சோயாமொச்சை

வெள்ளை ஈக்கள்

Aleyrodidae

பூச்சி

சுருக்கமாக

  • இலைகளில் மஞ்சள் நிற புள்ளிகள்.
  • புகை போன்ற பூஞ்சை வளர்ச்சி.
  • இலை உருக்குலைவு - சுருண்ட அல்லது கப் வடிவம்.
  • குன்றிய வளர்ச்சி.
  • வெள்ளை முதல் மஞ்சள் நிறத்திலான சிறிய பூச்சிகள்.

இதிலும் கூடக் காணப்படும்

45 பயிர்கள்

சோயாமொச்சை

அறிகுறிகள்

வெள்ளை ஈக்கள் திறந்தவெளி மற்றும் பசுமை இல்லங்களில் வளர்க்கப்படும் பலவகையான பயிர்களில் பொதுவாக காணப்படும். முதிர்ந்த மற்றும் இளம் பூச்சிகள் இரண்டும் தாவர சாறுகளை உறிஞ்சி, இலைகள், தண்டுகள் மற்றும் பழங்களில் தேன்துளியினை வெளியேற்றும். பாதிக்கப்பட்ட திசுக்களில் வெளிறிய புள்ளிகள் மற்றும் பூசண வளர்ச்சிகள் உருவாகும். கடுமையான தொற்றுநோய்களின் போது, இந்த புள்ளிகள் இணைந்து நரம்புகளைச் சுற்றியுள்ள பகுதியைத் தவிர, முழு இலைகளிலும் பரவக்கூடும். இலைகள் பின்னர் சிதைந்து, சுருண்டு அல்லது குவளை போன்ற வடிவத்தை பெறலாம். வெள்ளை ஈக்கள் சில தக்காளி மஞ்சள் இலை சுருள் வைரஸ் அல்லது மரவள்ளிக்கிழங்கு பழுப்பு கோடு வைரஸ் போன்ற வைரஸ்களை பரப்புகின்றன.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சம்பந்தப்பட்ட வெள்ளை ஈக்களின் குறிப்பிட்ட இனங்கள் மற்றும் பயிர் ஆகியவற்றைப் பொறுத்து உயிரியல் தீர்வுகள் மாறுபடும். சர்க்கரை-ஆப்பிள் எண்ணெய் (அனோனா ஸ்குவாமோசா) அடிப்படையிலான இயற்கையான பூச்சிக்கொல்லிகள், பைரெத்ரின்ஸ், பூச்சிக்கொல்லி சோப்புகள், வேப்ப விதை சாறு (என்எஸ்கேஇ 5%), வேப்ப எண்ணெய் (5 மில்லி/லி தண்ணீர்) ஆகியவை பரிந்துரைக்கப்படுகிறது. பௌவேரியா பாசியானா, இசாரியா ஃபியுமோசோரோசி, வெர்டிசிலியம் லெகானி மற்றும் பேசிலோமைசிஸ் ஃபியுமோசோரோசியஸ் போன்றவையும் நோய்க்கிருமி பூஞ்சையில் அடங்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வெள்ளை ஈக்கள் விரைவாக அனைத்து பூச்சிக்கொல்லிகளுக்கும் எதிர்ப்பு திறனை உருவாக்குகிறது, எனவே பல்வேறு தயாரிப்புகளை சுழற்சி முறையில் உபயோகிப்பது பரிந்துரைக்கப்படுகிறது. பூச்சிகளைக் கட்டுப்படுத்த பைஃபென்திரின், புப்ரோபெஜின், ஃபெனோக்சிகார்ப், டெல்டாமெத்ரின், அசாதிராச்டின், லாம்படா-சைஹலோத்ரின், சைபர்மெத்ரின், பைரெத்ராய்ட்ஸ் பைமெட்ரோஜின் அல்லது ஸ்பிரோமெசிஃபென் ஆகியவற்றின் அடிப்படையிலான பூச்சிக்கொல்லிகளின் கலவையைப் பயன்படுத்தவும். தடுப்பு நடவடிக்கைகள் பெரும்பாலும் எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்க போதுமானவை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இது எதனால் ஏற்படுகிறது

