மற்றவை

பாக்டீரியா வாடல் நோய்

Ralstonia solanacearum

நுண்ணுயிரி

சுருக்கமாக

  • தாவரங்கள் வாடிப்போகும்.
  • இலைகள் பச்சையாகவே தொடர்ந்து இருக்கும் அத்துடன் தண்டுடன் இணைந்தே இருக்கும்.
  • வேர்கள் மற்றும் தண்டின் அடிப்பாகங்கள் பழுப்பு நிறமாகும்.
  • வேர்கள் சில நேரங்களில் அழுகலாம், வெட்டும்போது மஞ்சள் நிற கசிவுகள் ஏற்படக்கூடும்.

இதிலும் கூடக் காணப்படும்


மற்றவை

அறிகுறிகள்

செடியின் இளம் இலைகள் அதிக வெப்பமான நேரத்தில் வாடும், வெப்பம் குறைவான நேரத்தில் சிறிது மீண்டு வந்து பழைய நிலைக்கு மாற முயற்சிக்கும். சரியான சூழ்நிலை அமையும்போது, வாடல் நோய்த்தாக்கம் அதிகமாகி மொத்த செடியினையும் பாதிக்கும் அத்துடன் நிரந்தரமாக தங்கிவிடும். வாடிய இலைகள் பச்சையாகவே தொடர்ந்து இருக்கும் அத்துடன் தண்டுடன் இணைந்தே இருக்கும். வேர்கள் மற்றும் தண்டின் அடிப்பாகங்கள் அடர் பழுப்பு நிறமாக மாறும். இரண்டாம் நிலை பாக்டீரியாக்களின் தாக்கத்தினால் வேர்கள் அழுகத் தொடங்கும். வெட்டும்போது வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்துடன் பால் போன்ற பொருள் கசியும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

முட்டைக்கோசு வகை இனத்தின் இயற்கை தாவர கொத்துக்களை (பசுந்தாள் உரம்) மண்ணில் செலுத்துவதன் (இயற்கை புகையூட்டல்) மூலம் நோய்கிருமியை கட்டுப்படுத்த முடியும். இதனை மண்ணில் தோண்டி புதைப்பதற்கு முன்னர் தாவர பொருட்களை, இயந்திரத்தினாலோ அல்லது கை மூலமாகவோ அவற்றை மென்பதமாக்கவும் அல்லது வெட்டவும். தாவரத்திலிருந்து பெறப்பட்ட இரசாயனம் திமால் இதே விளைவை கொண்டுள்ளது. சொலனாசியஸ் தாவரத்தின் வேர் அமைப்பில் இருக்கும் எதிர் வினை கொண்ட பாக்டீரியாக்களும் கூட பயனுள்ளதாக இருக்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். இந்த நோயினை ஏற்படுத்தும் கிருமியானது மண் மூலம் பரவுவதால், இந்த நோய்க்கான சிகிச்சையானது சாத்தியமில்லாதது, குறைந்த அளவே பலனளிக்கக் கூடியது அல்லது பலன் ஏதேனும் தராதது.

இது எதனால் ஏற்படுகிறது

நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள் வெகுகாலம் மண்ணில் வாழும் தன்மை கொண்டது, மாற்று புரவலன்கள் அல்லது பாதிக்கப்பட்ட செடியின் மீதமுள்ள பகுதிகளில் பாக்டீரியாக்கள் உயிர்வாழும். இவை பக்கவாட்டு வேர்கள் தோன்றும் போது வேர் அமைப்பில் உள்ள சிதைவுகள் மூலம் உள்ளே நுழையும். உயரும் வெப்பநிலை (30 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை), அதிக ஈரப்பதம் மற்றும் மண்ணின் ஈரம், காரத்தன்மை கொண்ட மண்ணின் ஹைட்ரஜன் அயனிச்செறிவு நோய்க்கு தகுந்தவாறு உள்ள மண் போன்றவை நோய் வளர்ச்சிக்கு சாதகமானவை. கனமான மண்ணில் ஈரம் அதிக நேரம் தேங்கி நிற்கும் காரணத்தினால் அவை மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ரால்ஸ்டோனியா சொலனாசெரமின் ஏதுவான மாற்று புரவலன்கள் தக்காளி, புகையிலை, வாழை மரம் மற்றும் வாழை ஆகும்.


தடுப்பு முறைகள்

  • விரைவில் மீண்டு வருகின்ற செடிகளை பயிரிடவும்.
  • நோய் கிருமிகள் இல்லாத மண், நீர்ப்பாசன வசதி, விதைகள் மற்றும் நாற்றுகள் போன்றவற்றை பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளவும்.
  • செடிகளை பயிரிடும்போது அவற்றிற்குரிய போதுமான அளவில் இடைவெளி விடவும்.
  • சரியான நீர் வடிகால் முறையினைப் பயன்படுத்தவும்.
  • ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு பயிர் சுழற்சியினைக் கையாளவும்.
  • சிறிது அமிலத்தன்மை கொண்ட மண்ணினை, அதாவது ஹைட்ரஜன் அயனிச்செறிவு 6, 0-6, 5 போன்ற அளவில் இருக்கும் மண்ணினைப் பயன்படுத்தவும்.
  • சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறதா என்று கண்காணிக்கவும்.
  • பாதிக்கப்பட்ட செடிகளை களத்தில் இருந்து நீக்கி பிற செடிகளுக்குப் பரவுவதைத் தவிர்க்கவும்.
  • மாசுபட்ட மண்ணிலிருந்து மாசுபடாத மண்ணிற்கு கருவிகளை எடுத்து செல்வதை தவிர்க்கவும்.
  • அடுத்த களத்தில் கருவிகளைப் பயன்படுத்தும் முன்பு பிளீச்சிங்க் பொடி மூலம் சுத்தம் செய்து பயன்படுத்தவும்.
  • பாதிக்கப்பட்ட செடிகள் மற்றும் அவற்றின் மீதமுள்ள பகுதிகளை சேகரித்து எரித்துவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க