமாக

  • வெள்ளைப் பஞ்சு போன்ற கொத்துக்கள் இலைகள், தண்டுகள், மலர்கள் மற்றும் பழங்களின் மீது காணப்படும்.
  • இலைகள் மஞ்சள் நிறமாகி சுருண்டுக்கொள்ளும்.
  • குன்றிய வளர்ச்சி காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


வெள்ளரிக்காய்

அறிகுறிகள்

வெள்ளை பஞ்சு போன்ற கொத்துக்களாக வண்டு கூட்டங்கள் இலைகள், தண்டுகள், பூக்கள் மற்றும் பழங்கள் ஆகியவற்றின் அடிப்பகுதியில் தோன்றும். பூச்சிகளின் தொற்றுகள் இளம் இலைகள் மஞ்சள் நிறமாகி சுருண்டு போகுதல், தண்டுகளின் வளர்ச்சி குறைவு மற்றும் பழங்கள் முன்னதாகவே கீழே விழுந்துவிடுதல் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். திசு சாறுகளை உறிஞ்சுவதால் பூச்சிகள் தேன்துளியினை சுரக்கிறது. இந்த திசுக்கள் சந்தர்ப்பவாத பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்றவற்றை ஒட்டிக்கொள்ளச் செய்து, காலனித்துவப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, பழங்கள் அதிகமாக பாதிப்படைய வாய்ப்பு உள்ளது மற்றும் அவை சிதைக்கப்படலாம் அல்லது அவை மெழுகு சுரப்பு மூலம் முழுவதுமாக மூடப்படலாம். எறும்புகள் தேன்துளியினால் ஈர்க்கப்பட்டு, பூச்சிகளை பிற தாவரங்களுக்கு பரப்பக்கூடும். முதிர்ச்சியான இலைகளின் சிதைவுகள் மற்றும் சீர்குலைவு மிகவும் குறைவு.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இலேசான தொற்றுகளின் முதல் அறிகுறியில், எண்ணெய் அல்லது சாராயத்தில் காட்டன் பஞ்சுகளை நனைத்து மாவுப்பூச்சியின் காலனிகளை துடைக்கவும். நீங்கள் பூச்சிக்கொல்லி சோப்பை தாவரங்களில் தெளிக்கலாம். அதன் எண்ணிக்கை பரவுவதை தடுப்பதற்காக அருகிலுள்ள தாவரங்களின் மீது வேப்ப எண்ணெய் அல்லது பைரெத்ரின்களை தெளிக்கலாம். அவற்றின் எதிரிகள் பச்சை கண்ணாடி இறக்கை பூச்சிகள், ஒட்டுண்ணி குளவிகள், மிதவை ஈக்கள், லேடிபேர்ட் வண்டுகள், மாவுப்பூச்சி அளிப்பான்கள், இரைப்பிடித்துண்ணி பட்டாம்பூச்சி ஸ்பால்ஜிஸ் எபியஸ் போன்றவை ஆகும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். மாவுப்பூச்சிகளுக்கு எதிரான சிகிச்சை மிகவும் கடினமானவை ஏனென்றால் அவற்றின் மெழுகு அடுக்குகள் மற்றும் இழைகள், அவைகளை மோசமான சுற்றுச்சூழல் நிலைகளிலிருந்து பாதுகாக்கின்றன. இருப்பினும் இமிடாக்ளோப்ரிட், அசிடமிப்ரிட் மற்றும் குளோர்பைரிஃபோஸ் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இலைவழிகளான தீர்வுகள் மாவுப்பூச்சிகளுக்கு எதிராக திறம்பட செயல்படுகின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

மாவுப்பூச்சிகள் சூடான அல்லது மிதமான காலநிலையில் காணப்படும் நீளுருண்டை, இறக்கையில்லா பூச்சிகள் ஆகும். அவற்றின் உடல் மெல்லிய மாவு போன்ற மெழுகினால் மூடப்பட்டு, அது அவைகளுக்கு பஞ்சு போன்ற தோற்றத்தை அளிக்கிறது. அது அவற்றின் நீண்ட குத்தக்கூடிய மற்றும் உறிஞ்சக்கூடிய கூர்மையான அலகினை மர திசுக்களில் நுழைத்து, அவற்றின் சாறுகளை உறிஞ்சும் . இதன் அறிகுறிகள் அவை உண்ணும்போது மரங்களினுள் செலுத்தும் நச்சுப்பொருட்களின் செயல்பாடுகளே ஆகும். மாவுப்பூச்சிகள் மண்ணிலும் தனது முட்டைகளையிடும். பூச்சிக்குஞ்சுகள் வெளியானபிறகு, இளம் மற்றும் முதிர்ச்சியான பூச்சிகள் அண்டை தாவரங்களுக்கு ஊடுருவ கூடும். காற்று, எறும்புகள், மிருகங்கள், பறவைகள் அல்லது சீரமைப்பு அல்லது அறுவடை போன்ற சாதாரண வயல் வேலைகளின் போது அவை நீண்ட தூரத்திற்கு பரவக்கூடும். கத்திரிக்காய் மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு, அதே போல் பல களைகள் போன்ற மாற்று புரவலன்கள் அவற்றுக்கு பல உள்ளன. சூடான வெப்பநிலை மற்றும் வறண்ட வானிலை போன்றவை அவற்றின் வாழ்க்கை சுழற்சி மற்றும் அறிகுறிகளின் தீவிரத்தை ஆதரிக்கின்றன.


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமான தாவரங்கள் அல்லது சான்றளிக்கப்பட்ட ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட விதைகள் மற்றும் செடிகளை பயன்படுத்தவும்.
  • வயலை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • பாதிக்கப்பட்ட மரங்கள் அல்லது மர பாகங்களை அகற்றி, அழித்துவிடவும்.
  • வயல்களில் உள்ள அல்லது அதனை சுற்றியுள்ள களைகளை அகற்றவும்.
  • இப்பகுதியில் மாற்று புரவலன்களை வளர்க்க வேண்டாம்.
  • வயலில் வேலை செய்யும் போது மாவுப்பூச்சிகள் பரவாமல் இருப்பதைக் கவனமாக பார்த்துக்கொள்ளவும்.
  • நல்ல வயல்வெளி நடைமுறைகளுடன் இரைபிடித்துண்ணி எண்ணிக்கையை ஊக்குவிக்கவும்.
  • வெள்ள நீர்ப்பாசனத்தை தவிர்க்கவும் மற்றும் அதிகப்படியான உரங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
  • தண்டு அல்லது கிளைகள் மீது ஒட்டும் பட்டைகள் கொண்டு எறும்புகளை கட்டுப்படுத்தவும்.
  • உபகரணங்கள் மற்றும் கருவிகளை கிருமி நீக்கம் செய்வது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.
  • எளிதில் பாதிப்படையாத தாவரங்களை கொண்டு பயிர் சுழற்சி செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க