நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

நாரத்தை மொட்டு சிலந்திப்பேன்

Aceria sheldoni

சிலந்திப்பேன்

சுருக்கமாக

  • கிளைகள் மற்றும் மஞ்சரிகளில் உள்ள வளரும் புள்ளிகளுக்கு ஏற்படும் சேதங்களானது இலைகள், பூக்கள் மற்றும் இளம் தளிர்களில் உருக்குலைவை ஏற்படுத்துகிறது.
  • கிளைகளில் ரோஜா இதழடுக்கு போன்ற அமைப்பு தோன்றும்.
  • மரங்களின் வளர்ச்சி குன்றுதல் மற்றும் பழங்கள் பழுப்பது குறைதல் போன்றவை ஏற்படும்.
  • பாதிக்கப்பட்ட பழங்கள் கடுமையாக உருக்குலைந்து, இளம் மஞ்சள் முதல் வெள்ளி போன்ற நிறமாற்றத்தை ஏற்படுத்தும்.
  • அனைத்து நாரத்தை இனங்களும் பாதிக்கப்படும், ஆனால் இதன் சேதங்கள் எலுமிச்சையில் மிக மோசமாக இருக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

இவற்றின் பெயர் குறிப்பிடுவது போல, இந்த சிலந்திப்பேன்கள் பெரும்பாலும் இலை மற்றும் பூ மொட்டுகளைத் தாக்குகின்றன. கிளைகள் மற்றும் மஞ்சரிகளில் உள்ள வளரும் புள்ளிகளுக்கு ஏற்படும் இறப்பு, இலைகள், பூக்கள் மற்றும் இளம் தளிர்களில் உருக்குலைவை ஏற்படுத்துகிறது. கிளைகளில் ரோஜா இதழடுக்கு போன்ற அமைப்பு தோன்றும். மரங்களின் வளர்ச்சி குன்றி, பழங்கள் பழுப்பது குறைவதற்கு வழிவகுக்கும். பாதிக்கப்பட்ட பழங்கள் கடுமையாக உருக்குலைந்து, இள மஞ்சள் முதல் வெள்ளி போன்ற நிறமாற்றம் ஏற்படும், மற்றும் காயங்கள் உள்ள பகுதிகளானது பூஞ்சை நோய் தொற்றுக்கு நுழைவு வாயிலாக அமையும். இவை வளர்ச்சியின் ஆரம்ப நிலைகளிலேயே கீழே விழுந்துவிடக்கூடும். முதிர்ச்சி அடைந்த பழங்கள் குறைந்த சந்தை மதிப்பைக் கொண்டிருக்கும், ஏனெனில் அவை குறைவான சாற்றை உற்பத்தி செய்வதுடன் மற்றும் குறைந்த தரத்தினைக் கொண்டிருக்கும். இந்த சிலந்திப்பேன்கள் அனைத்து நாரத்தை இனங்களையும் தாக்கும், ஆனால் இதன் சேதங்கள் எலுமிச்சையில் மிக மோசமாக இருக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஆனால் பூச்சிகள் பொதுவாக இயற்கை எதிரிகளால் கட்டுப்படுத்தப்படுவதில்லை. இறைப்பிடித்துண்ணிப் பேன்களை பயன்படுத்துவதன் மூலம் மொட்டுச் சிலந்திப்பேன்களை நன்கு கட்டுக்குள் வைத்திருக்க முடியும். தொற்றுநோயை நன்கு சமாளிக்க உயிரியல் பூச்சிக்கொல்லிகள் சிறந்த வழிமுறையாகும். குறைவான நோய்த் தொற்று இருக்கும் சூழலில் 2% செறிவுள்ள கந்தகத்தைக் கொண்டிருக்கும் கரைசல்கள், மொட்டு சிலந்திப் பேன்களை நன்கு கட்டுப்படுத்த உதவும். இந்த சிகிச்சையை 30° செல்சியசிற்கும் மேலான வெப்பநிலையில் பயன்படுத்தக் கூடாது மற்றும் சிகிச்சைகளுக்கு இடையில் 4 வார இடைவெளி விட வேண்டும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப் பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். மொட்டுக்கள் மீதான பூச்சிகளின் சேதம் தாவரங்களுக்கு லேசான தீங்கு விளைவிக்கும் எண்ணெய்களை இலைத்திரள்கள் மீது தெளிப்பதன் மூலம் குறைக்கலாம். சிறந்த பலனை அடைய அபாமெக்ட்டின், ஃபென்புடடின் ஆக்சைடு, குளோர்பைரிஃபோஸ், ஸ்பிரோடெட்ராமாட், ஃபென்பைராக்சிமேட் அல்லது அதன் கலவைகள் எண்ணெய்யுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகளானது அசரியா செல்டோனி என்னும் நாரத்தை மொட்டு சிலந்திப்பேன்களால் ஏற்படுகிறது. இவை சாதாரண கண்களுக்குத் தெரியாது ஆனால் நாரத்தை தோட்டங்களில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தி மற்றும் விளைச்சலைக் குறைக்கும். பூதக்கண்ணாடியால் பார்க்கும்போது, சிறிய, புழு வடிவ, பொதுவாக பாலாடை வெள்ளை அல்லது கண்ணாடி போன்ற சிலந்திப்பேன்கள் மொட்டுகளில் காணப்படும். குளிர் காலங்களில், மொட்டுக்களின் காம்புகளுக்கு அடியில் இவை பாதுகாப்பைத் தேடும். வசந்த காலத்தில், நிலைமைகள் சாதகமானதாக இருக்கும்போது, பெண்பூச்சிகள் வெளியாகி மற்றும் புதிதாக வளரும் மொட்டு செதில்களில் தனது முட்டைகளை இடும். இளம் உயிரிகள் கிளைகள் மற்றும் மஞ்சரிகளில் உள்ள வளரும் புள்ளிகளைத் தாக்கும், இதனால் இளம் இலைகள், மலர் மொட்டுகள் மற்றும் தண்டுகளில் உருக்குலைவு ஏற்படுத்தும். இதன் விளைவாக, மரங்களின் வளர்ச்சி குன்றும். பழங்களின் தொகுப்பு சரியில்லாமல் கூட போகலாம், மேலும் பழங்கள் கடுமையாக உருக்குலைந்துபோகும். வெதுவெதுப்பான, வறண்ட காலநிலையின் கீழ் இதன் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கலாம் மற்றும் இந்த சூழ்நிலையில் லேசான நோய்தொற்றுகள் கூட கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.


தடுப்பு முறைகள்

  • ஏதேனும் உருக்குலைவுகள் தென்படுகிறதா என தோட்டங்கள், கிளைகள் மற்றும் புதிதாக வளருபவற்றைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • நன்மை பயக்கும் பூச்சிகளைப் பாதிக்காத வகையில் பூச்சிக்கொல்லிகளின் உபயோகத்தைக் கட்டுப்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க