Pseudomonas savastanoi pv. glycinea
நுண்ணுயிரி
பருவத்தின் ஆரம்பத்தில் ஏற்படும் நோய்த்தொற்றானது வித்திலைகளின் ஓரங்களில் காணப்படும் பழுப்பு நிறப் புள்ளிகள் மூலம் வகைப்படுத்தப் படுகின்றன. வளரும் பகுதிகள் பாதிப்படைந்தால், இளம் தாவரங்களின் வளர்ச்சிக் குன்றி, இறந்து போகக்கூடும். பருவத்தின் பிந்தைய பகுதியில் பாதிக்கப்பட்டத் தாவரங்களின் இலைகளில் சிறிய மஞ்சள் நிறம் முதல் பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். பொதுவாக, முதிர்ந்த இலைகளை விட இளம் இலைகள் அதிகம் பாதிக்கப்படும், அறிகுறிகளானது குறிப்பாக நடுத்தரம் முதல் மேல்புறக் கவிகைகளில் காணப்படும். காலப்போக்கில், இந்தப் புள்ளிகள் இணைவதால், இவை வெவ்வேறு அளவுகளில் கரும் பழுப்பு நிறத்தில், ஒழுங்கற்றது முதல் கோணவடிவிலான காயங்களாக மாறும். காயங்களைச் சுற்றியிருக்கும் நீர்த் தோய்த்தத் திசுக்களின் முனையைச் சுற்றிலும் மஞ்சள்-பச்சை நிறத்தில் "ஒளிவட்டம்" தோன்றும். காயத்தின் மையப்பகுதி உலர்ந்து, இறுதியாக விழுந்து, இலைத்திரள்களுக்குக் கிழிந்த தோற்றத்தைக் கொடுக்கும். நெற்று உருவாகும் நிலையில் நோய்த்தொற்று ஏற்பட்டால், இந்தக் காயங்கள் நெற்றுகளிலும் ஏற்பட்டு, அவற்றுக்குச் சுருங்கிய, நிறமிழந்த தோற்றத்தை அளிக்கும். இருப்பினும், விதைகளில் பொதுவாக எந்தவித அறிகுறிகளும் தென்படாது.
சோயாமொச்சையின் பாக்டீரியா கருகல் நோயின் கட்டுப்பாட்டிற்குச் செப்புப் பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தலாம். ஆனால் அவை திறன் மிக்க வகையில் செயல்பட நோய்ச் சுழற்சியின் ஆரம்பத்திலேயே அவற்றைப் பயன்படுத்த வேண்டும், அதாவது, முதல் அறிகுறிகள் தென்பட்டவுடனேயே அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். சோயாமொச்சையின் பாக்டீரியா கருகல் நோயின் கட்டுப்பாட்டிற்கு செப்புப் பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தலாம், ஆனால் அவை திறன் மிக்க வகையில் செயல்பட நோய்ச் சுழற்சியின் ஆரம்பத்திலேயே அவற்றைப் பயன்படுத்த வேண்டும். இருப்பினும், பூஞ்சைக் கொல்லிகள் பெரும்பாலும் இந்த நோய்க்கிருமிக்கு எதிராக செயல்படாததால், தனிப்பட்ட ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை நடைமுறைகளைப் பின்பற்றுவது பரிந்துரைக்கப்படுகிறது.
பாக்டீரியா கருகல் நோயானது சூடோமோனாஸ் சவஸ்டனோய் என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது விதை மூலம் பரவும் நோயாகும், மேலும் இது வயலில் உள்ள பயிர்க் குப்பைகளில் குளிர்காலத்தைச் செயலற்ற முறையில் கழிக்கும். நாற்று நிலையில் ஏற்படும் ஆரம்ப நோய்த் தொற்றானது வழக்கமாக அசுத்தமான விதைகளின் அடையாளம் ஆகும். முதிர்ந்த தாவரங்களில், ஆரம்ப நோய்த் தொற்றானது பொதுவாக, செயலற்ற பாக்டீரியாக்கள் காற்று அல்லது மழைத்துளி மூலம் தாவரக் குப்பைகளில் இருந்து கீழ்ப்புற இலைகளுக்கு பரவும்போது ஏற்படுகிறது. ஈரமான இலைப் பரப்பு நோய்க்கிருமியின் வளர்ச்சியை ஆதரிக்கும், சில கட்டங்களில் காயங்கள் அல்லது இலைத் துளைகள் மூலம் இது திசுக்களினுள் நுழையும். மழை மற்றும் காற்றானது தாவரங்களுக்கு இடையே அல்லது தாவரங்களுக்குள் இரண்டாவது முறை பரவுவதற்கு ஏதுவாக இருக்கும். குளிர்ந்த (20-25 டிகிரி செல்சியஸ்), ஈரமான மற்றும் காற்றோட்டமான வானிலை (புயல்மழை) இந்த நோய்க்கு ஏதுவானது மற்றும் சூடான, வறண்ட காலநிலை இந்த நோய் ஏற்படுவதைத் தடுக்கும்.