Xanthomonas alfalfae subsp. citrumelonis
நுண்ணுயிரி
இந்த நோய் முதன்மையாக மூவிலை கொண்ட ஆரஞ்சு மற்றும் அதன் கலப்பினங்களைப் பாதிக்கிறது, எ.கா. எ.கா. நாற்றங்கால் நிலையில் இருக்கும் ஸ்விங்கில் சிட்ருமெலோ. இந்த நோயினால் ஏற்படும் காயங்களானது, பிற வகை ஆரஞ்சுகளில் நாரத்தை சொறி நோயால் ஏற்படும் காயங்களின் தோற்றத்தை ஒத்திருக்கும், ஆனால் இவை உப்பாத, தட்டையான அல்லது மூழ்கிய தோற்றத்தைக் கொண்டிருக்கும். இலைகளில் இவை வட்டவடிவிலான, பழுப்பு நிறத்தில், சிதைந்த மையங்களைக் கொண்டிருக்கும், இவை பெரும்பாலும் வெடித்து அல்லது கீழே விழுந்து, கரடுமுரடான "குண்டடி பட்ட துளை" போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். மேலும் இவை நீர் தோய்த்த ஓரங்கள் மற்றும் பரவலான மஞ்சள் நிற ஒளிவட்டங்களால் சூழப்பட்டிருக்கும். இன்னும் தீவிரமான தசை நலிவுகளால் ஏற்படும் சிதைவுகள் நாரத்தை சொறி நோயை விட அதிகப்படியான நீர் தோய்த்த ஓரங்களைக் கொண்டிருக்கும். காலப்போக்கில், இவை பெரிதாகி மற்றும் இணைந்து, கோணவடிவிலான அல்லது ஒழுங்கற்ற லேசான பழுப்பு நிறத் திட்டுக்களாக மாறும். பாதிக்கப்பட்ட இலைகள் வெளிறிய நிறமாகும் அல்லது இறந்துவிடும் மற்றும் முன்கூட்டியே உதிரக்கூடும்.
மன்னிக்கவும், ஸ்சாந்தொமோனாஸ் அல்ஃபால்ஃபேவுக்கு எதிரான மாற்றுச் சிகிச்சையை நாங்கள் அறியவில்லை. இந்த நோயை எதிர்த்துப் போராட உதவும் வகையில், ஏதேனும் ஒன்றை நீங்கள் அறிந்திருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும். உங்களிடமிருந்து செய்தியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். நாரத்தை பாக்டீரியா புள்ளி நோயைக் கட்டுப்படுத்த முழுமையான வெற்றியை அளிக்கும் திறன் உடைய தெளிப்பான்கள் எதுவும் இல்லை. இந்த நோய் ஏற்படுவதைக் குறைக்க தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் இரசாயன சிகிச்சைகள் ஆகியவற்றின் கலவை அவசியமானதாகும். செம்பு அடிப்படையிலான தெளிப்பான்கள் மட்டும் அல்லது அதனுடன் சேர்த்து நுண்ணுயிர் எதிர்ப்புகள் அல்லது இரசாயன மான்கோசெப் போன்றவற்றை மிதமான அளவில் பயன்படுத்தலாம். இலைகளில் ஏற்படும் சேதங்களையும் மற்றும் பாக்டீரியாவுக்கான எதிர்ப்பு திறன் வளர்ச்சியையும் தவிர்க்க, மருந்துகள் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும்.
இந்த நோய் பாக்டீரியம் ஸ்சாந்தொமோனாஸ் அல்ஃபால்ஃபே என்பவற்றால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியாவில் மூன்று துணை வகைகள் உள்ளன, இவை தனது புரவலன்களுக்கு ஏற்படுத்தும் அறிகுறிகளின் தீவிரத்தன்மையில் மாறுபடும். இவை காற்றுடன் கூடிய மழை, சொட்டும் பனி அல்லது மேல்நிலை நீர்ப்பாசனம் ஆகியவற்றினால் வயல் நாற்றங்கால்களுக்கு இடையே இயற்கையாகப் பரவும். இவை சாதாரண வயல் அல்லது நாற்று நடும் பணிகளின் போது, குறிப்பாக இலைத் திரள்கள் பசுமையாக இருக்கும்போது, இயந்திரத்தனமாக ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்குப் பரவும். இலைகளில் உள்ள நுண்ணிய துளைகள் அல்லது மரப்பட்டைகளில் காணப்படும் துளைகள் இந்த பாக்டீரியாவின் நுழைவு வாயிலாகச் செயல்படுகிறது. இருப்பினும், இளம் மரங்களை தோப்புகளுக்கு மாற்றும்போது, பாக்டீரியா இறந்து, மேலும் அறிகுறிகள் படிப்படியாக மறைந்துவிடுகின்றன. லேசான மழையுடன் கூடிய வெதுவெதுப்பான வெப்பநிலை (14 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை), கடும் பனி மற்றும் கொந்தளிப்பான வானிலை ஆகியவை நோய் வளர்ச்சி மற்றும் பரவலுக்கு மிகவும் உகந்தவை. இதற்கு நேர்மாறாக, வானிலை வெப்பமாக, உலர்ந்து இருக்கும்போது, பாக்டீரியாவின் வளர்ச்சி மற்றும் நோய் தொற்றின் செயல்பாடு குறைந்து காணப்படுகிறது.