வெள்ளை ஈக்கள் 0.8 - 1 மிமீ நீளம் கொண்டிருக்கும் மற்றும் அவற்றின் உடல் மற்றும் இரண்டு ஜோடி இறக்கைகள் வெள்ளை முதல் மஞ்சள் நிற தூளான, மெழுகு சுரப்புகளுடன் காணப்படும். அவை பெரும்பாலும் இலைகளின் கீழ்ப்பகுதியில் காணப்படுகின்றன மற்றும் அவற்றை தொந்தரவு செய்தால், அவை வெளியாகி மேகம் போன்று சூழ்ந்து கொண்டு பறக்கும். இவை சூடான, வறண்ட நிலையில் செழித்து வளர்கின்றன. முட்டைகள் இலைகளின் அடிப்பகுதியில் இடப்படுகின்றன. இளம் பூச்சிகள் மஞ்சள் முதல் வெள்ளை நிறத்தில், தட்டையாக, நீள்வட்ட வடிவில் மற்றும் வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும். முதிர்ந்த வெள்ளை ஈக்களால் புரவலன் தாவரங்களில் சில நாட்களுக்கு மேல் உண்ணாமல் உயிர் வாழ முடியாது. இதுதான் களை மேலாண்மையை ஒரு முக்கியமான எண்ணிக்கை கட்டுப்பாட்டு நடவடிக்கையாக ஆக்குகிறது.


தடுப்பு முறைகள்

  • வெள்ளை ஈக்களை ஈர்க்கும் அல்லது தடுக்கும் துணை பயிர்களை பயன்படுத்தவும் (நாஸ்டர்டியம், சூரியகாந்தி இனச்செடி, ரீங்கார பறவை புதர், அன்னாசி ஜாதிபத்திரி, தேனீ தைலம்).
  • அண்டை நிலத்தின் விவசாயிகளிடம் கலந்துரையாடி, மிக விரைவாகவோ அல்லது தாமதமாகவோ அல்லாமல், சரியான நேரத்தில் விதைப்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
  • நடவு செய்ய அடர்த்தியான தாவர இடைவெளியைப் பயன்படுத்தவும்.
  • புதிதாக வாங்கிய செடிகள் அல்லது நடவு செய்தவையில் வெள்ளை ஈக்கள் ஏதேனும் தென்படுகிறதா என கண்காணிக்கவும்.
  • மஞ்சள் ஒட்டும் பொறிகளைப் (20/ஏக்கர்) பயன்படுத்தி உங்கள் நிலத்தினை கண்காணிக்கவும்.
  • தாவரத்திற்கு சீராக உரமிடுவதை உறுதி செய்யவும்.
  • பரந்த அளவில் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
  • முட்டைகள் அல்லது முட்டைப்புழுக்கள் இருக்கும் இலைகளை அகற்றவும்.
  • வயலிலும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள களைகளையும் மாற்று புரவலன்களையும் கட்டுப்படுத்தவும்.
  • அறுவடைக்குப் பிறகு பசுமை இல்லங்களில் இருந்து தாவர எச்சங்களை அகற்றவும்.
  • சூடான வெப்பநிலையில் குறுகிய காலத்திற்கு நிலத்தை தரிசாக விடுவதற்கு திட்டமிடுங்கள்.
  • பசுமையில்லங்களில் புற ஊதா கதிர்களை உறிஞ்சும் பிளாஸ்டிக் படங்களைப் பயன்படுத்துவது தொற்றுநோயைக் குறைக்கும்.
  • புரவலன் அல்லாத பயிர்களுடன் ஊடுபயிர் முறையை மேற்கொள்ளவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க