Pectobacterium carotovorum subsp. carotovorum
நுண்ணுயிரி
இலைகளில் அடர் நிற நரம்பு திசுக்கள் மற்றும் சிதைந்த பகுதிகளாக ஆரம்பகால அறிகுறிகள் தோன்றும். நீர் உறிஞ்சிய மற்றும் நீர் தேங்கியது போன்ற சிதைவுகள் தோன்றும், பின் அவை தண்டுகள்,கனிகள் மற்றும் கனிகளின் மஞ்சரித்தண்டுகளில் விரைவாக பரவும். நோய் பரவும்போது, உலர், கரும்பழுப்பு அல்லது கருமையான சொறி போன்ற பாதிப்பு தண்டுகளில் உருவாகும். இது பின்னர் கிளைகள் முறிவதை ஏற்படுத்தும். இறுதியில் கனி முழுவதும், நீர் போன்று, மிருதுவாக, குறைந்த எடை உடையதாக மாறிவிடும். செடிகளில், நீர் நிரம்பிய பைகளைப் போல அவை தொங்கிக் கொண்டிருக்கும். பொதுவாக, பாதிக்கப்பட்ட திசுக்களில் இருந்து பாக்டீரியா கசிவுகள் ஏற்படும், அத்துடன் துர்நாற்றமும் வீசும். பாதிக்கப்பட்ட செடியானது வதங்கிய நிலைக்கு மாறி, பின்னர் அழிந்துவிடும்.
மன்னிக்கவும், பெக்டோபாக்டீரியம் காரோடோவோரம் என்றழைக்கப்படும் காரோடோவோரம் எனும் பாக்டீரியா நோய்க்கு தற்போது எங்களிடம் எவ்வித மாற்று சிகிச்சை முறைகளும் இல்லை. எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதன் மூலம் இதுகுறித்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த நோயினைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஏதேனும் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துகொண்டு பிறருக்கும் உதவவும். உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். நோய் பாதிப்பு அதிகமாகல் தடுக்க, விதைகளுக்கு மற்றும் அறுவடை செய்யப்பட்ட கனிகளுக்கு சோடியம் ஹைப்போகுளோரைட் கரைசல்கள் கொண்டு இரசாயன சிகிச்சைகள் அளிப்பது பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக, ஒரு சதவீதம் சோடியம் ஹைப்போகுளோரைட் (பிளீச்) கரைசலில், 30 வினாடிகள் விதைகளை வைத்து பின்னர் தூய நீரினால் அலசிக் கழுவலாம்.
மண் வழியே பரவும் பாக்டீரியாக்களே இந்நோய்க்கு காரணம் ஆகும் மற்றும் இவை சுற்றுசூழலில் எங்கும் காணப்படும். அவை மேற்பரப்பு நீர் மற்றும் மண் ஆகியவற்றுடன் தொடர்புடையவை. வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான வானிலையானது நோய்த் தொற்றுக்கு ஏதுவான சூழ்நிலையாகும். பயிர்களை கையாளும் போது, பூச்சிகள் கொட்டும்போது மற்றும் வெப்பம் அதிகமாக இருக்கும்போது ஏற்படும் காயங்கள் மூலமாக பாக்டீரியா தாவரத்திற்குள் நுழைகிறது. பெக்டோபாக்டீரியம் காரோடோவோரம் என்றழைக்கப்படும் காரோடோவோரம் எனும் பாக்டீரியா பல பயிர்களை தனது வாழ்வாதரமாகக் கொண்டுள்ளது. அவற்றுள் இனிப்பு உருளை, உருளை, மரவள்ளி, வெங்காயம், முட்டைக்கோஸ், காரட், தக்காளி, பீன்ஸ், பருத்தி, சோளம், காஃபி மற்றும் வாழை போன்றவை அடங்கும்.