அரிசி

இலைப்பேன்கள்

Thysanoptera

பூச்சி

சுருக்கமாக

  • இலையின் மேற்பரப்பில் சிறிய வெள்ளி நிற திட்டுக்கள்.
  • இலைகள் மஞ்சள் நிறமாகுதல்.
  • இலைகள், மலர்கள் மற்றும் பழங்கள் உருக்குலைந்து போகுதல்.

இதிலும் கூடக் காணப்படும்

41 பயிர்கள்
ஆப்பிள்
சீமைவாதுழைப்பழம்
வாழைப் பழம்
பார்லிகோதுமை
மேலும்

அரிசி

அறிகுறிகள்

இலைகளின் மேல் பகுதியில் சிறிய வெள்ளி திட்டுகளை தென்படுகின்றன. இது 'வெள்ளி நிறமடைதல்' எனப்படும் ஒரு விளைவு ஆகும். அதே திட்டுகள் நிறம் அகற்றப்பட்ட இதழ்களிலும் தோன்றலாம். இலைகளின் கீழ்ப்பகுதியில், பேன்களும் அவற்றின் இளம் உயிரிகளும் தங்கள் கருப்பு நிற சாணங்களோடு சேர்ந்து கூட்டமாக ஒன்றாக உட்கார்ந்திருக்கும். பாதிக்கப்பட்ட தாவரங்களின் இலைகள் மஞ்சளடைந்து, வாடி, சிதைந்தோ, சுருங்கியோ போய்விடுகின்றன. மொட்டுகளோ, மலர்களோ வளரும் பிற்பகுதிகளில் அவற்றை உணவாகக் கொண்டுவிட்டால், வடுவற்ற, வளர்ச்சி குன்றிய உரு சிதைந்த மலர்களோ, பழங்களோ உற்பத்தி செய்யப்பட்டு, அதன் விளைவாக , விளைச்சல் இழப்புக்களும் நேரிடுகிறது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

குறிப்பிட்ட பேன்களுக்காக சில உயிரியல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பூச்சிக்கொல்லி ஸ்பினோஸாட் பயன்பாடு மற்ற அனைத்து இரசாயன, உயிரியல் உருவாக்கங்களைவிட பேன்களுக்கு எதிராகச் செயல்படுவதில் பொதுவாக மிகவும் சிறந்ததாகும். இது 1 வாரம் அல்லது அதற்கும் அதிகமான காலத்திற்கு நீடித்திருக்கும். தெளிக்கப்பட்ட திசுக்களுக்குள் குறுகிய தூரத்திற்கு போகவல்லது. இருப்பினும் இது சில இயற்கை எதிரிகளுக்கும் (எ.கா, சூறையாடும் பூச்சிகள், ஸிர்ஃபிட் ஈக்களின் முட்டைப்புழுக்கள்) தேனீக்களுக்கும் நச்சுத்தன்மை கொண்டதாக இருக்கக் கூடும். பூக்கும் தாவரங்களில் ஸ்பினோஸாட் பயன்படுத்த வேண்டாம். மலர்களில் பேன்கள் நோய்த் தொற்றை பொறுத்தவரையில், சில பூச்சிக்கொல்லிகளுடன் பூண்டு சாற்றின் கலவை நன்றாக வேலை செய்யக் கூடும். பூக்கள் அல்லாமல் இலைகளை மட்டும் தாக்கும் பூச்சிகளுக்கு எதிராக வேப்ப எண்ணெய் அல்லது இயற்கை பைரெத்ரின்களை இலைகளின் அடிப்புறத்தில் பயன்படுத்தவும். அதிக பிரதிபலிப்பு கொண்ட புற ஊதா தழைக்கூளம் (உலோகமயமாக்கப்பட்ட பிரதிபலிப்பு தழைக்கூளம்) பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். உயர்ந்த இனப்பெருக்க விகிதங்களாலும், அவற்றின் வாழ்க்கைச் சுழற்சிகளினாலும், பேன்கள் பல்வேறு வகை பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டுள்ளன. பயனுள்ள தொடர்பு கொண்ட பூச்சிக்கொல்லிகளுள் ஃபிப்ரோனில், இமிடாகுளோபிரிட் அல்லது அசிட்டமிப்ரிட் உள்ளிட்டவை அடங்கும், இதில் பல தயாரிப்புகளுடன் பைப்ரோனில் பூடாக்சைடு சேர்க்கப்படுகிறது, இது அதன் செயல்திறனை மேம்படுத்தும்.

இது எதனால் ஏற்படுகிறது

இலைப்பேன்கள் 1-2 மி.மீ. நீளமான, மஞ்சள், கருப்பு அல்லது இரண்டும் கலந்த நிறமுடடையவை . சில வகைகளில் இரண்டு ஜோடி இறக்கைகள் இருக்கும், மற்றவற்றுக்கு இறகுகள் இருப்பது இல்லை. அவை தாவர மிச்சங்களிலோ, மண்ணிலோ, மாற்று மூலப் பயிர்களிலோ ஓய்வுநிலை உறக்கத்தைக் கொண்டிருக்கும். இவை மிகுதியான வைரஸ் நோய்களுக்கான நோய் கடத்திகள். உலர்ந்த சூடான தட்ப நிலைகள் அவற்றின் வளர்ச்சித் தொகையை அதிகரிக்கும். ஈரப்பதம் அதைக் குறைக்கும். காற்று, துணிகள், விவசாயக் கருவிகள் மற்றும் நாம் பயன்படுத்தும் கொள்கலன்கள் போன்றவை நிலத்தில் பயன்படுத்தப்பட்டு முறையாக சுத்தம் செய்யப்படவில்லை எனில், அதன்மூலம் முதிர்ந்த பேன்கள் எளிதில் பரவும்.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்பு சக்தி வாய்ந்த வகைகளை பயிரிடவும்.
  • இலைப்பேன்கள் ஏற்படுவதையும் பரவுவதையும் குறைக்க வரிசைகள் நெடுகிலும் பிளாஸ்டிக் அல்லது கரிம தழைக்கூளங்களை சேர்க்கவும்.
  • எளிதில் பாதிக்கும் வகையிலான பயிர்களை களைகளுக்கு அருகே பயிரிடுவதைத் தவிர்க்கவும்.
  • இலைப்பேன்களை சமாளிக்கவும், நடவுகளை ஆய்வு செய்யவும் சான்றளிக்கப்பட்ட கண்ணாடிக்கூடிகளிலிருந்து வைரஸ் மற்றும் இலைப்பேன்கள் இல்லாத நடவுகளைப் பயன்படுத்தவும்.
  • வயல்களை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • அதிக எண்ணிக்கையில் அவை பிடிபடுவதற்கு ஒரு பெரும் பகுதியின் மீது ஒட்டும் பொறிகளை பயன்படுத்தவும்.
  • மாற்று புரவலன்களுக்கு அருகே நடவு செய்வதை தவிர்க்கவும்.
  • முனைகளில் இருந்து வெட்டுவதற்குப் பதிலாக கிளை பிரியும் பகுதிகள் மற்றும் கணுப்பகுதிகளுக்கு சற்று மேலே தாவரங்களை வெட்டுவதன் மூலம் சீர்த்திருத்தம் செய்யவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களையும், ஏதேனும் தாவரக் குப்பைகள் இருந்தாலும் அதை நீக்கி அழித்து விடவும்.
  • தாவரங்களுக்கு நன்றாகப் பாசனம் செய்யவும்.
  • தழைச்சத்து உரங்களின் அதிகப்படியான பயன்பாடுகளைத் தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க