கரும்பு

கரும்பு தளிர் வளர்ச்சி குன்றுதல் நோய்

Leifsonia xyli

நுண்ணுயிரி

சுருக்கமாக

  • கரும்பின் தளிர் வளர்ச்சி குன்றும்.
  • குட்டையான கணுக்கள், வெளிறிய மஞ்சள் நிற இலைகளுடன் மெல்லிய தண்டுகள் உருவாகும்.
  • உட்புற வண்ணமிழத்தல் அல்லது சிவப்பு நிற சிதைவுகள் தண்டுகளில் ஏற்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

கரும்பு

அறிகுறிகள்

வெட்டப்பட்ட இடத்தில் இருந்து தளிர் முளைக்கும் பயிர் வகைகளில் இந்நோய் காணப்படும். வளர்ச்சி குன்றுவதை தவிர, எவ்வித அறிகுறிகளும் ஆரம்பத்தில் தெளிவாகத் தெரியாது. குண்டூசியின் தலை போன்ற ஆரஞ்சு நிற பாக்டீரியா புள்ளிகள், உட்புற மென்மையான திசுக்கள் இணைப்புப் பகுதியில் காணப்படும். பின்னர், பயிரின் வளர்ச்சி குன்றுதல், குட்டையான கணுக்களுடன் மெல்லிய தண்டுகள், வெளிறிய மஞ்சள் நிற இலைபகுதி மற்றும் தண்டின் மேல்பகுதியில் விரைவான சுருக்கம் போன்றவை இதன் அறிகுறிகளாக அமையும். சாகுபடி மற்றும் வானிலை இவற்றினைப் பொறுத்து கணுக்கள் மஞ்சள் முதல் சிவந்த பழுப்பு நிறமாக மாறும். இந்த வண்ணமிழப்பு கணுவிடைப்பகுதிகள் வரை செல்வதில்லை. ஈரப்பத அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கக்கூடிய சில பயிர் வகைகள் வாடிப்போகும், மேலும் இலைகளின் விளிம்புகள் மற்றும் ஓரங்களில் சிதைவுகள் ஏற்படலாம். மகசூல் குறைவது மற்றுமொரு அறிகுறியாகும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சிகிச்சைக்கு 1-5 நாட்களுக்கு முன்னரே விதைக்கான கரும்பினை வெட்டிவிடவும். 10 நிமிடங்கள் சூடான நீரில் (50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை) முன் சிகிச்சை அளிக்கவும். அதனைத் தொடர்ந்த நாளில் சூடான நீரில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 2-3 மணி நேரங்கள் சிகிச்சையளிக்கவும். இதன் விளைவாக கரும்பின் முளைப்பு திறன் பாதிக்கக்கூடும்

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். அம்மோனியம் சல்பேட் பயன்படுத்துவதன் மூலம் நோய் பாதிப்பு குறைவதுடன் மட்டுமல்லாமல், மகசூல் அதிகரிக்கும் மற்றும் வெள்ளைச் சர்க்கரை உற்பத்தியும் அதிகரிக்கும். நுண்ணுயிர்கொல்லிகளுடன், 52 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட சூடான நீரில் 30 நிமிடங்கள் வெப்ப நீர் சிகிச்சையளிப்பதன் மூலம் நோய் தாக்கம் குறைவதுடன் மட்டுமல்லாமல், மகசூலும் அதிகரிக்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

மண் அல்லது பயிரின் எஞ்சிய பகுதிகளில் இந்த பாக்டீரியா பல மாதங்கள் உயிர்வாழும் தன்மை கொண்டது. இவை பயிர்களின் காயங்கள் மூலம் மட்டுமே உள்ளே நுழையக் கூடியவை. இந்த பாக்டீரியா இயந்திரங்கள் மூலம் காயங்கள் வழியாக எளிதில் பரவுகிறது.


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமான கரும்புகளை பயிரிடுதல் மூலம் நோயினைத் தடுக்கலாம்.
  • களத்தில் வேலை செய்யும்போது பயிர்களில் காயங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்.
  • அறுவடை முடிந்த பின்னர் எஞ்சியிருக்கும் தாவர பகுதிகளை நீக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க