முட்டைக்கோசு

முட்டைக்கோஸின் பாக்டீரியா மென் அழுகல் நோய்

Pectobacterium carotovorum subsp. carotovorum

நுண்ணுயிரி

சுருக்கமாக

  • நீரில் மூழ்கிய, மென்மையான புள்ளிகள்.
  • மகிந்த நிறமாற்றமடைந்த தாவரத் திசு.
  • இலைகள், தண்டுகள் மற்றும் வேர்களில் பாதிப்பு.

இதிலும் கூடக் காணப்படும்

2 பயிர்கள்
முட்டைக்கோசு
பூக்கோசு.

முட்டைக்கோசு

அறிகுறிகள்

ஆரம்பத்தில் தண்ணீரில் நனைந்த புள்ளிகள் உருவாகும். பின்பு அவை பெரிதாகி, மூழ்கி மென்மையாக மாறும். புள்ளிகளுக்கு அடியில் உள்ள தாவரத் திசுக்கள் க்ரீம் நிறத்திலிருந்து கருப்பு நிறமாக மாறி, மென்மையாக மற்றும் நிறமற்றதாகிவிடும். கடுமையான நோய்த்தொற்றின் கீழ் இலைகள், தண்டுகள் மற்றும் வேர்கள் முற்றிலும் அழுகலாம். மேலும் ஒரு விதமான வாடை வருவதையும் கவனிக்கலாம்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்நோய்க்கு எதிராக எந்த உயிரியல் கட்டுப்பாட்டு முறையும் இன்றுவரை நமக்குத் தெரியவில்லை. நோய்க்கான அறிகுறிகளின் நிகழ்வு அல்லது ஈர்ப்புத்தன்மையைக் குறைக்க ஏதேனும் வெற்றிகரமான முறை உங்களுக்குத் தெரிந்தால், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். பாக்டீரியாவை குணப்படுத்த முடியாது என்பதால் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தடுப்பு முறையாகவே மேற்கொள்ளப்படுகின்றன. பாக்டீரியா நோய்க்கிருமியைத் தடுக்கவும் அடக்கவும் செப்பு அடிப்படையிலான பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தவும். சிப்ரோஃப்ளோக்ஸசின் நோயை நன்கு தடுக்கிறது.

இது எதனால் ஏற்படுகிறது

மண் மற்றும் பயிர் எச்சங்களில் வாழும் பெக்டோபாக்டீரியம் கரோடோவோரம் என்ற பாக்டீரியாவால் இச்சேதம் ஏற்படுகிறது. கருவிகள், பூச்சிகள், ஆலங்கட்டி மழையினால் ஏற்படும் சேதம் அல்லது இயற்கை துளைகள் மூலம் ஏற்படும் காயங்கள் ஊடாக இது பயிருக்குள் நுழையும். நோய்க்கிருமி பூச்சிகள், கருவிகள், பாதிக்கப்பட்ட தாவரப் பொருட்கள், மண் அல்லது அசுத்தமான நீர் ஆகியவற்றை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதன் மூலம் இந்நோய் பரவுகிறது. ஈரமான வானிலை மற்றும் 25-30 டிகிரி செல்சியஸ் வெதுவெதுப்பான வெப்பநிலையில் இது ஒரு பெரிய பிரச்சனையாக மாறும், மேலும் தாவரங்கள் கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்படும் போது இது இன்னும் கடுமையாகும். இச்சேதம் வயலிலும் சேமிப்பகத்திலும் ஏற்படும்.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்கள் கிடைத்தால் பயன்படுத்தவும்.
  • நல்ல காற்று வடிகால் அனுமதிக்கும் வகையில் வரிசைகளில் நோய் இல்லாத மற்றும் ஆரோக்கியமான நடவுப் பொருட்களை நடவு செய்யவும்.
  • காயங்களைக் குறைக்க உங்கள் தாவரங்களை கவனமாகக் கையாளவும்.
  • உங்கள் கருவிகளை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யவும்.
  • மேல்நிலை நீர்ப்பாசனத்தைத் தவிர்க்கவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றி அழிக்கவும்.
  • வறண்ட காலநிலையில் மட்டுமே அறுவடை செய்யவும்.
  • உங்கள் அறுவடை சேமிப்பிற்குச் செல்வதற்கு முன் அதைச் சரிபார்க்கவும்.
  • உங்கள் சேமிப்பிடத்தை செம்பு அடிப்படையிலான கரைசல்களைக் கொண்டு சுத்தம் செய்து, உச்சிப்பகுதியில் காயம் ஏற்படாமல் இருக்க வைக்கோல் அல்லது காகிதத்தைப் பயன்படுத்துங்கள்.
  • அறுவடைக்குப் பிறகு தாவர எச்சங்களை அகற்றி அழிக்கவும்.
  • மூன்று ஆண்டுகளுக்கு புரவலன் அல்லாத பயிர்களைக் கொண்டு பயிர் சுழற்சி செய்வதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க