மக்காச்சோளம்

மக்காச்சோளத்தின் பதர் போன்ற குட்டைப் பைட்டோபிளாஸ்மா நோய்

Phytoplasma asteris

நுண்ணுயிரி

சுருக்கமாக

  • இலை ஓரங்களில் வெளிறிய சோகை மற்றும் முதிர்ந்த இலைகளில் சிவப்பு நிறமாற்றம் போன்றவை காணப்படும்.
  • தாவரங்கள் அசாதாரணமான எண்ணிக்கைகளையுடைய தளிர்களுடன் குட்டையாக, பதர் போன்ற தோற்றத்துடன் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மக்காச்சோளம்

அறிகுறிகள்

அறிகுறிகளின் தீவிரத்தன்மை மக்காச்சோளத்தின் வகைகள் மற்றும் நோய்த்தாக்கத்தின் நிலைகளைச் சார்ந்து இருக்கும். பொதுவாக, இலைச் சுருள்களின் ஓரங்கள் மஞ்சள் நிறமாகுதல் மற்றும் முதிர்ந்த இலைகளின் சிவப்பு நிறமாற்றம் ஆகியவை மக்காச்சோளத்தின் பி.ஆஸ்டெரிஸ் என்பவற்றின் முதல் அறிகுறிகளாகும். நோய் அதிகரிக்கையில் இந்த அறிகுறிகள் தீவிரமடைந்து, இறுதியாக இலைகளின் ஓரங்கள் அடிக்கடி கிழிந்த அல்லது கந்தையான தோற்றத்தைக் கொண்டிருக்கும். கூடுதல் காது தளிர்கள் மற்றும் பக்கக்கன்றுகள் நிறைய தோன்றுவதால், தாவரங்கள் பதர் போன்ற தோற்றத்துடன் காணப்படும். கணுவிடைப்பகுதிகள் கட்டையாகுதல் மற்றும் குன்றுதல் போன்றவை வெளிப்படையாகக் காணப்படும். ஆண் மஞ்சரிகள் பெரும்பாலும் உருவாகாது அல்லது வெறுமையாக இருக்கும். தாவரங்களில் காதுகள் இருக்காது அல்லது உயிர்மப்பெருக்க வளர்ச்சி இருக்கும், இது குறைவான தானியங்கள் அல்லது தானியங்களையே உற்பத்தி செய்யாது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஒட்டுண்ணிப் பூஞ்சை மெட்டார்ஹீலியம் அனிசோப்லியே, பெளவேரியா பாசியானா, பேஸிலோமைசெஸ் ஃபியூமோசோரோஸியஸ் மற்றும் வெர்டிசிலியம் லெகானி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பேக்டீரியாக் கொல்லிகள் இலைத் தத்துப்பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. அனாக்ரஸ் அடோமஸ் என்னும் ஒட்டுண்ணிப் பூச்சிகளும் இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப் படுகின்றன. பொன்வண்டுகள் மற்றும் கண்ணாடி இறக்கைப் பூச்சிகள் போன்ற நன்மை பயக்கும் பூச்சிகளும் இந்த நோய்ப் பூச்சியின் முட்டை மற்றும் முட்டைப்புழுக்களை விருப்பமாக உண்ணக்கூடியவை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறைகளை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். நேரடி பூச்சிக்கொல்லி கார்பரில் அடிப்படையிலான தயாரிப்புகள் இலைத் தத்துப்பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருக்கத் திறன்மிக்க வகையில் செயல்படுகிறது. இது மக்காச்சோளத் தாவரங்கள் இளமையாக இருக்கும்போது, நோய் தாக்கத்தை பெரிதும் குறைக்கிறது. இருப்பினும், மக்காச்சோளம் பயிர் செய்யும் பெரும்பாலான பகுதிகளில், இந்த நடைமுறை பெரும்பாலும் பொருளாதார ரீதியாக சாத்தியமாக இல்லை.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகளானது பைட்டோபிளாஸ்மா ஆஸ்டெரிஸ் என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது பல்வேறு இலைத் தத்துப்பூச்சிகளால் இயற்கையாக பரவக்கூடிய மக்காச்சோளத்தின் நோய்க்கிருமியாகும். அவற்றுள் மேக்ரோஸ்டெலெஸ் குவாட்ரிலீனியேட்டஸ் அடங்கும். இது பாதிக்கப்பட்ட தாவரப் பொருள் (நாற்றுகள் அல்லது பதியன்கள்) வழியாகவும் பரவுகிறது, ஆனால் விதைகளால் அல்ல. இந்த இலைத் தத்துப்பூச்சிகள் பல புரவலன் தாவரங்களுக்கும் இந்த நோய்க்கிருமியைப் பரப்புகின்றன. இவற்றுள் ஒட்டுண்ணி "டாட்டெர்" (கஸ்குடா எஸ்பிபி.). அதிக வெப்பநிலை இந்த அறிகுறிகள் இன்னும் மோசமடைவதற்குக் காரணமாக இருக்கிறது. குளிர்ச்சியான வானிலை குறைந்த பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்தும் அல்லது பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தாது. ஆரம்பகாலத்தில் ஏற்படும் நோய்த்தொற்றும் அறிகுறிகளை இன்னும் மோசமடையச் செய்யும் மற்றும் விளைச்சலிலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்புத் திறன் அல்லது சகிப்புத்தன்மை உடைய வகைகள் கிடைக்கப்பெற்றால், அவற்றைப் பயன்படுத்தவும்.
  • நடவு செய்வதற்கு சான்றளிக்கப்பட்ட ஆதாரங்களில் இருந்து பெறப்படும் ஆரோக்கியமான தாவரப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தவும்.
  • வருடம் முழுவதும் மக்காச்சோளத்தை பயிர் செய்ய வேண்டாம்.
  • உலர் பருவத்தில் நீர்ப்பாசனம் கொண்டு மக்காச்சோளத்தை நடவு செய்வதைத் தவிர்க்கவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் பாதிக்கப்பட்டத் தாவரங்களை அகற்றவும்.
  • வயல் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள களைகளையும் முழுமையாகக் கட்டுப்படுத்தவும்.
  • நோய்ப்பூச்சிக் காரணிகளின் வாழ்க்கைச் சுழற்சியைக் கட்டுப்படுத்த, பல வாரங்களுக்கு அல்லது பல மாதங்களுக்கு வயல்களைத் தரிசாக வைத்திருக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க