தினைவகைத் தானியம்

செடிப்பேன் அல்லது அசுவினி (அஃபீட்)

Aphis

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகள் சுருண்டு, உருக்குலைந்து போகும்.
  • இலைகள் மற்றும் தளிர்களுக்கு அடியில் சிறிய பூச்சிகள் காணப்படும்.
  • தாவரங்களின் வளர்ச்சி குன்றிவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்

57 பயிர்கள்
பாதாம் பருப்பு
ஆப்பிள்
சீமைவாதுழைப்பழம்
வாழைப் பழம்
மேலும்

தினைவகைத் தானியம்

அறிகுறிகள்

குறைந்த எண்ணிக்கையிலிருந்து மிதமான எண்ணிக்கை வரையில் இருந்தால், இந்தப் பூச்சிகள் பயிர்களுக்கு பொதுவாக தீங்கு விளைவிப்பதில்லை. கடுமையான தொற்றின் போது, இலைகள் மற்றும் தளிர்கள், சுருண்டு, வாடி, மஞ்சள் நிறமாகி, குன்றிய தாவர வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. தாவரத்தின் வீரியம் பொதுவாக குறைந்து விடுவதைக் காணலாம். செடிப்பேன்கள் தேன் பனியை உற்பத்தி செய்கின்றன, இவை சந்தர்ப்பவாத பூஞ்சைகளால் கூடுதல் தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும், இது இலைகளில் காணப்படும் பூசண வளர்ச்சி மூலம் சுட்டிக்காட்டப்படுகிறது. தேன்பனி எறும்புகளையும் ஈர்க்கிறது. சிறிய எண்ணிக்கையிலான செடிப்பேன்கள் கூட ஒரு தாவரத்திலிருந்து மற்றவற்றுக்கு வைரஸ்களை தொடர்ச்சியாக பரப்பக் கூடியதாக இருக்கின்றன.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நோய்த்தொற்றானது மிதமானதாக இருந்தால், பூச்சிக்கொல்லி சோப்பு கரைசலையோ, தாவர எண்ணெய்களால் ஆன கலவைகளையோ பயன்படுத்தவும் எ.கா, வேப்ப எண்ணெய் (3 மிலி/லி). ஈரப்பதம் நிறைந்து இருக்கும் போது, செடிப்பேன்கள் பூஞ்சை நோய்களால் தாக்கப் படக் கூடியவை. பாதிக்கப்பட்ட தாவரங்களில் லேசாக நீர் தெளிப்பதன் மூலம் கூட அவற்றை நீக்கிவிட முடியும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். இரசாயன பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு செடிப்பேன்களில் எதிர்ப்பு திறனை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ளவும். விதைத்த 30, 45, 60 நாட்களில் (DAS) ஃப்லோனிகமிட் மற்றும் தண்ணீரை @ 1:20 விகிதத்தில் தண்டில் பயன்படுத்துவது குறித்து திட்டமிடலாம். பிஃப்ரோனில் 2 மிலி அல்லது தியாமெத்தோக்ஸ்சாம் @ 0.2 கிராம் அல்லது ஃப்லோனிகமிட் @ 0.3 கிராம் அல்லது அசெடாமிப்ரிட் @ 0.2 கிராம் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு) ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். இருப்பினும், இந்த இரசாயனங்கள் இரைப்பிடித்துண்ணிகள், ஒட்டுண்ணிகள் மற்றும் பூந்துகள் சேர்ப்பிகள் ஆகியவற்றின் மீது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.

இது எதனால் ஏற்படுகிறது

செடிப்பேன்கள் நீண்ட கால்களையும், உணர்கொம்புகளையும் கொண்ட சிறிய, மென்மையான உடலையுடைய பூச்சிகளாகும். இவற்றின் அளவு 0.5 முதல் 2 மிமீ வரையிலானது. இவற்றின் இனத்தைப் பொறுத்து, உடலின் நிறம், மஞ்சள், பழுப்பு, சிவப்பு அல்லது கருப்பாக இருக்கும். பொதுவானதான இறகற்ற வகைகளிலிருந்து, இறகுகள் கொண்டவை, மெழுகு போல் வழுவழுப்பானவை, புசுபுசுவென்று இருக்கும் வகைகள் என்று அவற்றின் தோற்றம் வேறுபடுகிறது, அவை வழக்கமாகத் தடித்த இலைகளுக்கு அடிப் பகுதியிலும், தளிர்களின் நுனிகளிலும் கொத்தாகக் குடியேறி அவற்றையே உணவாக்கியும் கொள்கின்றன. இவை, மென்மையான தாவரத் திசுக்களை துளைத்து திரவங்களை உறிஞ்சி எடுக்க, நீண்ட வாய் பாகங்களை பயன்படுத்துகின்றன. குறைந்த எண்ணிக்கையிலிருந்து மிதமான எண்ணிக்கை வரையில் இருந்தால், இந்தப் பூச்சிகள் பயிர்களுக்கு பொதுவாக தீங்கு விளைவிப்பதில்லை. ஆரம்ப படையெடுப்புக்குப் பிறகு, வசந்த காலப் பிற்பகுதியிலோ கோடைக்கால ஆரம்பத்திலோ, செடிப்பேன்களின் எண்ணிக்கை பொதுவாக இயற்கை எதிரிகளால் இயல்பாகவே குறைந்துவிடுகிறது. பல இனங்கள் தாவர வைரஸ்களைச் சுமப்பதன் மூலம் மற்ற நோய்கள் வருவதற்கு வழிவகுக்கின்றன.


தடுப்பு முறைகள்

  • வயல்களைச் சுற்றி அதிக எண்ணிக்கையில் பல்வேறு வகையான தாவரங்களை பராமரிக்கவும்.
  • முந்தைய பயிரிடலின் தாவர குப்பைகளை அகற்றிவிடவும்.
  • செடிப்பேன்கள் படையெடுப்பைத் தடுக்க அதனை விரட்டி அடிக்கக்கூடிய தழைக்கூளங்களைப் பயன்படுத்தவும்.
  • நோய்கள் அல்லது நோய்ப்பூச்சிகள் ஏதேனும் தென்படுகிறதா என்று அனுமானிக்க வயல்களைத் தொடர்ந்து கண்காணித்து, அதன் தீவிரத்தை மதிப்பிடவும்.
  • பாதிக்கப்பட்ட தாவர பாகங்களை அகற்றிவிடவும்.
  • வயல்களிலும், வயல்களைச் சுற்றியுள்ள பகுதியிலும் களைகள் இருக்கிறதா என சோதிக்கவும்.
  • தண்ணீரையோ உரத்தையோ அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.
  • ஒட்டும் பட்டைகள் கொண்டு செடிப்பேன்களை பாதுகாக்கும் எறும்பு கூட்டங்களைக் கட்டுப்படுத்தவும்.
  • கவிகைகளின் காற்றோட்டத்திற்கு ஆதரவாக உங்கள் மரங்களின் கிளைகளை சீர்திருத்தவும் அல்லது அடிப்புற இலைகள் அல்லது தாவரங்களின் அடிப்பாகத்தை அகற்றவும்.
  • சாத்தியமானால், தாவரங்களைப் பாதுகாக்க வலைகளைப் பயன்படுத்தவும்.
  • நன்மை பயக்கும் பூச்சிகளைப் பாதிக்காக்க பூச்சிக்கொல்லி உபயோகத்தைக் கட்டுப்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க