அரிசி

பாக்டீரியா இலைக் கோடு

Xanthomonas oryzae pv. oryzicola

நுண்ணுயிரி

சுருக்கமாக

  • அடர் பச்சை, பின்னர் பழுப்பு முதல் மஞ்சள் – சாம்பல், நேரியல் சிதைவுகள் இலைகளில் காணப்படும்.
  • இலைகள் முழுவதும் பழுப்பு நிறமாகும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

நோயின் ஆரம்ப கட்டத்தில் இலைகள் அடர் பச்சை நிற கோடுகளுடன் நீர் தேங்கிய சிதைவுகளைக் கொண்டிருக்கும். இந்த சிதைவுகளின் எண்ணிக்கை அதிகமாகி, பின்னர் மஞ்சள் – ஆரஞ்சு நிறத்தில் இருந்து பழுப்பு நிறமாக மாறும். இந்தச் சிதைவுகளில் ஆம்பர் நிறத்தில் பாக்டீரியா கசிவுகள் காணப்படும். பின்னர், இந்த அறிகுறிகள் பாக்டீரியா இலைக் கருகல் நோயினை ஒத்ததாக இருக்கும். ஆனால், இலைக் கருகல் நோயில் இருப்பது போலன்றி சிதைவுகள் அதிகமான நேரியல் சிதைவுகளாகவும், குறைவான அலை போன்ற வளைவுகளைக் கொண்டதாகவும் இருக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், க்ஸாந்தோமோனாஸ் ஓரைஸே பிவி. ஒரிஜிகோலாவால் ஏற்படும் இந்த நோய்க்கு தற்போது எங்களிடம் எவ்வித சிகிச்சை முறைகளும் இல்லை. எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதன் மூலம் இதுகுறித்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த நோயினைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஏதேனும் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துகொண்டு பிறருக்கும் உதவவும். உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். கடுமையான நோய்த்தொற்றுகள் ஏற்பட்டால், நோயை திறம்பட கட்டுப்படுத்த தாமிரம் அடிப்படையிலான பூஞ்சை கொல்லிகளைப் பயன்படுத்துங்கள். தாமிர பூஞ்சை கொல்லிகளை ஆரம்ப கட்டங்களில் பயன்படுத்தக்கூடாது, தாமதமாக பூக்கும் கட்டத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இது எதனால் ஏற்படுகிறது

நீர்ப்பாசன தண்ணீர் மூலம் பாக்டீரியா பரவுகிறது; மழை, அதிக ஈரப்பதம் மற்றும் உயர் வெப்பநிலை போன்றவை நோய்த்தொற்றுடன் தொடர்புடையதாக உள்ளது. இந்த நோய் குளிர்ந்த அல்லது உலர்ந்த நிலைகளில் வளராது. பாக்டீரியா இலை துளைகள் மற்றும் காயங்கள் வழியே இலைக்குள் நுழைந்து, பல்கி பெருகுகின்றன . இரவு நேரத்தில் உள்ள ஈரப்பதத்தினை பொறுத்து, பாக்டீரியா கசிவுகள் இலைகளின் மேற்பரப்பில் உருவாகும்.


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமான, எதிர்ப்பு திறன் கொண்ட நாற்றுகளை பயிரிடவும்.
  • வயல்களை தூய்மையாக பராமரித்து, தேவையற்ற புரவலன் களைகளை நீக்கவும்.
  • நைட்ரஜன் போன்ற சத்துக்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும்.
  • வயலில் மற்றும் நாற்றுப்பண்ணையில் வடிகால் முறையினை மேம்படுத்தவும்.
  • தரிசு நிலமாக வைத்திருக்கும் காலத்தில் நிலத்தினை உலரவிடுவதின் மூலம் மண்ணில் உள்ள பாக்டீரியா மற்றும் கழிவுகளை அழிக்க முடியும்.
  • கடுமையான நீர்ப்பெருக்கின்போது வயலை வடிய விடவும்.
  • குளிர்காலத்தில் விதைகளை பயிரிடவும், இதனால் நோய்க்காரணிகள் வளராது.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க