Epilachna vigintioctopunctata
பூச்சி
முதிர்ந்த வண்டுகள் மற்றும் முட்டைப்புழுக்கள் இரண்டுமே இலைகளை உண்டு, கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இலை நரம்புகளுக்கு இடையேயான பச்சை திசுக்களின் உண்ணும் சேதங்கள் இவற்றின் ஆரம்ப அறிகுறிகளாகும். பின்னர், எலும்புக்கூடு என்று அழைக்கப்படும் குணாதிசய சேதம் ஏற்படும். இதன் விளைவாக இலைகளின் (முக்கிய நரம்புகள் மற்றும் இலைக்காம்புகள்) கடினமான பகுதிகள் மட்டுமே எஞ்சியிருக்கும். பழங்களின் மேற்பரப்புகளில் ஆழமற்ற துளைகளும் காணப்படும். பாதிக்கப்பட்ட நாற்றங்கால் அழிக்கப்பட்டு, முதிர்ச்சியடைந்த தாவரங்களின் வளர்ச்சி குன்றிவிடக்கூடும். இந்த வண்டு கடுமையான இலை உதிர்வு மற்றும் அதிக விளைச்சல் இழப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே இது கத்திரிக்காயை தாக்கும் மிகவும் ஆபத்தான பூச்சிகளில் ஒன்றாகும்.
பீடியோபியஸ் குடும்பத்தின் ஒட்டுண்ணி குளவிகளை, பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். இந்தக் குளவிகள் நன்மை பயக்கும் கரும்புள்ளிகள் கொண்ட செந்நிற வட்டச் சிறு வண்டு வகைகளையும் தாக்கும், எனவே அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு கவனமாக பூச்சிகளை அடையாளம் காண்பது அவசியம்.நோயாக்க நுண்ணியிரிகளும் இலை உண்ணும் வண்டுகளின் எண்ணிக்கையை குறைக்க உதவும். பாக்டீரியம் பாசில்லஸ் துரிங்ஜின்சிஸ் அல்லது பூஞ்சை ஆஸ்பெர்ஜில்லஸ் எஸ்பிபி ஆகியவற்றை கொண்ட உயிரியல் பூச்சிக்கொல்லிகளை இலைவழி தெளிப்பான்களாக பயன்படுத்தலாம். ரிசினஸ் கம்யூனிஸ் (ஆமணக்கு எண்ணெய்), கலோடிராபிஸ் ப்ராசெரா மற்றும் டாட்டூரா இந்நாக்சியா ஆகியவற்றின் இலை சாறுகளை இலை தொகுதிகளில் தெளிக்கலாம். சாம்பலைப் பயன்படுத்துவது ஆரம்ப காலங்களில் தொற்றுநோயை திறம்பட குறைக்க உதவுகிறது.
ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் முதலில் கருத்தில் கொள்ளுங்கள். பூச்சிக்கொல்லிகள் தேவைப்பட்டால், டைமீதோயேட், ஃபென்வெலாரெட், குளோரோபைரிபோஸ் மற்றும் மாலத்தியான், ஆகியவற்றைக் கொண்டிருக்கும் தயாரிப்புகளை இலைத்தொகுதிகளுக்கு பயன்படுத்தலாம்.
முதிர்ந்த வண்டுகள் நீள்வட்ட வடிவத்தில், மங்கலான ஆரஞ்சு நிறத்தில், 28 கருப்பு புள்ளிகளுடன், சிறிய மென்மையான முடிகளை தனது முதுகில் கொண்டிருக்கும். பெண் வண்டுகள் நீள்வட்ட, மஞ்சள் முட்டைகளை (0.4-1 மிமீ) சிறிய கொத்துகளாக இலைகளின் கீழ்புறத்தில் இடும். சுமார் 4 நாட்களுக்குப் பிறகு, நீண்ட, கருத்த-கூர்மையான பிளவுபட்ட முள் போன்றவற்றை தனது முதுகில் கொண்ட வெளிர் மஞ்சள்-வெண்ணிற முட்டைப்புழுக்கள் வெளியே வரும். முட்டைப்புழுக்கள் வெப்பநிலையை பொறுத்து, சுமார் 18 நாட்களுக்குள் சுமார் 6 மிமீ வரை வளரும். பின்னர் அவை இலைகளுக்கு கீழ்புறம் சென்று கூட்டுப்புழுவாக மாறும். மேலும் 4 நாட்களுக்கு பிறகு, புதிய தலைமுறை வண்டுகள் புழுக்கூட்டிலிருந்து வெளிப்படுகின்றன. இனப்பெருக்க காலத்தில் (மார்ச்-அக்டோபர்), குளிரான வெப்பநிலை அவற்றின் வாழ்க்கை சுழற்சி மற்றும் எண்ணிக்கை வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். வண்டுகள் தனது செயலற்று இருக்கும் காலங்களை மண்ணிலும், உலர்ந்த இலைகளின் குவியல்களிலும் கழிக்கும்.