ஆலிவ்

ஆலிவ் மொட்டு சிலந்திப்பேன்

Oxycenus maxwelli

சிலந்திப்பேன்

சுருக்கமாக

  • வசந்த காலத்தில் அரிவாள் வடிவ இலைகள் மற்றும் இறந்த தாவர மொட்டுகள்.
  • பூ மொட்டுகளின் நிறமாற்றம், மலர் வெடிப்பு, மஞ்சரி சிதைவு மற்றும் தளிர்களின் வளர்ச்சி குறைதல்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
ஆலிவ்

ஆலிவ்

அறிகுறிகள்

ஆலிவ் சிலந்திப்பேன்கள் சதைப்பற்றுள்ள தண்டுகள், மொட்டுகள் மற்றும் இலைகளின் மேற்பரப்பை உண்கின்றன, இது வளரும் திசுக்களை சேதப்படுத்துகின்றன. இந்த சிலந்திப்பேன்களின் தாக்குதலின் அறிகுறிகளில் இலைகளில் புள்ளிகள் இருப்பது, இலையின் நிறமாற்றம் மற்றும் நடுப்பகுதி நெடுகிலும் சுருண்டு அவை அரிவாளின் வடிவத்தைக் கொடுப்பது ஆகியன அடங்கும். வசந்த காலத்தில் தாவர மொட்டுகள் இறந்துவிடுதல், பூ மொட்டுகளின் நிறமாற்றம், பூக்கள் வெடித்தல் மற்றும் சிதைவு மற்றும் தளிர்களின் வளர்ச்சி குறைதல் ஆகியவை தொற்றுநோயின் மற்ற அறிகுறிகளாகும். இளம் இலைகளின் கணுவிடைப்பகுதிகள் தவறான வடிவத்தை ஏற்படுத்தி, தொலைவில் இருந்து பார்க்கும் போது ‘சூனியக்காரியின் விளக்குமாறு’ போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பூச்சி பொதுவாக ஒரு பெரிய பிரச்சனை அல்ல, ஏனெனில் ஆலிவ் மரம் தொற்றுநோயைத் தாங்கி தானாகவே குணமடையும் தன்மையினைக் கொண்டது. இருப்பினும், மிக இளம் ஆலிவ் மரங்களில், கடுமையான தொற்று, தாவரத்தின் வளர்ச்சியை கடுமையாகத் தடுக்கலாம்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

கரும்புள்ளி வண்டுகள் மற்றும் சில வகையான வேட்டையாடும் பூச்சிகள் ஓ.மாக்ஸ்வெல்லியை உண்ணும், இவற்றை பழத்தோட்டங்களில் அறிமுகப்படுத்தப்படலாம். பரந்த அளவிலான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி அவற்றைக் கொல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தோட்டக்கலை கோடைகால எண்ணெய்களைப் பயன்படுத்தலாம், அவை ஈரமான கந்தகத்தை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளை விட இயற்கை எதிரிகளுக்கு குறைவான இடையூறு விளைவிக்கும், ஏனெனில் இவை குறுகிய எஞ்சிய நேரத்தைக் கொண்டுள்ளன. வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போது, நன்கு நீர் பாய்ச்சப்பட்ட ஆலிவ் மரங்களுக்கு எண்ணெய் தடவ வேண்டும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் இருந்தால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். அதிக எண்ணிக்கை காணப்பட்டால், மொட்டுகள் பூக்கும் முன் ஆலிவ் மரங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். ஈரமான கந்தகம் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது, ஆனால் மரத்திற்கு சேதம் 32° செல்சியஸ் வெப்பநிலைக்கும் அதிகமான சூழ்நிலையில் ஏற்படலாம். அதிக வெப்பநிலையைப் பொறுத்தவரையில், ஈரமான கந்தகத்தை விட கந்தகத் தூளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது. கந்தகத்தை தெளிப்பது மற்றொரு வழியாகும்.

இது எதனால் ஏற்படுகிறது

ஆக்ஸிசெனஸ் மாக்ஸ்வெல்லி என்ற ஆலிவ் மொட்டு சிலந்திப்பேன்களின் உண்ணும் செயல்பாட்டினால் அறிகுறிகள் ஏற்படுகின்றன. இது சாதாரண கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறிய உயிரினம் (0.1-0.2 மிமீ). இது மஞ்சள் நிறத்தில் இருந்து அடர் பழுப்பு நிறம் வரையில் இருக்கும், மெதுவாக நகரும், மற்றும் ஆப்பு வடிவ, தட்டையான உடலைக் கொண்டிருக்கும், இது இந்தக் குடும்பத்தில் உள்ள பல இனங்களிடத்தில் காணப்படும் பொதுவான தோற்றமாகும். இவை ஆலிவ் தோட்டங்களில் உள்ளவற்றை மட்டுமே உண்பதால், அவற்றின் வாழ்க்கைச் சுழற்சி ஆலிவ் மரத்துடன் நெருங்கிய தொடர்புடையது. வசந்த காலத்தில், இவை இனப்பெருக்கம் செய்வதற்காக புதிய இலைகள் மற்றும் மொட்டுகளுக்குச் செல்லும் மற்றும் பெண் பூச்சிகள் அங்கு சுமார் 50 முட்டைகளை இடும். வளர்ந்து வரும் முட்டைப்புழுக்கள் மற்றும் இளம் பூச்சிகள் பூக்களை கூட்டமாக உண்டு, தண்டுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம், இதனால் பூக்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன்கூட்டியே உதிர்ந்துவிடும். பின்னர், பூச்சிகள் இளம் பழங்களைத் தாக்கி நிறமாற்றத்தை ஏற்படுத்தும், மேலும் அவை உண்ணும் இடங்களைச் சுற்றியுள்ள திசுப்பகுதிகள் சிதைந்துப் போகும்.


தடுப்பு முறைகள்

  • ஆலிவ் மொட்டு சிலந்திப்பேன்களின் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என தோட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • ஆலிவ் மொட் சிலந்திப்பேன்களின் கொள்ளையடிக்கும் உயிரினங்களை பாதிக்காத வகையில் பூச்சிக்கொல்லிகளை அளவாகப் பயன்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க